Author Topic: ~ வசந்த நீர் & முலாம்பழ டிலைட் ~  (Read 425 times)

Online MysteRy




வசந்த நீர்

தேவையானவை:
இளநீர் காய்கள் - 2 (காய்களில் உள்ள தண்ணீரை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளுங்கள். இளநீர் வழுக்கையை பொடியாக நறுக்கிக்கொள் ளுங்கள்), தேன் - ஒரு டீஸ்பூன், எலு மிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், துளசி இலை - 5, ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.

செய்முறை:
வாய் அகன்ற ஒரு சட்டியில் ஐஸ் கட்டிகளைப் போட்டுவிடுங்கள். இப்போது அதன் உள்ளே இன்னொரு சிறிய பாத்திரத்தை வைத்து அத்தனையையும் கலந்துவிட்டால் அற்புத மான வசந்த நீர் தயார் (இளநீரோடு ஐஸ்கட்டிகளை கலந்தால் 'சொதசொத’ என்றாகிவிடும் என்பதால்தான் இந்த ஏற்பாடு). தேவைப்படும்போது கிளாஸில் வசந்த நீரை ஊற்றிக் கொடுக்கலாம்.


முலாம்பழ டிலைட்

தேவையானவை:
முலாம் பழம் - ஒன்று, நாட்டுச்சர்க்கரை - 3 டீஸ்பூன், இஞ்சிச் சாறு - 2 டீஸ்பூன், வெனிலா எசன்ஸ் - ஒரு துளி, ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.

செய்முறை:
முலாம் பழத்தை தோல் சீவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கப்பில் நறுக்கிய முலாம் பழத்தைப் போட்டு, மேலே கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும்  சேர்த்துக் கலந்தால்... சத்தான முலாம்பழ டிலைட் ரெடி!
« Last Edit: May 10, 2014, 07:53:17 AM by MysteRy »