Author Topic: ~ 30 வகை பிக்னிக் & டூர் ரெசிபி! ~  (Read 1762 times)

Offline MysteRy

ஸ்பெஷல் நட்ஸ் டிலைட்



தேவையானவை:
 கடலைப்பருப்பு - 100 கிராம், உரித்த பூசணி விதை, தர்பூசணி விதை, பரங்கி விதை (சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்) - தலா  கால் கப், பிஸ்தா பருப்பு - 50 கிராம், முழுபச்சைப் பயறு, காய்ந்த பச்சைப் பட்டாணி - தலா 50 கிராம், தனியாத் தூள், சீரகத்தூள், சாட் மசாலாத்தூள் -  தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், நெய் - தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
கடலைப்பருப்பு, பச்சைப் பயறு, பட்டாணியை தனித் தனியாக குறைந்தது 6-10 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை சுத்த மாக வடித்துவிடவும். பட்டாணியை  அரை வேக்காடு பதத்தில் வேக வைத்து,தண்ணீரை உலரவிட்டு எடுத்துக்கொள்ளவும். விதைகள் மற் றும் கடலைப்பருப்பு, பச்சைப் பயறு, பட்டாணி, பிஸ்தாவை நெய்யில் தனித்தனியாக வறுத்துக் கொள்ள வும். அவற்றை ஒன்றாக பெரிய பேஸி னில் கொட்டவும். சூடாக இருக்கும் போதே எலுமிச்சைச் சாறு பிழிந்து, உப்பு, தனியாத்தூள், சீரகத்தூள், சாட் மசாலா சேர்த்துக் கிளறவும். ஆறவைத்து காற்றுப்புகாத டப்பாவில் போடவும்.
இது ஒரு மாதம் வரை நன்றாக இருக்கும்.

Offline MysteRy

புளிச்சக்கீரை தொக்கு



தேவையானவை:
 புளிச்சக்கீரை (கோங்கூரா) - 2 கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் - 2, கடலைப்பருப்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், கடுகு, கறிவேப் பிலை - சிறிதளவு, தாளிக்கும் வடகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், நெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
கடாயில் நெய் விட்டு புளிச்சக்கீரையை வதக்கவும். காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, தனியா, தாளிக்கும் வடகத்தை தனியாக எண்ணெயில் வதக்கி ஆறவிட்டு... புளிச்சக்கீரை, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். (தண்ணீர் சேர்க்க வேண்டாம்). கடுகு, கறிவேப்பிலை தாளித்து இதனுடன் சேர்த்துக் கிளறி வைக்கவும்.
இது 2 நாட்கள் வரை  நன்றாக இருக்கும். சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சப்பாத்தி, இட்லி, தோசைக்கும் சைட் டிஷ் ஆக பயன்படுத்தலாம்.

Offline MysteRy

ராகி செக்கோடிலு



தேவையானவை:
 அரிசி மாவு - ஒரு கப், கேழ்வரகு மாவு, பொட்டுக்கடலை மாவு, மைதா - தலா அரை கப், தேங் காய்த் துருவல் - ஒரு கப், மிளகாய்த்   தூள் - ஒரு டீஸ்பூன், ஓமம் - கால் டீஸ்பூன், எள் - ஒரு டீஸ்பூன், ஃபுட்கலர் (ஆரஞ்சு) - ஒரு சிட்டிகை,  உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
அனைத்து மாவுகளுடன் உப்பு, ஓமம், எள், மிளகாய்த்தூள் சேர்க்கவும். தேங்காய் துருவலில் பால் எடுத்து அதையும் சேர்த்துக் கலக்கவும். பிறகு ஃபுட் கலர் சேர்த்து (தேவைப் பட்டால் நீரும் தெளித்துக் கொள்ளலாம்), கெட்டியான மாவாக பிசையவும். அதை விரல் நீளத்துக்கு உருட்டி, இரண்டு முனையையும் ஒட்டி சிறிய வளையம் மாதிரி செய்து, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதை நாள்பட வைத்து பயன்படுத்தலாம்.

Offline MysteRy

மல்டி விட்டமின் மிக்ஸர்



தேவையானவை:
பொரித்த ஜவ்வரிசி - ஒரு கப், பொட்டுக்கடலை, வேர்க்கடலை - தலா அரை கப், முந்திரிப்பருப்பு - 20, உலர்ந்த திராட்சை - 15,  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஜவ்வரிசி, பொட்டுக்கடலை, வேர்க்கடலை, முந்திரியை தனித்தனியாக வறுத்து, பெரிய பாத்திரத்தில் ஒன்றாக சேர்க்கவும். சூடாக இருக்கும்போதே உப்பு, உலர்ந்த திராட்சை, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, கடைசியாக கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். இதை ஆறவிட்டு காற்றுப்புகாத டப்பா அல்லது பாட்டிலில் வைத்து பயன்படுத்தவும்.
இது 15 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

குறிப்பு:
ஜவ்வரிசியை சிறிது சிறிதாக எண்ணெய் விட்டு பொரிக்கவும். அல்லது, பொரிகடலை வறுக்கும் கடையில் பொரித்தெடுத்து வாங்கிக்கொள்ளவும்.

Offline MysteRy

காஞ்சிபுரம் நெய் இட்லி



தேவையானவை:
இட்லி அரிசி, பச்சரிசி, முழு உளுந்து - தலா ஒரு கப், மிளகு, சீரகம் - தலா 2 டீஸ்பூன்,  சமையல் சோடா - ஒரு சிட்டிகை, பொடித்த சுக்கு - ஒரு டீஸ்பூன், கெட்டித்தயிர் (புளிக்காதது) - அரை லிட்டர், வறுத்த முந்திரி, கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
இட்லி அரிசி, பச்சரிசி, உளுந்தை தனித்தனியாக 2 மணி நேரம் ஊறவைத்து, பிறகு ஒன்று சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும் (மாவு கெட்டியாக இருக்க வேண்டும்). இதை 6 மணி நேரம் அப்படியே விடவும். பிறகு இதனுடன் பொடித்த சுக்கு, உருக்கிய நெய், மிளகு, சீரகம், சமையல் சோடா, உப்பு, கெட்டித்தயிர், வறுத்த முந்திரி சேர்த்து, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். பெரிய குக்கர் பாத்திரத்தில் எண்ணெய் தடவி ஒரு அங்குல உயரத்துக்கு இந்த மாவை அதில் போட்டு, ஆவியில் வேகவிடவும். வெந்ததை நமக்கு விருப்பமான வடிவத்தில் வெட்டி எடுத்துக்கொள்ளலாம்.
இது 2 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

Offline MysteRy

மினி ஸ்பைஸி இட்லி



தேவையானவை:
புழுங்கல் அரிசி - 4 கப், வெந்தயம், கல் உப்பு - தலா ஒரு கைப்பிடி அளவு, ஆம ணக்கு விதை (சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்) - சிறிதளவு. மிளகாய்ப்பொடி செய்ய: காய்ந்த மிளகாய் - 15, பூண்டு - 10 பல், உப்பு - சிறிதளவு, பெருங் காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண் ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
அரிசியை 2 மணி நேரம் தனியாக ஊறவைக்கவும். வெந்தயம் - ஆமணக்கு விதையை ஒன்றாக 5 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். கிரைண்டரில் சிறிது நீர் விட்டு வெந்தயம், ஆமணக்கு விதையை அரைக்கவும். பிறகு அரிசியைப் போட்டு மையாக அரைக்கவும். இதில் உப்பு போட்டு கரைக்கவும். 10 மணி நேரம் கழித்து உபயோகப்படுத்தலாம். குட்டி இட்லித் தட்டில் இட்லி மாவை ஊற்றி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். கடாயில் சிறிதளவு எண்ணெயைக் காயவிட்டு மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கி பெருங்காயத் தூள், உப்பு போட்டு அரைத்துக் கொள்ளவும். இந்த மிளகாய்ப் பொடியுடன், நல்லெண்ணெய் சேர்த்துக் குழைத்து, குட்டி இட்லிகள் மீது தடவி எடுத்து செல்லவும்.
இதை 2 நாள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

Offline MysteRy

ஓலை பக்கோடா



தேவையானவை:
அரிசி மாவு - ஒரு கப், கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா அரை கப்,  வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவுடன்  உப்பு, நெய், எள், மிளகாய்த்தூள், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கலந்து, நீர் விட்டுப் பிசையவும். முறுக்கு குழாயில் ரிப்பன் பக்கோடா அச்சை போட்டு, மாவை சேர்த்து, சூடான எண் ணெயில் பிழிந்து, பொரித்தெடுக்கவும். எண்ணெயை வடித்து, ஆறியபின் காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.
இதை 20 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

Offline MysteRy

மாங்காய் இஞ்சி ஊறுகாய்



தேவையானவை:
மாங்காய் இஞ்சி - 50 கிராம், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சை பழம் - அரை மூடி, உப்பு - ஒரு சிட்டிகை. 

செய்முறை:
மாங்காய் இஞ்சியைத் தோல் சீவி மிகவும் பொடிதாக நறுக்கவும். அதில் எலுமிச்சைச் சாறு  பிழியவும். கடாயில் எண் ணெய் விட்டு கடுகு,  கீறிய பச்சை மிளகாய் தாளித்து... மாங்காய் இஞ்சியுடன் சேர்த்து, உப்பு போட்டு கிளறி வைக்கவும்.
இதை 2 நாட்கள் பயன்படுத்தலாம். தயிர் சாதத்துக்கு இது அருமை யான சைட் டிஷ். சுலப மாக செரிமானம் ஆகக் கூடியது. வயிற்றுக்கு தீங்கு ஏற்படுத்தாத ஊறு காய் இது.

Offline MysteRy

கலர்ஃபுல் மிளகு வடை



தேவையானவை:
வெள்ளை அல்லது கறுப்பு முழு உளுந்து - 2 கப், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், ஃபுட் கலர் (ஆரஞ்சு) - சிறிதளவு, கறுப்பு எள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, ரவை - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
உளுந்தைக் கழுவி ஊறவைக்கவும். ரவையை யும் ஊறவைக்கவும். 30 நிமிடங்கள் கழித்து இவற்றிலிருந்து தண்ணீரை ஒட்ட வடித்து, ஒன்றுசேர்த்து... உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கிரைண் டரில் அரைக்கவும். மாவு நன்றாக மசிந்ததும் எள், மிளகு, சீரகம் சேர்த்து அரைக்கவும். ஃபுட் கலர் சேர்த்து மாவை எடுத்து சிறிய உருண்டையாக உருட்டி, வடையாக தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இது ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.

Offline MysteRy

இன்ஸ்டன்ட் குழிபணியாரம்



தேவையானவை:
 தோசை மாவு - ஒரு கப், கடுகு - சிறிதளவு, பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, துருவிய இஞ்சி - தலா ஒரு டீஸ்பூன், நெய் - சிறிதளவு, எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
கடாயில் எண்ணெயைக் காயவிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் விழுது, இஞ்சித் துருவல் சேர்த்து தாளித்து, தோசை மாவுடன் சேர்க்கவும். பொடி யாக நறுக்கிய கொத்தமல்லித்தழை யையும் மாவில் போட்டுக் கலக்கி ஒரு சிட்டிகை மட்டும் உப்பு சேர்க் கவும் (ஏற்கெனவே நாம் தோசை மாவில் உப்பு சேர்த்திருப்போம்).  குழிபணியார சட்டியில் சிறிது நெய் தடவி, மாவை ஊற்றி, வெந்ததும் திருப்பிப் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
இது 2 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

Offline MysteRy

ரோஸ் குக்கீஸ்



தேவையானவை:
 அச்சு முறுக்கு மோல்டு - ஒன்று, மைதா - ஒரு கப், அரிசி மாவு - அரை கப், தேங்காய் - அரை மூடி (துருவி, மிக்ஸியில் அடித்து பால் எடுத்துக்கொள்ளவும்), பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வெனிலா எசன்ஸ் - 3 துளி, பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:
மைதா மாவு, அரிசி மாவுடன் பேக்கிங் பவுடர் போட்டு சலிக்கவும். அதனுடன் தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள், பொடித்த சர்க்கரையை சேர்த்து, தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்கவும். இதில் எசன்ஸ் சேர்த்து கரண்டி (அ) பீட்டர் (ஙிமீணீtமீக்ஷீ) கொண்டு நன்கு அடிக்கவும்.
கடாயில் எண்ணெயைச் சூடாக்கவும். அச்சு முறுக்கு மோல்டை எண்ணெயில் விட்டு எடுக்கவும். பிறகு கரைத்த மாவில் இந்த 'மோல்டை’ முக்கி எடுத்து எண்ணெய்க்குள் போட்டு, திருப்பிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

குறிப்பு:
ஒவ்வொரு முறையும் மோல்டை சூடான எண்ணெயில் விட்டு எடுத்த பிறகே மாவில் தோய்த்து எடுத்து பொரிக்க வேண்டும்.
இதை 20-25 நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

Offline MysteRy

மிளகு புளிக்குழம்பு



தேவையானவை:
 மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், புளிக்கரைசல் - ஒன்றரை டம்ளர், பூண்டு - 15 பல், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, வெந்தயம் - ஒரு டீஸ்பூன், சின்ன கத்திரிக்காய் - 5, எண்ணெய் - தாளிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
மிளகு, தனியாவை தனித்தனியாக வறுத்துப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் போட்டு, வெந்தயம், நறுக்கிய கத்திரிக்காய், பூண்டு சேர்த்து தாளித்து... புளிக்கரைசல் ஊற்றி, உப்பு போட்டு கொதிக்கவிடவும். பிறகு, மஞ்சள்தூள் சேர்த்து, மிளகு, தனியா பொடியையும் சேர்த்து கொதிக்கவைக்கவும். நன்றாக கொதித்து சுண்டி வரும்போது இறக்கவும்.
இந்த மிளகு புளிக்குழம்பு, 4 நாட்கள் வரை நன்றாக இருக்கும். வெளியூர் செல்லும்போது சாதம் மட்டும் வெளியில் வாங்கிக்கொண்டால், இதை ஊற்றி பிசைந்து சாப்பிடலாம். இதை இட்லி, சப்பாத்திக்கும் தொட்டுச் சாப்பிடலாம்.

Offline MysteRy

திடீர் மோர்க்குழம்பு



தேவையானவை:
 தயிர் - ஒரு கப், கடலை மாவு, அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்டைக்காய் - 5 (நறுக்கிக்கொள்ளவும்) கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப,

செய்முறை:
ஒரு கப் தயிரைக் கடைந்து ஒன்றரை கப் மோர் ஆக்கி, அதில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து... கடலை மாவு, அரிசி மாவு போட்டு கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்... கடுகு, கறிவேப் பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, வெண்டைக்காய் சேர்த்து வதக்கி, தயிர் கரைசலை ஊற்றி, தனியாத்தூள் சேர்க்கவும். ஒரு பொங்கு பொங்கி நுரைத்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
இது 2 நாட்கள் வரை நன்றாக இருக்கும். சாதம் மட்டும் எடுத்துச் சென்றாலோ அல்லது சாதம் வெளி யில் வாங்கிக் கொண்டாலோ இதை ஊற்றி பிசைந்து சாப்பிடலாம்.

Offline MysteRy

ஹெல்தி ஃப்ரிட்டர்ஸ்



தேவையானவை:
 கடலை மாவு, மைதா மாவு, சோள மாவு - 2 தலா டேபிள்ஸ்பூன், நீளவாக்கில் மிக மெல்லியதாக நறுக்கிய கேரட், முட்டைகோஸ் - தலா கால் கப், பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), காய்ந்த ரொட்டித்தூள் - 2 டேபிள்ஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன்,    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
நறுக்கிய கோஸ், கேரட்டை ஐஸ் வாட்டரில் 15 நிமிடம் போட்டு வைக்கவும். கடலை மாவு, மைதா மாவு, சோள மாவு மூன்றையும் ஒன்றாகக் கலந்து... உப்பு,         மஞ்சள்தூள், சோம்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், ரொட்டித்தூள் போட்டுப் பிசிறவும். கேரட், கோஸை ஒட்டப் பிழிந்து, பிசிறி வைத்த மாவோடு சேர்த்து,  சிறிதளவு நீர் ஊற்றி கெட்டியாக பிசையவும். கடாயில் எண்ணெயை காயவிட்டு, மாவை பக்கோடா மாதிரி கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.
இது 3 நாட்கள் வரை நன்றாக இருக்கும். மொமொறுவென்று சூப்பர் சுவையில் அசத்தும் இதை, சாதத்துக்கு சைட் டிஷ்ஷாகவும் பயன்படுத்தலாம்.

Offline MysteRy

மட்கி



தேவையானவை:
 மைதா - ஒரு கப், பொட்டுக்கடலை மாவு - அரை கப், சோள மாவு - கால் கப், ஓமம் - அரை டீஸ்பூன், வெண்ணெய் - 50 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, சோம்பு - கால் டீஸ்பூன், தயிர் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
மைதா மாவை நன்றாக சலிக்கவும். ஓமம், சோம்பை பொடி செய்து அதனுடன் சேர்க்கவும். அதில் சோள மாவு,  பொட்டுக்கடலை மாவு, உப்பு, சமையல் சோடா, வெண்ணெய் சேர்த்து கைகளால் நன்றாக பிசறிவிடவும். தயிரை வெது வெதுப்பான நீர் கலந்து மோர் ஆக்கி மாவில் ஊற்றி கெட்டியாக பிசையவும். 2 மணி நேரம் மூடி வைத்து ஊறவிடவும். பிறகு, சிறிய சப்பாத்தியாக இட்டு, முக்கோணமாக மடித்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இது ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.