Author Topic: ~ 30 வகை முக்கனி சமையல்! ~  (Read 1392 times)

Offline MysteRy

Re: ~ 30 வகை முக்கனி சமையல்! ~
« Reply #15 on: June 03, 2014, 11:18:47 AM »
பலாப்பழ அப்பளம்



தேவையானவை:
கெட்டியான பலாச்சுளைகள் - 10, காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயம், உப்பு  - தேவைக்கேற்ப, எண்ணெய் - சிறிதளவு,

செய்முறை:
பலாச்சுளைகளை கொட்டை நீக்கி, ஒரு துணியில் கட்டி ஆவியில் வேகவிடவும். ஆறிய பின்பு சுளைகளுடன் உப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, கலவையை கொஞ்சம் எடுத்து, எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட்டில் போட்டு தட்டி, வெயிலில் காயவைத்து எடுத்து டப்பாவில் போட்டு வைக்கவும்.
இதை தேவையானபோது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம். எண்ணெய் தடவிய வாழை இலை மீது பலாப்பழ கலவையை ஒரு சிறிய உருண்டையாக வைத்து, மேலே மற்றொரு இலையால் மூடி, ஒரு கிண்ணம் வைத்து அழுத்தி, சுற்றியும் இந்த அப்பளத்தை தயாரிக்கலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை முக்கனி சமையல்! ~
« Reply #16 on: June 03, 2014, 11:20:30 AM »
பலாச்சுளை சர்ப்ரைஸ்



தேவையானவை:
பலாச்சுளைகள் - 10, முந்திரி, பாதாம் - தலா 5, தேன், நெய் - தேவைக்கேற்ப.

செய்முறை:
நெய்யில் முந்திரி, பாதாமை வறுத்து எடுக்கவும். பலாச்சுளையின் நடுவில் உள்ள கொட்டையை நீக்கிவிட்டு அந்த இடத்தில் பொரித்த பாதாம் (அ) முந்திரி வைத்து மூடவும் (ஒரு சுளைக்குள் பாதாம், மற்றொரு சுளைக்குள் முந்திரி என்று மாற்றி, மாற்றி வைத்து மூடவும்). தேனில் பலாச்சுளையை ஊறவிடவும். அரைமணி நேரம் கழித்து எடுத்து சாப்பிடவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை முக்கனி சமையல்! ~
« Reply #17 on: June 03, 2014, 11:21:41 AM »
பலாச்சுளை இலை அடை



தேவையானவை:
பலாச்சுளைகள் - 20, வெல்லம் - ஒரு கப், அரிசி மாவு - ஒரு கப், தேங்காய்த் துருவல் - தேவைக்கேற்ப, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வாழை இலை - 5, நெய் - 5 டீஸ்பூன்.

செய்முறை:
பலாச்சுளையை நெய்யில் வதக்கி ஆறவிட்டு, வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், அரிசி மாவு சேர்த்துக் கெட்டியாக பிசையவும். வாழை இலையில் நெய் தடவி, பிசைந்த மாவில் இருந்து சிறு உருண்டை எடுத்து தட்டி, மேலே தேங்காய்த் துருவல் தூவி, ஆவியில் வேகவிடவும்.
குறிப்பு: பரிமாறும் வரை அடை, இலையுடனேயே இருக்க வேண்டும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை முக்கனி சமையல்! ~
« Reply #18 on: June 03, 2014, 11:23:08 AM »
பலாச்சுளை பொரியல்



தேவையானவை:
பலாச்சுளைகள் - 15, பொடித்த வெல்லம் - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கடுகு, உளுத்தம்பருப்பு - தாளிக்கத் தேவையான அளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, தேங்காய்த் துருவல் - 5 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
பலாச்சுளைகளை பொடியாக நறுக்கவும். வாணலியில் நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து... பலாச்சுளைகளை சேர்த்து வதக்கவும். பிறகு, லேசாக தண்ணீர் தெளித்து பலாச்சுளைகளை வேகவிடவும். வெந்த பின்பு பொடித்த வெல்லம், உப்பு, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்து, புரட்டி எடுத்து பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை முக்கனி சமையல்! ~
« Reply #19 on: June 03, 2014, 11:24:26 AM »
பனானா பைட்



தேவையானவை:
வாழைப்பழம் - ஒன்று, தேங்காய் துருவல் - கால் கப், தயிர் - அரை கப்.

செய்முறை:
வாழைப்பழத்தை தோல் உரித்து வட்டமான துண்டுகளாக்கவும். ஒரு ஃபோர்க் ஸ்பூனால் வாழைப்பழத் துண்டை எடுத்து தயிரில் தோய்த்து ஒரு தட்டில் வைக்கவும். இதே போல எல்லா பழத் துண்டுகளையும் அடுக்கி... பிறகு, தேங்காய் துருவலை மேலே தூவி பரிமாறவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால், துருவிய நட்ஸ் வகைகளை தூவியும் பரிமாறலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை முக்கனி சமையல்! ~
« Reply #20 on: June 03, 2014, 11:26:02 AM »
வாழைப்பழ கறி



தேவையானவை:
வாழைப்பழத் துண்டுகள் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - தாளிக்கத் தேவையான அளவு, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, ஆம்சூர் பவுடர் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வாழைப்பழத்தை வட்டமான துண்டுகளாக வெட்டவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், வாழைப்பழத் துண்டுகள், மஞ்சள்தூள், ஆம்சூர் பவுடர் சேர்த்துக் கிளறவும். இதை லேசாக தண்ணீர் தெளித்து வதக்கி... உப்பு, கொத்தமல்லித் தழை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இது, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது.

Offline MysteRy

Re: ~ 30 வகை முக்கனி சமையல்! ~
« Reply #21 on: June 03, 2014, 11:27:41 AM »
பனானா பெர்ரி



தேவையானவை:
வாழைப்பழம் - ஒன்று, ஸ்ட்ராபெர்ரி - 5, பால் - ஒரு கப், சர்க்கரை - கால் கப், ஐஸ்கட்டிகள் - தேவைக்கேற்ப.

செய்முறை:
வாழைப்பழத்தை தோல் உரித்து துண்டுகளாக்கவும். ஸ்ட்ராபெர்ரியை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக்கவும். பாலை காய்ச்சி ஆறவிடவும். பாலுடன் பழத்துண்டுகள், சர்க்கரை, ஐஸ்கட்டிகள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ஃப்ரிட்ஜில் குளிரவைத்து பருகவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை முக்கனி சமையல்! ~
« Reply #22 on: June 03, 2014, 11:28:56 AM »
சாக்லேட் - வாழைப்பழ ஷேக்



தேவையானவை:
வாழைப்பழம் - ஒன்று, சாக்லேட் பார் - ஒன்று, பால் - ஒரு கப், சர்க்கரை - 10 டீஸ்பூன்.

செய்முறை:
வாழைப்பழத்தை தோல் உரித்து துண்டுகளாக்கவும். சாக்லேட்டை துருவவும். பாலைக் காய்ச்சி ஆறவிடவும். வாழைப்பழத் துண்டுகளுடன் சாக்லேட் துருவல், பால், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து, டம்ளரில் ஊற்றி, மேலே சிறிதளவு சாக்லேட் துருவல் தூவி குளிரவைத்து பரிமாறவும்.
குட்டீஸ்கள் இதை மிகவும் விரும்பிப் பருகுவர்.

Offline MysteRy

Re: ~ 30 வகை முக்கனி சமையல்! ~
« Reply #23 on: June 03, 2014, 11:30:13 AM »
கிரிஸ்பி பனானா



தேவையானவை:
நேந்திரன் வாழை - ஒன்று, மைதா - ஒரு கப், சர்க்கரை - 5 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், ஓட்ஸ் - தேவைக் கேற்ப, உப்பு - கால் டீஸ்பூன்.

செய்முறை:
நேந்திரன் பழத்தை தோல் உரித்து, நடுவில் இரண்டாக வெட்டி, பிறகு பஜ்ஜிக்கு நறுக்குவதுபோல் நீளவாக்கில் நறுக்க வும். ஓட்ஸை ஒரு தட்டில் பரப்பவும். சலித்த மைதாவுடன் உப்பு, மஞ்சள் தூள், சர்க்கரை, நீர் சேர்த்து பஜ்ஜி மாவு போல கரைக்கவும். வெட்டிய வாழைப்பழ துண்டுகளை மாவில் முக்கி எடுத்து தட்டில் வைத்துள்ள ஓட்ஸ் மீது புரட்டி எடுத்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால்... கிரிஸ்பி பனானா ரெடி!

Offline MysteRy

Re: ~ 30 வகை முக்கனி சமையல்! ~
« Reply #24 on: June 03, 2014, 11:31:38 AM »
வாழைப்பழ அப்பம்



தேவையானவை:
வாழைப்பழம் - ஒன்று, மைதா மாவு - ஒரு கப், ஆப்பசோடா - ஒரு சிட்டிகை, தயிர் - கால் கப், நெய் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - கால் கப், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:
மைதாவுடன் ஆப்பசோடா, தயிர், மசித்த வாழைப்பழ விழுது, நெய், சர்க்கரை சேர்த்து, கரைக்கவும். இதை ஒரு மணி நேரம் ஊறவிடவும். எண்ணெயை காயவைத்து, கரைத்த மாவில் இருந்து சிறிது சிறிதாக ஊற்றி பொரித்து எடுக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). இது, உள்ளே சாஃப்ட்டாக இருக்கும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை முக்கனி சமையல்! ~
« Reply #25 on: June 03, 2014, 11:32:53 AM »
நேந்திரம் பழம் புரட்டல்



தேவையானவை:
நேந்திரம் பழம் - ஒன்று, நெய் - 4 டீஸ்பூன், தேன் - தேவைக்கேற்ப.

செய்முறை:
நேந்திரம் பழத்தை தோல் உரித்து வட்டமான வில்லைகளாக நறுக்கவும். வாணலியில் நெய் விட்டு, நறுக்கிய வில்லைகளைப் போட்டு வதக்கி எடுத்து ஒரு தட்டில் அடுக்கி, மேலே தேனை ஊற்றிப் பரிமாறவும்.
இரும்புச்சத்து நிறைந்த ஹெல்தியான டிஷ் இது.

Offline MysteRy

Re: ~ 30 வகை முக்கனி சமையல்! ~
« Reply #26 on: June 03, 2014, 11:34:06 AM »
பனானா - ஐஸ்க்ரீம் டிலைட்



தேவையானவை:
வாழைப்பழம் - ஒன்று, பால் - ஒரு கப், ஐஸ்க்ரீம் - ஒரு கப், சர்க்கரை - 5 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு  - ஒரு சிட்டிகை.

செய்முறை:
வாழைப்பழத்தை தோல் உரித்து துண்டுகளாக்கவும். இதனுடன் காய்ச்சி ஆற வைத்த பால், சர்க்கரை, உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். இதை கிண்ணத்தில் ஊற்றி ஃப்ரிட்ஜில் குளிர வைக்கவும். பரிமாறும்போது இதன் மீது சிறிதளவு ஐஸ்க்ரீம் போட்டு பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை முக்கனி சமையல்! ~
« Reply #27 on: June 03, 2014, 11:35:18 AM »
வாழைப்பழம் - பிஸ்கட் ஃபொலட்



தேவையானவை:
கேரட் - ஒன்று, வாழைப்பழம் - ஒன்று, பிஸ்கட் - ஒரு பாக்கெட், முந்திரி - 10, நெய் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 5 டீஸ்பூன்

செய்முறை:
கேரட்டை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக்கவும். வாழைப்பழத்தை தோல் உரித்து துண்டுகளாக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து எடுக்கவும். கேரட், வாழைப்பழத் துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். ஒரு தட்டில் பிஸ்கட்டுகளைப் பரப்பி, அதன் மீது அரைத்த கலவையைத் தடவி, மேலே முந்திரியை வைத்து, பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை முக்கனி சமையல்! ~
« Reply #28 on: June 03, 2014, 11:37:42 AM »
முக்கனி பாயசம்



தேவையானவை:
மா, பலா, வாழை துண்டுகள் (சேர்த்து) - ஒரு கப், பால் - 2 கப், சர்க்கரை - ஒன்றரை கப், வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், முந்திரி - 5.

செய்முறை:
நெய்யில் முந்திரியை வறுத்து எடுக்கவும். அதே நெய்யில் மாம்பழத் துண்டுகளையும், வாழைப்பழத் துண்டுகளையும் சேர்த்து வதக்கி எடுக்கவும். பலாச்சுளைகளை தனியே வேகவைக்கவும். பாலுடன் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். பால் நன்கு சுண்டும்போது பழங்களை நன்கு மசித்துச் சேர்த்து, ஒரு கொதிவிட்டு இறக்கவும். இதனுடன் எசன்ஸ் சேர்த்து, வறுத்த முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை முக்கனி சமையல்! ~
« Reply #29 on: June 03, 2014, 11:38:50 AM »
ஆப்பிள் - வாழைப்பழ ஃப்யூரி



தேவையானவை:
ஆப்பிள் - ஒன்று, வாழைப்பழம் - ஒன்று.

செய்முறை:
ஆப்பிளை தோல் சீவி துண்டுகளாக்கி ஆவியில் வேகவைக்கவும் (நீரில் போட்டும் வேகவைக்கலாம்). வாழைப்பழத்தை தோல் உரித்து துண்டுகள் ஆக்கவும். வேகவைத்த ஆப்பிள் துண்டுகளுடன் வாழைப்பழ துண்டுகளை சேர்த்து மிக்ஸியில் அரைத்து கிண்ணத்தில் ஊற்றவும். 6 மாதம் நிரம்பிய குழந்தைகளுக்கு ஏற்ற உணவு இது.