Author Topic: ~ 30 வகை குளுகுளு காய்கறி சமையல்! ~  (Read 1958 times)

Offline MysteRy

முள்ளங்கி பராத்தா



தேவையானவை:
துருவிப் பிழிந்த முள்ளங்கி - அரை கப், கோதுமை மாவு - ஒரு கப், பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, சீரகம் - ஒரு சிட்டிகை, கடலை மாவு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், நெய் - தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.

செய்முறை:
துருவிப் பிழிந்த முள்ளங்கியுடன், நெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து நன்கு பிசைந்து பராத்தாவாக திரட்டவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி, பராத்தாவைப் போட்டு, இருபுறமும் நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
இதற்குத் தொட்டுக்கொள்ள தயிர் போதும்.

Offline MysteRy

சுரைக்காய் கீர்



தேவையானவை:
துருவிய சுரைக்காய் - ஒரு கப், மில்க்மெய்ட் - அரை டின், நெய் - 3 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரி, திராட்சை - தலா 25 கிராம்.

செய்முறை:
துருவிய சுரைக்காயை நெய் விட்டு வதக்கி சிறிதளவு நீர் விட்டு குக்கரில் வேகவிட்டு எடுக்கவும். இதனுடன் மில்க் மெய்ட் சேர்த்து  50 மில்லி நீர் விட்டு, சிறிது சூடாக்கி ... வறுத்த முந்திரி - திராட்சை, ஏலக்காய்த்தூள் தூவி இறக்கி... சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறவும்.

குறிப்பு:
மில்க்மெய்டுக்கு பதிலாக அரை லிட்டர் பாலை சுண்டக் காய்ச்சி சேர்த்து, 50 கிராம் சர்க்கரையையும் சேர்த்து இதை தயாரிக்கலாம்.

Offline MysteRy

பீர்க்கங்காய் ரைஸ்



தேவையானவை:
உதிர் உதிராக வடித்த பச்சரிசி சாதம் - ஒரு கப், நறுக்கிய பீர்க்கங்காய் - 2 கப், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (நறுக்கவும்), இஞ்சி, கொத்தமல்லி, பூண்டு, பச்சை மிளகாயை சிறிதளவு எடுத்து அரைத்த விழுது - 2 டீஸ்பூன்,  சீரகம், வறுத்த முந்திரி - சிறிதளவு. நெய், எண்ணெய் - தலா 25 கிராம், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு - சிறிதளவு.

செய்முறை:
எண்ணெய் - நெய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து சூடாக்கி, சீரகம் தாளித்து, இஞ்சி - கொத்தமல்லி - பூண்டு - பச்சை மிளகாய் விழுது சேர்த்துக் கிளறி... இதனுடன் தக்காளி, வெங்காயம் சேர்த்து  வதக்கவும். பிறகு, நறுக்கிய பீர்க்கங்காய் சேர்த்து வதக்கி... உப்பு, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் போட்டு, உதிராக வடித்த சாதமும் சேர்த்து நன்கு புரட்டி, ஒரு நிமிடம் வைத்து இறக்கி... வறுத்த முந்திரியை சேர்த்துப் பரிமாறவும்.

Offline MysteRy

சௌசௌ - பீர்க்கங்காய் மிளகூட்டல்



தேவையானவை:
தோல் நீக்கி, துண்டுகளாக்கி, வேகவைத்த சௌசௌ - ஒரு கப், தோல் நீக்கி, துண்டுகளாக்கி, வதக்கிய பீர்க்கங்காய் - ஒரு கப், மஞ்சள்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க:
தேங்காய் - ஒரு மூடி (துருவவும்), மிளகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயம் - சிறிதளவு, எண்ணெய் - சிறிதளவு.
தாளிக்க: கடுகு, சீரகம் - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:
வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் வறுத்து விழுதாக அரைக்கவும். வெந்த காய்களுடன் உப்பு, மஞ்சள்தூள், அரைத்த விழுது, சிறிதளவு நீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, தாளிக்க கொடுத்துள்ளவற்¬றை தாளித்து சேர்க்கவும்.
இது... சாதம், சப்பாத்தி, பூரிக்கு ஏற்றது.

Offline MysteRy

கலர்ஃபுல் நீர்க்காய் மிக்ஸ்



தேவையானவை:
நறுக்கிய புடலங்காய், பூசணித் துண்டுகள், முள்ளங்கி துண்டுகள் - தலா அரை கப், மாங்காய் துண்டுகள், நறுக்கிய கேரட் - தலா கால் கப், தக்காளி - 2 (நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள் - சிறிதளவு.

தாளிக்க:
சீரகம், நசுக்கிய பூண்டு, எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களைத் தாளித்து... தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். புடலங்காய், பூசணிக்காய், மாங்காய், முள்ளங்கி, கேரட் துண்டுகளை சேர்த்து... உப்பு, மஞ்சள்தூள் போட்டு, நீர் தெளித்து நன்கு வதக்கவும். பிறகு, மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் வதக்கி இறக்கவும்.

Offline MysteRy

சௌசௌ ஃபிங்கர் ஃப்ரை



தேவையானவை:
சௌசௌ (தோல் நீக்கி, விரல் நீளத்துக்கு நறுக்கியது) - 2 கப், மைதா - 50 கிராம், அரிசி மாவு - 25 கிராம், பூண்டு விழுது - அரை டீஸ்பூன், சோம்புப் பொடி - கால் டீஸ்பூன், பொடித்த கார்ன்ஃப்ளேக்ஸ் - கால் கப், எண்ணெய் - அரை லிட்டர், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
மைதா, அரிசி மாவு, உப்பு, பூண்டு விழுது, சோம்புப் பொடியுடன்  கொஞ்சம் நீர் சேர்த்து, கட்டியின்றி கெட்டியாகக் கரைக்கவும். விரல் நீளத்துக்கு நறுக்கிய சௌசௌ துண்டுகளை மாவில் தோய்த்து, பொடித்த கார்ன் ஃப்ளேக்ஸில் நன்கு புரட்டி, சூடான  எண்ணெயில் சிவக்க பொரித்தெடுக்கவும்.
இது, கலவை சாதங்களுக்கு சைட் டிஷ்ஷாக கைகொடுக்கும்.

Offline MysteRy

சுரைக்காய் கோஃப்தா



தேவையானவை:
துருவிய சுரைக்காய் - ஒரு கப், கடலை மாவு - அரை கப், தக்காளி - 6, வெங்காயம் - 3, சோடா உப்பு,  இஞ்சி - பூண்டு விழுது - சிறிதளவு, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை:
தக்காளி, வெங்காயத்தை வதக்கி விழுதாக்கி, ஒரு கப் நீர், சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி, தனியே  வைக்கவும். சுரைக்காயுடன் கடலை மாவு, பூண்டு, இஞ்சி - பூண்டு விழுது, சோடா உப்பு, சிறிதளவு உப்பு, நறுக்கிய கொத்தமல்லி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து, நீர் விட்டு நன்கு பிசைந்து, சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி, சூடான எண்ணெயில் சிவக்க பொரிக்கவும். இதன் மேலே தக்காளி - வெங்காய மசாலாவை ஊற்றிப் பரிமாறவும்.

Offline MysteRy

பீர்க்கங்காய் சாண்ட்விச்



தேவையானவை:
தோல் நீக்கி, வட்டமாக நறுக்கிய பீர்க்கங்காய் - 30 வில்லை கள், மைதா - 50 கிராம், கடலை மாவு - 50 கிராம், அரிசி மாவு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் விழுது - அரை டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 50 கிராம்.

செய்முறை:
பீர்க்கங்காய், எண்ணெய் தவிர்த்து மற்ற பொருட்களுடன் நீர் சேர்த்து பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். பீர்க்கங்காய் துண்டுகளை மாவில் தோய்த்து 7 கல் தோடு வடிவத்தில் தோசைக்கல்லில் வைக்கவும் (ஒரு வில்லையை தோசைக்கல்லின் நடுவில் வைத்து, அதைச் சுற்றிலும் 6 வில்லைகளை நெருக்கமாக வைக்கவும்). இதனை இருபுறமும் எண்ணெய் விட்டு சிவக்க வேகவிட்டு எடுக்க... பீர்க்கங்காய் சாண்ட்விச் தயார். 
மொத்தம் 4 சாண்ட்விச்கள் வரும். இது மாலை நேரத்துக்கு ஏற்ற டிபன்.

Offline MysteRy

முள்ளங்கி தயிர் போண்டா



தேவையானவை:
துருவிய இளம் முள்ளங்கி - 150 கிராம், குண்டு உளுத்தம்பருப்பு - 200 கிராம், அரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, துருவிய கேரட் - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, சிறிய பச்சை மிளகாய் - 4 (நறுக்கவும்), கடைந்த தயிர், உப்பு, சர்க்கரை - தேவையான அளவு.

செய்முறை:
உளுத்தம்பருப்பு, அரிசியை சேர்த்து அரை மணி ஊறவைத்து, வெண்ணெய் போல் அரைக்கவும். துருவிய முள்ளங்கியைப் பிழிந்து இதனுடன் சேர்த்து...  உப்பு, பச்சை மிளகாயையும் சேர்க்கவும். இந்த மாவை சூடான எண்ணெயில் போண்டாக்களாக பொரித்து எடுக்கவும். கடைந்த தயிரில் உப்பு, சர்க்கரை சேர்த்து, பொரித்த போண்டாக்களை ஊறவிட்டு... மேலே கொத்தமல்லி, கேரட் துருவல் தூவி பரிமாறவும்.

Offline MysteRy

புடலை - பூசணி தீயல்



தேவையானவை:
புடலங்காய், பூசணிக்காய் துண்டுகள் (சேர்த்து) - ஒரு கப், பொடித்த வெல்லம், மஞ்சள்தூள், உப்பு - சிறிதளவு.

அரைக்க:
தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8 (அல்லது காரத்துக்கேற்ப), தேங்காய் - அரை மூடி (துருவவும்), பெருங்காயம் - சிறிதளவு, எண்ணெய் - சிறிதளவு,

தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த  மிளகாய் (கிள்ளியது) - 2, கறிவேப்பிலை - சிறி தளவு, தேங்காய் எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:
புடலங்காய், பூசணிக்காய் துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிட்டு நீரை வடிக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் வறுத்து விழுதாக அரைத்து, காயுடன் கலந்து கொதிக்கவிட்டு, வெல்லம் சேர்த்து இறக்கவும். தாளிக்கும் பொருட்களை தேங்காய் எண்ணெயில் சிவக்க தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.

Offline MysteRy

சுரைக்காய் - பாசிப்பருப்பு பெசரட்



தேவையானவை:
பாசிப்பருப்பு - ஒரு கப், அரிசி - கால் கப், சுரைக்காய் (துருவியது) - ஒரு கப், இஞ்சித் துருவல் - சிறிதளவு, வெங்காயம் - ஒன்று, சிறிய பச்சை மிளகாய் - 8 (அல்லது காரத்துக்கேற்ப), சீரகம் - சிறிதளவு, தனியே ஊறவிட்டு வடித்த பாசிப்பருப்பு  - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 

செய்முறை:
பாசிப்பருப்பு, அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து ரவை போல் அரைத்து எடுக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி இதனுடன்  சேர்த்து, சீரகம், இஞ்சித் துருவல் சேர்த்துக் கலக்கவும். சூடான தோசைக்கல்லில் ஒரு கரண்டி மாவை சற்றே கனமாக  ஊற்றி, ஊறவைத்த பாசிப்பருப்பு கொஞ்சம் தூவி, துருவிய சுரைக்காயையும் பரவலாக தூவி, இருபுறமும் எண்ணெய் விட்டு, சிவக்க வேகவிட்டு எடுத்து, சூடாக பரிமாறவும்.

குறிப்பு:
சுரைக்காய் துருவலை மாவுடன் சேர்த்தும் பெசரட் செய்யலாம்.

Offline MysteRy

முள்ளங்கி துவையல்



தேவையானவை:
துருவிய வெள்ளை முள்ளங்கி - அரை கப், பெருங்காயம் - சிறிதளவு, தேங்காய்த் துருவல் - கால் கப்,  உடைத்த உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6 (அல்லது காரத்துக்கேற்ப), புளி, உப்பு, கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை சிறிதளவு எண்ணெயில் சிவக்க வறுத்து முள்ளங்கியையும் சேர்த்து வதக்கி ஆறவிடவும். இதனுடன் உப்பு, புளி, பெருங்காயம், தேங்காய்த் துருவல் சேர்த்து கொரகொரவென அரைக்கவும். கடுகு, கறிவேப்பிலையை எண்ணெயில் தாளித்துச் சேர்க்கவும்.
இதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்... சப்பாத்தி, தோசை மீது தடவி பரிமாறலாம்.

Offline MysteRy

தர்பூசணி - தக்காளி பொரியல்



தேவையானவை:
தர்பூசணியின் தோல் - பழத்துக்கு நடுவே இருக்கும் வெள்ளை சதைப்பகுதி (நறுக்கியது) - ஒரு கப், அதிகம் பழுக்காத தக்காளி - 3 (நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), வேகவைத்த துவரம்பருப்பு - சிறிதளவு, கடுகு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளித்து... வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும். பிறகு, நறுக்கிய தர்பூசணி துண்டுகள், உப்பு சேர்த்து மேலும் வதங்கி, வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Offline MysteRy

மலபார் வெள்ளரி சாம்பார்



தேவையானவை:
மலபார் வெள்ளரிக்காய் (மிகப்பெரிய வெள்ளரி) - அரை கிலோ, வேகவைத்த துவரம்பருப்பு - அரை கப், புளித் தண்ணீர் - தேவையான அளவு, சாம்பார் பொடி - ஒன்றரை டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் - 2, மஞ்சள்தூள் - சிறிதளவு, பெருங்காயத்தூள், கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
மலபார் வெள்ளரியை தோல், விதை நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, பச்சை மிளகாயை தாளிக்கவும். இதில் நறுக்கிய மலபார் வெள்ளரிக்காய் துண்டுகள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் புளித் தண்ணீர், சாம்பார் பொடி சேர்த்து... கொதி வந்தவுடன் வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து, சாம்பார் பதம் வந்தவுடன்  இறக்கவும்.

Offline MysteRy

தர்பூசணி லஸ்ஸி



தேவையானவை:
நீர் விடாமல் கெட்டியாக கடைந்த தயிர் - 2 கப், தர்பூசணி சாறு - ஒரு கப், ரோஸ் எசன்ஸ் - சிறிதளவு, சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், ஐஸ்கட்டிகள் - சிறிதளவு.

செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் நன்கு நுரைக்க கலந்து உயரமான கிளாஸ்களில் பரிமாறவும். விருப்பப்பட்டால் 4 புதினா இலைகள் சேர்க்கலாம்.