Author Topic: ~ நீர் பிரம்மி செடியின் மருத்துவக்குணங்கள் :- ~  (Read 493 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227463
  • Total likes: 29059
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நீர் பிரம்மி செடியின் மருத்துவக்குணங்கள் :-




நீர் பிரம்மி செடியில் ஆல்கலாய்டுகளும், குளுக்கோசைடுகளும் உள்ளன. இவை உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதுடன் நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

நினைவாற்றலைத் தூண்ட:

நீர் பிரம்மி இலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் காலை வேளை சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

நரம்பு தளர்ச்சி நீங்க:

நீர் பிரம்மி இலையை நிழலில் உலர்த்தி கஷாயம் தயார் செய்து அருந்தினால் நரம்பு தளர்ச்சி மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். மேலும் சிறுநீர் பெருக்கம் ஏற்படும்.

தொண்டை கரகரப்பு குணமாக:

நீர் பிரம்மி இலையை வெண்ணெயில் பொரித்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

கோழைக்கட்டு குணமாக:

நாீர் பிரம்மி வேரை அரைத்து நீர் சேர்த்து கொதிக்க வைத்து நெஞ்சில் தடவினால் கோழைக்கட்டு நீங்கும்.

வீக்கங்கள் கரைய:

நீர் பிரம்மி இலையை ஆமணக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கங்களின் மீது ஒற்றடமிட்டுஅதன்மீது வைத்துக் கட்டினால் வீக்கங்கள் கரையும்.