நீலத் தாழைக்கோழி பற்றிய தகவல்கள்:-

நீலத் தாழைக்கோழி கோழியை ஒத்த உருவத்தை உடைய பறவையாகும். இது ஏரிக்கரைகள் போன்ற ஈரமான நிலங்களில் வாழ்கிறது. இவை பெரும்பாலும் இணையுடனும் கூட்டமாகவும் வாழ்கின்றன. இவை பொதுவாக நீலநிறத்தில் இருக்கும். இவற்றில் 13 வகையான சிற்றினங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இப்பறவை ஓரளவு பறக்கும். இவற்றிற்கு விரலிடைச் சவ்வுகள் இல்லை எனினும் நன்றாக நீந்தக் கூடியது.