Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ மூலிகை வனம் - வீட்டுக்கொரு வைத்தியர்... வேதனை போக்கும் வேலிப்பருத்தி..! ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ மூலிகை வனம் - வீட்டுக்கொரு வைத்தியர்... வேதனை போக்கும் வேலிப்பருத்தி..! ~ (Read 661 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227463
Total likes: 29059
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ மூலிகை வனம் - வீட்டுக்கொரு வைத்தியர்... வேதனை போக்கும் வேலிப்பருத்தி..! ~
«
on:
May 12, 2014, 06:44:54 PM »
மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில் தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தையை, ஒவ்வொரு உயிரினத் துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது. ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்து விட்டனர்...கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில்! அத்தகைய மூலிகைகளை மீண்டும் கையில் எடுக்கவும்... அவை பற்றிய புரிதலை உண்டாக்கவுமே...'மூலிகை வனம்’ எனும் இப்பகுதி இங்கே விரிகிறது.
இந்த இதழில் வேலிப்பருத்தி...
மனிதனுக்கான மருத்துவத்தை இலைகளில் வைத்திருக்கிறது, இயற்கை... இந்த உண்மையை சித்தர்கள் உணர்ந்து கொண்டதால்தான் சித்த மருத்துவம் உருவானது. ஆங்கில மருந்துகளுக்கெல்லாம் அடிப்படையாக இருந்தவை சித்தர்களின் ஆராய்ச்சிகள்தான். இன்றைக்கும் பல்வேறு ஆங்கில மருந்துகள் தயாரிப்பில் மூலிகைச்சாறுகள் சேர்க்கப்படுகின்றன.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வேலியோரங்களில் படர்ந்து கிடக்கும் அற்புதமான மூலிகைதான் வேலிப்பருத்தி... இதய வடிவ இலைகள், இரட்டைக் காய்கள், முட்டை வடிவ விதைகளுக்குள் பட்டு போன்ற பஞ்சுகள் கொண்ட வேலிப்பருத்திக்கு, 'உத்தாமணி’ என்ற பெயரும் இருக்கிறது. சித்த மருத்துவத்தில் பெரும்பாலும் உத்தாமணி என்றே குறிப்பிடுகிறார்கள்.
இயற்கை வளங்கள் அனைத்தையும் அழித்த மனிதன் காற்றைக்கூட விட்டு வைக்கவில்லை. கழிவுகளுக்குக் காற்றை காவு கொடுத்துவிட்டு, ஆக்சிஜன் பார்லர்களில் காசு கொடுத்து சுத்தக் காற்று சுவாசிக்கும் நிலை வந்தே விட்டது. சென்னை போன்ற பெருநகரங்களில் வீட்டைவிட்டு வெளியே வரும் மனிதர்கள், முகத்தை முழுவதும் மூடிக் கொண்டுதான் பயணிக்கிறார்கள். அந்தளவுக்கு மாசடைந்து கிடக்கிறது, காற்று. அதையும் மீறி பலருக்கு ஆஸ்துமா போன்ற சுவாச நோய்கள்.
மூச்சிரைப்பைப் போக்கும் கற்பக மிளகு!
சுவாசக் கோளாறை சரி செய்வதற்கு, எளிமையான தீர்வு வேலிப்பருத்தி. இதன் இலையை எடுத்து சுத்தம் செய்து இடித்து சாறு எடுத்து, தினமும் ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால்... ஆஸ்துமா, அலறியடித்துக் கொண்டு ஓடிவிடும். இச்சாறை லேசாக சூடாக்கி, ஆற வைத்து தினமும் ஒரு தேக்கரண்டி வீதம் ஒரு மண்டலம் (48 நாட்கள்) குடித்து வந்தால் சுவாச, காச நோய்கள் காணாமல் போய்விடும். இதன் இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தினமும் காலை நேரத்தில் ஒரு தேக்கரண்டி எடுத்து தேன் கலந்து உண்டு வந்தால், வாயுவால் உண்டாகும் நோய்கள், கைகால் குடைச்சல், இளைப்பு, இருமல், கோழைக்கட்டு நீங்கும். ஒரு குவளையில் கொஞ்சம் மிளகை இட்டு அவை மூழ்கும் அளவுக்கு வேலிப் பருத்தி இலைச்சாறை ஊற்றி, ஊற வைத்து எடுத்து வெயிலில் ஏழு நாட்கள் காய வைத்தால்... அதன் பெயர் 'கற்பக மிளகு’. 'கற்பக மிளகை, தினமும் ஒரு மிளகு வீதம் உட்கொண்டால் மூச்சிரைப்பு நோய் முற்றி லும் குணமாகும் என்கிறது, சித்த மருத்துவம்.
உடல் வலுப்பெற!
ஊட்டச்சத்து பானங்கள் குடிக்கும் குழந்தைகள் வேண்டுமானால், 'நான் வளர்கிறேனே மம்மி’ என விளம்பரங்களில் காட்டப்படுவது போல வேகமாக வளரலாம். ஆனால், உணவுக்கே வழியில்லாத குழந்தை கள் ஊட்டச்சத்துக்கு எங்கு போவார்கள்? ஏழை வீட்டுப் பிள்ளைகள், மார்புக்கூடு முன்தள்ளி நோஞ்சானாகவே வளர்கின்றன. இன்னும் சில குழந்தைகள் என்னதான் ஊட்டச்சத்து கொடுத்தாலும் நோஞ்சானாகவே இருப்பார்கள். அப்படிப்பட்ட குழந்தைகள் உடல் வலுப்பெற உதவுகிறது, வேலிப்பருத்தி. இதன் இலையை நிழலில் உலர்த்தி, பொடி செய்துகொண்டு அதில் ஒரு தேக்கரண்டி, சீரகப்பொடி, அருகம்புல் பொடி ஆகியவற்றில் தலா ஒரு தேக்கரண்டி எடுத்து கஷாயம் செய்து... பனங்கற்கண்டு சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் நோஞ்சான் தன்மை நீங்கி, உடல் வலுப்பெறும்.
ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்!
நாளைய இந்தியாவை வழி நடத்த வேண்டிய இளைஞர்கள், இருபத்தைந்து வயதிலேயே ரத்த அழுத்தம் ஏறிக் கிடக்கிறார்கள். 'பி.பி’ எனச் சுருக்கமாகச் சொல்லப்படும் 'பிளட் பிரஷர்’ உள்ளவர் களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு ஆங்கில மருத்துவத்தில் மாத்திரைகள் உண்டு. ஆனால், காலம் முழுவதும் விழுங்கிக் கொண்டே இருக்கவேண்டும். இடையில் நிறுத்தினால், மீண்டும் ரத்த அழுத்தம் எகிறிவிடும். 'இதற்கு வேறு வழியே இல்லையா?’ என கேட்பவர்களுக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கிறது வேலிப்பருத்தி.
வேலிப்பருத்தி இலைகள் ஆறினை எடுத்து சுத்தம் செய்து, அப்போது கறந்த ஆடு அல்லது மாட்டுப் பாலில் அரை டம்ளர் எடுத்துக் கொள்ள வேண்டும். கறந்த பால் கிடைக்காத பட்சத்தில் கொதிக்க வைத்த பாலை அரை டம்ளர் எடுத்துக் கொள்ளலாம். பாலில் இலையைப் போட்டு நன்றாக அரைத்து, 'பிரம்ம முகூர்த்த வேளை’ எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள் அருந்த வேண்டும். இப்படி, தொடர்ந்து 48 நாட்கள் செய்துவந்தால்... ரத்தத்தில் கலந்துள்ள பித்தநீர் குறைந்து ரத்த அழுத்தம் குறையும். எவ்விதமான பக்கவிளைவுகளும் இல்லாமல் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் இந்த மருந்து, உடல் அசதியைப் போக்கி நரம்புகளைப் புத்துணர்வு பெறச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது.
வயதுக்கு வர வைக்கும் வேலிப்பருத்தி!
வேலிப்பருத்தி இலைச்சாறு, சுக்கு, பெருங்காயம் ஆகியவற்றை பொடி செய்து, காய்ச்சி இளஞ்சூட்டில் பற்று போட்டால்... வாத வலி, வீக்கம் குறையும். யானைக்கால் நோய் தொடக்க நிலையில் இருந்தால் விரைவில் குணமாகும். காணாக்கடி, அரிப்பு, தடிப்பு, கீழ்வாதம், முடக்குவாதம், இடுப்புவலி ஆகியவற்றுக்கு வேலிப்பருத்தி இலைச்சாறை வதக்கி, துணியில் கட்டி ஒத்தடம் கொடுத்தால் குணமாகும். குறிப்பிட்ட வயது வந்த பிறகும், பெண்கள் ருதுவாகாமல் இருந்தால், ஆறு வேலிப்பருத்தி இலை, மூன்று மிளகு ஆகியவற்றை மை போல அரைத்து, 10 தினங்கள் தொடர்ந்து உண்டு வந்தால் நிச்சயம் பலன் கொடுக்கும். வேலிப்பருத்தி இலைச்சாறு, தேன் இரண்டை யும் கலந்து தினமும் ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால்... பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி தீரும் என்கிறார்கள், சித்தர்கள்.
இத்தனை பயன்பாடு மிகுந்த வேலிப் பருத்தியை இனியாவது பயன்படுத்தி, நோயற்ற வாழ்வு வாழ்வோம்...
வாத நோய்க்கு மருந்து!
வேலிப்பருத்தியின் மருத்துவ குணங்களைப் பற்றி பேசிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் காளிமுத்து, ''வேலி ஓரங்களில் படர்ந்து, மனிதனின் வலிகளைக் குறைக்கும் அற்புதமான மூலிகை வேலிப்பருத்தி. இது மிகச் சிறந்த வலிநிவாரணியாகவும், கிருமிநாசினியாகவும், சிறுநீர்ப் பெருக்கியாகவும் பயன் படுகிறது. வேலிப்பருத்தி இலையைப் பறித்து, அரைத்து, துணியில் கட்டி, சூடாக உள்ள தோசைக்கல்லில் துணியை வைத்து எடுத்து ஒத்தடம் கொடுத்தால் ரத்தகட்டு, முழங்கால் வலி, வாதநோய் குறையும்'' என்றார்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ மூலிகை வனம் - வீட்டுக்கொரு வைத்தியர்... வேதனை போக்கும் வேலிப்பருத்தி..! ~