Author Topic: ~ ஜிஞ்சர் - டேட்ஸ் சாஸ் ~  (Read 463 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226934
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஜிஞ்சர் - டேட்ஸ் சாஸ்



தேவையானவை:
இஞ்சி - 50 கிராம், பேரீச்சம்பழம் - 5, புளி - சிறிய எலுமிச்சை அளவு, வெல்லம் - 100 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெல்லம், கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் இரண்டையும் மூழ்கும் அளவு நீர் ஊற்றி அரை மணி நேரம் ஊறவைக்கவும், இஞ்சியை நன்றாகக் கழுவி நறுக்கிக்கொள்ளவும். புளியைக் கரைத்துக்கொள்ளவும். இஞ்சி, பேரீச்சம்பழம், வெல்லம், உப்பு, மிளகாய்த் தூள் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அரைத்த விழுதை சேர்த்து... கொதி வந்ததும் புளிக்கரைசலை ஊற்றவும். அனைத்தையும் நன்கு கொதிக்கவிடவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). கொதித்தவுடன் இறக்கி, ஆறியபின் பரிமாறவும்.
இட்லி, தோசை, பூரி, சப்பாத்திக்கு சூப்பர் சைட் டிஷ் இது.