Author Topic: ~ தாளிச்ச மோர் & கேரட் ஆரஞ்சு ஜூஸ் ~  (Read 413 times)

Offline MysteRy




தாளிச்ச மோர்

தேவையானவை:
தயிர் - ஒரு கப், ஐஸ் வாட்டர் - தேவையான அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:
தயிரை மண் சட்டியில் விட்டு, ஐஸ் வாட்டர் ஊற்றி நன்கு கடைந்து, உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு, அடுப்பில் வாணலியை வைத்து, சூடானதும் எண்ணெய் ஊற்றி... கடுகு, காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, அதனை அப்படியே மோரில் சேர்த்துவிட்டால்... வெயிலுக்கு இதமான தாளிச்ச மோர் ரெடி!



கேரட்  ஆரஞ்சு ஜூஸ்

தேவையானவை:
 கேரட், ஆரஞ்சுப்பழம்  - தலா ஒன்று, தேன் - ஒன்றரை டீஸ்பூன், புதினா - 5 இலைகள், ஐஸ் கட்டிகள் - சிறிதளவு.

செய்முறை:
கேரட் மற்றும் ஆரஞ்சு பழத்தை தோல் நீக்கி சதைப்பற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து இறுத்து ஜூஸ் எடுத்துக்கொள்ளுங்கள். இதை ஒரு கிளாஸில் ஊற்றி... தேன், பொடியாக நறுக்கிய புதினா இலைகள், ஐஸ்கட்டிகள் சேர்த்தால்... அட்ட காசமான சுவையில் ஜூஸ் ரெடி.
குழந்தைகள் பெரும்பாலும் கேரட் ஜூஸை விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு இப்படிக் கொடுத்தால் 'மடமட’வென்று குடித்து விட்டு, 'ஒன்ஸ்மோர்’ கேட்பார்கள்.
« Last Edit: May 09, 2014, 01:50:35 PM by MysteRy »