Author Topic: ~ 30 வகை முக்கனி சமையல்! ~  (Read 1396 times)

Offline MysteRy

~ 30 வகை முக்கனி சமையல்! ~
« on: June 03, 2014, 10:59:20 AM »
மாம்பழ லஸ்ஸி



தேவையானவை:
நன்கு கனிந்த மாம்பழத் துண்டுகள் - ஒரு கப், தயிர் - ஒரு கப், பால் - அரை கப் (காய்ச்சி ஆற வைத்தது), ஐஸ்கட்டிகள், சர்க்கரை - தேவைக்கேற்ப.

செய்முறை:
கொடுக்கப் பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து, குளிர வைத்து, சிறிய கிண்ணங்களில் ஊற்றிப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை முக்கனி சமையல்! ~
« Reply #1 on: June 03, 2014, 11:00:39 AM »
மாம்பழ அல்வா



தேவையானவை:
மாம்பழ விழுது - ஒரு கப், நெய் - கால் கப், சர்க்கரை - ஒரு கப், பாதாம், முந்திரி - தேவைக்கேற்ப.

செய்முறை:
சர்க்கரையுடன் மாம்பழ விழுதைக் கலக்கவும். நெய்யில் பாதாம், முந்திரியை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அடிகனமான வாணலியில் சர்க்கரை கலந்த மாம்பழ விழுது, நெய் சேர்த்துக் கிளறவும். நன்கு சுருண்டு வரும்போது இறக்கி... வறுத்த பாதாம், முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை முக்கனி சமையல்! ~
« Reply #2 on: June 03, 2014, 11:01:54 AM »
மாம்பழ ரைஸ் கீர்



தேவையானவை:
மாம்பழத் துண்டுகள் - ஒரு கப், பச்சரிசி - 4 டீஸ்பூன், பாதாம் - 5, பால் - ஒரு கப் (காய்ச்சி ஆற வைத்தது), சர்க்கரை - ஒரு கப்.

செய்முறை:
பச்சரிசியை 15 நிமிடம் ஊறவைக்கவும். பாதாமை துருவவும். பாதியளவு மாம்பழத் துண்டுகளையும், பச்சரிசியையும் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதனுடன் பாலை சேர்த்து ஒரு சுற்று சுற்றி விட்டு இறக்கவும். அடி கனமான பாத்திரத்தில் அரைத்த கலவையை சேர்த்து, அடுப்பை 'சிம்’மில் வைத்துக் கிளறவும். அரிசி நன்கு வெந்த பின்பு மீதியுள்ள மாம்பழத் துண்டுகள், சர்க்கரை, பாதாம் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கி, குளிர வைத்து சாப்பிடக் கொடுக்கலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை முக்கனி சமையல்! ~
« Reply #3 on: June 03, 2014, 11:03:07 AM »
ஆம் தால்



தேவையானவை:
மாம்பழத் துண்டுகள் - ஒரு கப், பாசிப்பருப்பு - கால் கப், பச்சை மிளகாய் - 2, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
பாசிப்பருப்புடன் மாம்பழத் துண்டுகளைச் சேர்த்து குக்கரில் வேகவிடவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயைக் காயவிட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி... வெந்த பருப்பு - பழ கலவை, உப்பு, சுத்தம் செய்த மல்லித்தழை சேர்த்து, ஒரு கொதிவிட்டு இறக்கவும். இதை சப்பாத்தி, இட்லி, தோசையுடன் பரிமாறலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை முக்கனி சமையல்! ~
« Reply #4 on: June 03, 2014, 11:04:21 AM »
மேங்கோ - லெமன் சர்பத்



தேவையானவை:
மாம்பழத் துண்டுகள் - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,  சர்க்கரை - கால் கப், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
மாம்பழத் துண்டுகளுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து, டம்ளரில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் குளிர வைத்து பரிமாறவும். இதனை வடிகட்டியும் பருக லாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை முக்கனி சமையல்! ~
« Reply #5 on: June 03, 2014, 11:05:38 AM »
மாம்பழ சட்னி



தேவையானவை:
மாம்பழத் துண்டுகள் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 4 பல், பச்சை மிளகாய் - 3, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்கத் தேவையான அளவு, எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். பூண்டை தோலுரிக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சியை வதக்கி ஆறவிடவும். இதனுடன் உப்பு, மாம்பழத் துண்டுகளைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ஒரு கிண்ணத்தில் போடவும். இதில் எலுமிச்சைச் சாறு விட்டு கலக்கவும். அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, சட்னியுடன் சேர்க்கவும். இதை தயிர் சாதத்துடன் சாப்பிட...  சுவை சூப்பராக இருக்கும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை முக்கனி சமையல்! ~
« Reply #6 on: June 03, 2014, 11:06:48 AM »
மாம்பழ ஸ்வீட் ரைஸ்



தேவையானவை:
மாம்பழத் துண்டுகள் - ஒரு கப், வடித்த சாதம் - ஒரு கப், சர்க்கரை - 5 டீஸ்பூன், நெய் - தேவைக்கேற்ப, பாதாம், முந்திரி - தலா 5, தேன் - 5 டீஸ்பூன்.

செய்முறை:
நெய்யில் பாதாம், முந்திரியை வறுக்கவும். மாம்பழத்தை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வடித்த சாதத்துடன் மாம்பழ விழுது, தேன், சர்க்கரை, வறுத்த பாதாம், முந்திரி சேர்த்துக் கலந்து பரிமாறவும். குட்டீஸ்கள் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

Offline MysteRy

Re: ~ 30 வகை முக்கனி சமையல்! ~
« Reply #7 on: June 03, 2014, 11:08:10 AM »
ஹாட் அண்ட் ஸ்வீட் மேங்கோ சாஸ்



தேவையானவை:
மாம்பழத் துண்டுகள் - ஒரு கப், சர்க்கரை - முக்கால் கப், பச்சை மிளகாய் - 2, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
மாம்பழத் துண்டுகளைக் குழைய வேகவிடவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் சர்க்கரையைப் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு கரையவிடவும். இதனுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து, வெந்த மாம்பழத்தை நன்கு மசித்து சேர்த்துக் கிளறி, சாஸ் பதம் வந்த பின்பு இறக்கவும்.
பிரெட், சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ் இது!

Offline MysteRy

Re: ~ 30 வகை முக்கனி சமையல்! ~
« Reply #8 on: June 03, 2014, 11:09:19 AM »
மேங்கோ - ஆனியன் சாலட்



தேவையானவை:
பொடியாக நறுக்கிய மாம்பழத் துண்டுகள் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
அகலமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய மாம்பழத் துண்டுகள், நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை முக்கனி சமையல்! ~
« Reply #9 on: June 03, 2014, 11:10:30 AM »
மாம்பழ க்ரானிட்டா



தேவையானவை:
மாம்பழத் துண்டுகள் - ஒரு கப், சர்க்கரை - கால் கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், இஞ்சித் துருவல் - சிறிதளவு.

செய்முறை:
மாம்பழ துண்டுகளுடன் இஞ்சித் துருவலை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். சர்க்கரையுடன் கால் கப் தண்ணீர் சேர்த்துக் கரைத்து, அடுப்பிலேற்றி ஒரு கொதிவிட்டு , அரைத்த விழுது சேர்த்துக் கிளறி இறக்கி ஆறவைக்கவும். இதில் எலுமிச்சைச் சாறு பிழிந்து கலந்து ஃப்ரீஸரில் வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து வெளியே எடுத்து கிளறிவிட்டு, மீண்டும் ஃப்ரீஸரில் வைக்கவும். மூன்று மணி நேரத்துக்குப் பிறகு பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை முக்கனி சமையல்! ~
« Reply #10 on: June 03, 2014, 11:11:59 AM »
முக்கனி ஓட்மீல்



தேவையானவை:
ஓட்ஸ் - ஒரு கப், மா, பலா, வாழை துண்டுகள் (சேர்த்து) - அரை கப், பால் - ஒரு கப், சர்க்கரை - அரை கப், ஸ்ட்ராபெர்ரி துண்டுகள் - தேவையான அளவு.

செய்முறை:
கொதிக்கும் நீரில் ஓட்ஸ் சேர்த்து வேகவிடவும். இதனுடன் காய்ச்சிய பால், சர்க்கரை, பழத்துண்டுகள் சேர்த்துக் கிளறி இறக்கி, பரிமாறவும்.
ஹெல்தியான காலை நேர உணவு இது!

Offline MysteRy

Re: ~ 30 வகை முக்கனி சமையல்! ~
« Reply #11 on: June 03, 2014, 11:13:19 AM »
பலாச்சுளை பச்சடி



தேவையானவை:
பலாச்சுளைகள் - 10, பொடித்த வெல்லம் - கால் கப், பச்சை மிளகாய் - 2, அரிசி மாவு - 2 டீஸ்பூன், கடுகு, எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
பலாச்சுளைகளை நார் எடுத்து, கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கி, நீர் விட்டு வேகவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து... வெந்த பலாச்சுளைகள், வெல்லம், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு, அரிசி மாவை கரைத்து விட்டு, கிளறி இறக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை முக்கனி சமையல்! ~
« Reply #12 on: June 03, 2014, 11:14:32 AM »
பலாப்பழ ஜாம்



தேவையானவை:
நன்கு கனிந்த பலாச்சுளைகள் - 10 (பெரியது), வெல்லம் - அரை கப், நெய் - கால் கப்.

செய்முறை:
பலாச்சுளைகளை வேகவைக்கவும். ஆறிய பின்பு மத்தால் நன்கு மசிக்கவும். வாணலியில் நெய்யைக் காயவிட்டு... மசித்த விழுது, பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கி வைக்கவும்.
இது, சப்பாத்தி (அ) பிரெட்டுக்கு தொட்டுக்கொள்ள மிகவும் ஏற்றது.

Offline MysteRy

Re: ~ 30 வகை முக்கனி சமையல்! ~
« Reply #13 on: June 03, 2014, 11:16:07 AM »
பலாப்பழ பால்ஸ்



தேவையானவை:
மைதா மாவு - ஒரு கப், பலாப்பழ ஜாம் - ஒரு கப் (முந்தைய பக்கத்தில் இதற்கான ரெசிபி இருக்கிறது),  நெய் - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
மைதா மாவுடன் உப்பு, நீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கெட்டியாக கரைக்கவும். கையில் சிறிதளவு நெய் தடவிக்கொண்டு, பலாப்பழ ஜாமை சிறிய பந்து போல உருட்டி, மைதா கலவையில் முக்கி எடுத்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை முக்கனி சமையல்! ~
« Reply #14 on: June 03, 2014, 11:17:31 AM »
பலாச்சுளை ஸ்மூத்தி



தேவையானவை:
பலாச்சுளைகள் - 5, பால் - ஒரு கப், சர்க்கரை - கால் கப், தேன் -  சிறிதளவு, ஐஸ்கட்டிகள் - தேவைக்கேற்ப.

செய்முறை:
அடி கனமான பாத்திரத்தில் பால், சர்க்கரை சேர்த்து சுண்டக் காய்ச்சி, ஆறவைக்கவும். பலாச்சுளைகளைப் பொடியாக நறுக்கவும். மிக்ஸி ஜாரில் ஐஸ்கட்டிகள், காய்ச்சி ஆற வைத்த பால், பலாச்சுளைகள் சேர்த்து அடிக்கவும். இதை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே சிறிதளவு தேன் விட்டு பரிமாறவும்.