Author Topic: ~ காகம் பற்றிய தகவல்கள்:- ~  (Read 1148 times)

Online MysteRy

காகம் பற்றிய தகவல்கள்:-




காகம் அல்லது காக்கை என்பது கார்விடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை இனமாகும். என்பது பொதுவாக கரிய நிறம் கொண்ட பறவை ஆகும். இலத்தீன் மொழியில் 'கார்வுச்' என்ற சொல்லுக்கு 'பெரிய உடலமைப்பு கொண்டவை' என்று பொருள். காகங்களில் 40 இனங்கள் உள்ளன. சிறிய புறா அளவிலிருந்து பெரிய 'ஜாக்டா' எனப்படும் இனம் வரை இவற்றில் அடங்கும். இது பறவைகளில் கூடுதல் அறிவுத் திறன் பெற்றதாகக் கருதப்படுகிறது. இது மக்கள் வாழும் இடங்களில் கூட்டமாக இருந்து கொண்டு அவர்கள் வெளியிடும் குப்பைகளையும், மற்றைய வீண்பொருட்களையும் உண்டு வாழ்கிறது. இதன் காரணமாக சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பில் ஒரு பங்கு வகிக்கிறது.

இவற்றை மிக இலகுவாகப் பயிற்றுவிக்க முடியும். காகங்களைப் பழக்கி இலகுவாகச் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுத்த முடியும் என்பதால் இவற்றைச் செல்லப்பறவைகளாக வளர்ப்பது சில நாடுகளில் சட்டவிரோதமானதாகும்.

காகங்களில் ஆஸ்திரேலிய, வட அமெரிக்க, ஆபிரிக்க, ஐரோப்பிய, ஆசிய இனங்கள் பல உள்ளன. கரியன் காகம், வீட்டுக் காகம் ஆகியன ஆசியக் காக இனங்களாகும்.