Author Topic: ~ 30 வகை பிக்னிக் & டூர் ரெசிபி! ~  (Read 2064 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226934
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பாக்கர் வாடி



தேவையானவை:
கடலை மாவு - 2 கப், அரிசி மாவு - ஒரு கப், சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன், கறுப்பு எள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், ஆம்சூர் பொடி (மாங்காய்த்தூள்) - ஒரு டீஸ்பூன், புளித் தண்ணீர் - கால் கப், கொப்பரைத் துருவல் - அரை கப், வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்பூன், கசகசா - ஒரு டீஸ்பூன், சர்க்கரை, உப்பு - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு,

செய்முறை:
 கொப்பரைத் துருவல், வெள்ளை எள், கசகசா ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து ஒன்றுசேர்த்துப் பொடிக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு மூன்றையும் சலித்து... உப்பு, சர்க்கரை, கறுப்பு எள், கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பொடி சேர்த்து, எண்ணெய் சேர்த் துப் பிசைந்து, பூரிக்கு இடுவது போல் இட்டு வைக்கவும். அதன் மேல் புளித் தண்ணீரை தடவவும். நடுவில் வறுத்துப் பொடித்து வைத்த பொடியை வைக்கவும். இதை பாய் மடிப்பது மாதிரி சுருட்டி, இருபுறமும் ஓரங்களை வெட்டி, ஸ்லைஸ் போட்டு.... எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இதை 10, 15 நாட்கள்  வைத்திருந்து பயன்படுத்தலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226934
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
உருளைக்கிழங்கு முறுக்கு



தேவையானவை:
மைதா - 2 கப், அரிசி மாவு - அரை கப், வேகவைத்து, தோல் உரித்து, மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப், சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சமையல் தேங்காய் எண்ணெய் -  பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
மைதாவை சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசிறி, இட்லித் தட்டில் வேகவைத்து ஆறவிடவும். இத னுடன் அரிசி மாவு, மசித்த உருளைக் கிழங்கு, உப்பு, பெருங்காயத்தூள், சீரகம், வெண்ணெய் சேர்த்து, மென்மை யான கெட்டி மாவாக பிசையவும்.  மாவை முறுக்கு அச்சு அல்லது தேன்குழல் அச்சில் போட்டு, காயும் எண்ணெயில் பிழிந்து, பிறகு திருப்பி போட்டு பொரித்தெடுக்கவும். ஆறியபின் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
இதை ஒரு வாரம் வரை உபயோகப்படுத்தலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226934
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நொக்கல்



தேவையானவை:
கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - அரை கப், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் - தலா ஒரு சிட்டிகை, வெனிலா எசன்ஸ் - 2 துளி, நெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை:
கடலை மாவு, அரிசி மாவுடன் உருக்கிய நெய் சேர்த்து, நீர் விட்டு கெட்டியான மாவாக பிசையவும். காராசேவு கரண்டியில் மாவைத் தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சர்க்கரையில் நீர் விட்டு முற்றின பாகாக காய்ச்சி... ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள், வெனிலா எசன்ஸ் சேர்க்கவும். பொரித்த காரா சேவை அதில் கொட்டி நன்றாகக் கிளறி இறக்கவும். அதில் சர்க்கரை படிந்து, பார்ப்பதற்கு அழகான ஐஸ் மாதிரியும், சுவைப்பதற்கு இனிப்பாகவும் இருக்கும்.
இதை 10-15 நாட்கள் வைத்திருந்து சுவைக்கலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226934
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஓமம் பூரி



தேவையானவை:
கோதுமை மாவு - ஒரு கப், சர்க்கரை - சிறிதளவு, ஓமம் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம், கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
கோதுமை மாவுடன் கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும் (எண்ணெய் நீங்கலாக) சேர்த்துக் கலந்து, நீர் விட்டுப் பிசையவும். மாவை பூரிகளாக இட்டு, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இதற்கு சைட் டிஷ் எதுவும் தேவையில்லை. 
இதை ஒரு நாள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226934
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கம்பு மைசூர்பாக்



தேவையானவை:
கம்பு - ஒரு கப், துருவிய வெல்லம் - ஒரு கப் , நெய் - 100 கிராம், பிஸ்தா - முந்திரி (துருவியது) - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
 கடாயில் நெய் விட்டு கம்பு மாவை வறுத்துக்கொள்ளவும். வெல்லத்தை பாகு காய்ச்சி, வறுத்த கம்புமாவில் ஊற்றி கட்டிதட்டாமல், கைவிடாமல் கிளறவும். நெய் தடவிய தட்டில் கிளறிய கலவையைக் கொட்டி, அதன் மீது துருவிய பிஸ்தா - முந்திரியைத் தூவவும். சற்று ஆறியதும் துண்டுகள் போட்டு வைக்கவும்.
இது புரதச்சத்து, இரும்புச்சத்து நிறைந்தது. 10 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226934
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மல்லி மசாலா பிஸ்கட்



தேவையானவை:
மைதா - ஒரு கப், கோதுமை மாவு - அரை கப், பச்சை மிளகாய் - 4, ஃபுட் கலர் (பச்சை) - ஒரு சிட்டிகை, கொத்தமல்லித் தழை - சிறிய கட்டு, சீரகம், பெருங்காயத்தூள், இஞ்சி - பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
மைதா, கோதுமை மாவுடன் சிறிதளவு நீர் தெளித்து பிசிறி, இட்லித் தட்டில் ஆவியில் வேகவைத்து உதிர்த்துக் கொள்ளவும். அதோடு விழு தாக அரைத்த பச்சை மிளகாயும், கொத்த மல்லித் தழையின் சாறும் சேர்த்து, மற்ற பொருட்களையும் (எண்ணெய்  நீங்கலாக) போட்டுப் பிசைந்து, சப்பாத்திகளாக இடவும். பிறகு, இதை விருப்பமான வடிவத்தில் வெட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இதை 4 நாட்கள் வரை பயன் படுத்தலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226934
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பாப்கார்ன் மசாலா



தேவையானவை:
காய்ந்த வெள்ளை அல்லது மஞ்சள் சோள முத்துக்கள்  (கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்) - ஒரு கப், கறிவேப்பிலை - சிறிதளவு, தனியாத்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், எண்ணெய், உப்பு - தலா ஒரு டீஸ்பூன்,

செய்முறை:
வாணலி அல்லது அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடு ஏறியதும்  வெள்ளை சோளம் அல்லது மஞ்சள் சோள முத்துக் களை சேர்த்து, மூடி போடவும். 10 நிமிடத்தில் பூப்போல பொரிந்துவிடும். அதை தனியே எடுத்து வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந் ததும் கறிவேப்பிலையை தாளித்து, பெருங்காயத்தூள், மிளகுத்தூள், தனியாத்தூள் சேர்த்து, பொரிந்த பாப்கார்ன், உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் காற்றுப்புகாத டப்பா வில் அடைத்துவிட்டால்... நாள் பட வைத்து சாப்பிடலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226934
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஸ்பெஷல் பகாளாபாத்



தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப், வெண் ணெய் - 50 கிராம், தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், முந்திரிப்பருப்பு - 10, பச்சை திராட்சை - 15, பொடியாக நறுக்கிய பச்சை கொத்தமல்லித் தழை - அரை கப், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
பச்சரிசியை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வெந்த சாதத்தை கிரைண்டர் அல்லது மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளவும். அரைக்கும்போதே பால், தயிர், வெண்ணெய், உப்பு சேர்க்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, பச்சை திராட்சை, முந்திரிப்பருப்பு சேர்த்துக் கிளறி வைக்கவும்.
இதனை விடியற்காலை செய்தாலும் இரவு வரை புளிக்காது. எளிதில் செரிமானம் ஆகக் கூடியது. புளிப்பு சுவை விரும்புகிறவர்கள் பால் அளவை குறைத்து, தயிரின் அளவை அதிகப் படுத்தலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226934
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மிளகு காராசேவ்



தேவையானவை:
கடலை மாவு, சோள மாவு - தலா அரை கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், சமையல் சோடா - தலா ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
மாவுகள் அனைத்தையும் ஒன்றாக சலித்துக்கொண்டு, உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். சமையல் சோடா, நெய் இரண்டையும் ஒரு தட்டில் போட்டு குழைத்து நுரை வரும் பதம் செய்து, சலித்த மாவில் சேர்க்கவும். பிறகு பொடித்த சீரகம், பொடித்த மிளகை மாவில் சேர்க்கவும். மேலும் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துப் பிசையவும் (அதிக கெட்டியாகவோ, தளர்வாகவோ இருக்கக் கூடாது. மாவு நடுத்தர கலவையாக இருக்க வேண்டும்). வாணலியில் எண்ணெயை காயவிட்டு, காராசேவ் கரண்டியில் மாவைப் போட்டு தேய்த்து, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இது 10 நாள்வரை நன்றாக இருக்கும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226934
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கார சப்பாத்தி



தேவையானவை:
கோதுமை மாவு - ஒரு கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை (பொடிக்கவும்) - ஒரு டீஸ்பூன், வறுத்துப் பொடித்த சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - (மாவு பிசைய) 5 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, நெய் - தேவையான அளவு. 

செய்முறை:
கோதுமை மாவோடு மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் (நெய் நீங்கலாக) சேர்த்துக் கலந்து, நீர் விட்டு கெட்டியான மாவாக பிசையவும். மாவை உருண்டையாக்கி, சப்பாத்தியாக திரட்டவும். தோசைக்கல்லில் நெய் தடவி காயவிட்டு, திரட்டிய சப்பாத்தியைப் போட்டு, அதன்மீது துணியை வைத்து சீராக அழுத்திவிட்டு, பொன்னிறமாக சுட்டு எடுக்கவும் (ரொட்டி மேக்கரில் வைத்தும் சுட்டு எடுக்கலாம்).
இது ஒரு வாரம் வரை கெடாது. இதை அப்படியே சாப்பிடலாம். அல்லது... வெண்ணெய், சாஸ், ஊறுகாய் தொட்டும் சாப்பிடலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226934
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கோகனட் கலர் பால்ஸ்



தேவையானவை:
முற்றிய தேங்காயின் துருவல், சர்க்கரை - தலா 2 கப், வறுத்துப் பொடித்த ரவை - ஒரு டேபிள்ஸ்பூன், ஃபுட் கலர் (விருப்பமானது) - சிறிதளவு, கிராம்பு - 2 (வறுத்துப் பொடிக்கவும்),  ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, ஜெம்ஸ் மிட்டாய் அல்லது கலர் அரிசி மிட்டாய் - தேவையான அளவு, நெய் - 2 டீஸ்பூன். 

செய்முறை:
தேங்காய்த் துரு வலை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். சர்க்கரை யைப் பாகு காய்ச்சி, கெட்டி கம்பி பதம் வந்ததும்... வறுத்து பொடித்த ரவை, கிராம்புத்தூள் போட்டுக் கலந்து, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும். கடைசியாக ஃபுட் கலர், சிறிதளவு மிட்டாய் சேர்த்து, 2 டீஸ்பூன் நெய் விட்டு இறக்கி உருண்டையாக பிடிக்கவும். உருண்டை யின் நடுவே மிட்டாயை செருகவும்.
4 நாட்கள் வரை இந்த உருண்டை நன்றாக இருக்கும். தேங்காய் துருவலை வறுத்து செய்தால், இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226934
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
எண்ணெய் வாழைக்காய்



தேவையானவை:
வாழைக்காய் - 2, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கடலை மாவு, அரிசி மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,  சோள மாவு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
அனைத்துப் பொருட்களையும் (வாழைக்காய், எண்ணெய் நீங்கலாக) ஒன்றுசேர்த்து சிறிதளவு நீர் விட்டு கெட்டியாக பிசையவும்     (பஜ்ஜி மாவு போல் தளர்வாகவும், பக்கோடா மாவு பிசைவது மாதிரி மிகவும் கெட்டியாகவும் இல்லாமல், இரண்டுக்கும் நடுத்தர அளவாக இருக்க வேண்டும்). தோல் சீவி, வட்டமாக, குண்டு குண்டாக நறுக்கிய  வாழைக்காயை மாவில் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு, ஊறிய வாழைக்காயை சேர்த்துப் புரட்டவும். கலந்த சாதத் துக்கு சைட் டிஷ்ஷாக வும்... சப்பாத்தி, இட் லிக்கு தொட்டுக் கொள்ள வும் இதைப் பயன்படுத்த லாம்.
இது ஒரு நாள் வரை நன்றாக இருக்கும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226934
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ரயில் புளியோதரை



தேவையானவை:
பாஸ்மதி அரிசி - ஒரு கப், புளி - சிறிதளவு, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, எள், வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, மஞ்சள்தூள் - சிறிதளவு, முந்திரி, வேர்க்கடலை - தலா 10, நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
காய்ந்த மிளகாய், எள், வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்¬றை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். அரிசியை வெறும் வாணலியில் வறுத்து சாதமாக வடித்துக்கொள்ளவும். கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, முந்திரி, வேர்க்கடலையைப் போட்டு தாளித்து, புளிக்கரைசலை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, வறுத்து பொடித்த பொடியை சேர்த்துக் கிளறி, நன்றாக சுண்டவிட்டால்... புளியோதரை பேஸ்ட் ரெடி. இதை வடித்த சாதத்தில் சேர்த்துக் கிளறி, 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி புரட்டி வைக்கவும்.
சூப்பர் சுவையுடன் இருக்கும் இந்தப் புளியோதரையை 2 நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226934
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பரோட்டா



தேவையானவை:
மைதா - 2 கப், சமையல் சோடா, பேக்கிங் பவுடர் - தலா ஒரு சிட்டிகை, எண்ணெய் - கால் கப்,  உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
மாவோடு உப்பு, எண்ணெய் சேர்த்து, தண்ணீர் விட்டுப் பிசையவும். 4 மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு சமையல் சோடா, பேக்கிங் பவுடரை நெய்யில் குழைத்து ஊறிய மாவோடு சேர்க்கவும். மாவை உருட்டி, சப்பாத்தி மாதிரி இட்டு, புடவை கொசுவம் மாதிரி மடித்து பின் உருண்டையாக்கவும். இதை கனமான பரோட்டாவாக தட்டவும். தோசைக்கல்லை காயவிட்டு, பரோட்டாவைப் போட்டு சுற்றிலும் எண்ணெய் ஊற்றி சுடவும். சுட்டு எடுத்த பரோட்டாவை சூட்டுடனேயே இருபுறமும் ஓரங்களை இரு கைகளாலும் தட்டவும். வேண்டிய அளவு செய்து அடுக்கிக்கொள்ளவும்.
இது 2 நாட்கள் வரை நன்றாக  இருக்கும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226934
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பீட்ரூட் பச்சடி



தேவையானவை:
 பீட்ரூட் (பெரியது) - ஒன்று, நெய் - சிறிதளவு, சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, முந்திரி - 5, டூட்டி ஃப்ரூட்டி - ஒரு டீஸ்பூன் (பேக்கரியில் கிடைக்கும்).

செய்முறை:
பீட்ரூட்டை தோல் சீவி துருவி... நெய் ஊற்றி வதக்கவும். அதில் தண்ணீர் சிறிதளவு விட்டு கடாயில் வேகவிடவும். நன்றாக வெந்ததும், சர்க்கரை சேர்க்க வும். ஒன்றாகக் கலந்து சுருண்டு வரும்போது... ஏலக் காய்த்தூள், உடைத்த முந்திரி, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து இறக்கவும். இதன் டேஸ்ட் ஜாம் மாதிரி 'ஜம்’மென்று இருக்கும். சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம்.
இதை 2 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.