உறங்கும் போது குறட்டை விடுவது எதனால்?

குறட்டை என்பது எல்லோராலும் அறியப்படும் ஒரு வார்த்தையாகும். அதாவது ஒரு சிலர் உறங்கும் போது அவர்கள் விடும் மூச்சு சத்தத்தை எழுப்பினால் அது குறட்டை எனப்படுகிறது.
இதற்குக் காரணம்..
பொதுவாக நாம் விழித்திருக்கும் போது மூக்கு, வாய், தொண்டை ஆகியவற்றுக்கு இணைப்பாக இருக்கும் தசை நன்கு அழுத்தமாக மூச்சுக் காற்று சென்று வருவதற்கு திறந்த வகையில் இருக்கும். இதனால் மூச்சுக் காற்று எந்த சத்தமும் இல்லாமல் சென்று வருகிறது.
ஆனால் நாம் உறங்கும் போது நமது தசைகள் தளர்ச்சி அடைந்து விடுகின்றன. இதேப்போல மூக்கு, வாய், தொண்டை ஆகியவற்றுக்கு இணைப்பாக உள்ள தசைப் பகுதியும் தளர்ந்து மூச்சுக் காற்று சென்று வருவதில் சிலருக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.
அந்த நிலையில், மூச்சு விடும் போது தசைப் பகுதியை தாண்டி மூச்சுக் காற்று வரும்போது ஏற்படும் சப்தமே குறட்டை எனப்படுகிறது.
பொதுவாக இது பலரை பாதிக்கும் பிரச்சனையாகும். இந்த குறட்டையால், குறட்டை விடுபவருக்கு பாதிப்பு ஏற்படுவதை விட, அவருடன் அருகில் உறங்குபவர்களுக்குத்தான் அதிக பாதிப்பு ஏற்படும்.
குறட்டை விட்டபடி உறங்குவதால், அவர்களுக்கும் அதிக களைப்பு ஏற்படும். இது தீவிரமாகும் பட்சத்தில் மருத்துவரை அணுகுவது நல்லது