Author Topic: ~ கணவன், மனைவி நகைசுவை சிரிக்க மட்டும்:- ~  (Read 1157 times)

Offline MysteRy

கணவன், மனைவி நகைசுவை சிரிக்க மட்டும்:-




மனைவி: எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன?
அழகான் முகமா!!!
அன்பான மனமா!!!
பணிவான குணமா!!
கணவன்: உன்னோட இந்த காமெடி தான் "
மனைவி: ?

கணவன்: என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே
மனைவி: கட்டிக்க போறது நான்தானே
கணவன்: துவைக்கிறவனுக்கு தானே கஷ்டம் தெரியும்
மனைவி:?

மனைவி: என்னங்க, தீபாவளி அதுவுமா நான் செய்து வச்சிருந்த பலகாரத்தை
எல்லாம் திருடன் எவனோ புகுந்து சாப்பிட்டுக் கிட்டிருக்கான்?"
கணவன்: "பேசாம தூங்கு, காலையில அவன் செத்து கிடப்பான், விடிந்ததும்
பார்த்துக்கலாம்.."
மனைவி:?

கணவன்: பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும்
புகார் சொல்றாங்க?
மனைவி: நான் என்ன பண்றது, அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.
கணவன்:?

ஒருவன்: "என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா
பைத்தியமே பிடிச்சிடும்..."
மேனேஜர் :"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"
ஒருவன் : "நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"

ஜோதிடர்: கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க ..
கணவன்: இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?
ஜோதிடர்: ?
« Last Edit: May 27, 2014, 07:54:48 PM by MysteRy »