Author Topic: சருகுச் சேலைக்காரி …!  (Read 6991 times)

Offline Yousuf

சருகுச் சேலைக்காரி …!
« on: November 29, 2011, 09:51:00 AM »
1. சருகுச் சேலைக்காரி சமையலுக்கு உதவுவாள். அவள் யார்?

2. கோடையில் சுற்றி வரும்; வாடையில் முடங்கி விடும். அது என்ன?

3. கொலுவிலும் இருக்கும், குழந்தையிடமும் இருக்கும். அது என்ன?

4. கையை வெட்டுவார்; கழுத்தை வெட்டுவார். ஆனாலும் நல்லவர். யார் அவர்?

5. கூடவே வருவான். ஆனால் பேசமாட்டான். யார் அவன்?

6. கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்?

7. குட்டிப் போடும். ஆனால் எட்டிப் பறக்கும். அது என்ன?

8. கிளை இல்லா மரம் வெட்ட வெட்ட வளரும். அது என்ன?

9. கடிபடமாட்டான் பிடிபடமாட்டான். அவன் யார்?

10. ஓட்டுக்குள்ளே வீடு; வீட்டுக்குள்ளே கூடு. அது என்ன?

Offline Global Angel

Re: சருகுச் சேலைக்காரி …!
« Reply #1 on: November 30, 2011, 04:19:02 AM »
1)வெங்காயம்

2)விசிறி

3)பொம்மை

4)டேய்லர்

5)நிழல்

6)படகு

7)வாழை

8)முடி

9)காற்று

10) நத்தை /ஆமை
                    

Offline MysteRy

Re: சருகுச் சேலைக்காரி …!
« Reply #2 on: December 18, 2011, 06:38:38 PM »
1)வெங்காயம்

2)விசிறி

3)பொம்மை

4)டேய்லர்

5)நிழல்

6)படகு

7)வாழை

8)முடி

9)காற்று

10) நத்தை /ஆமை





KELVIKAELLAAM IVANGA BATHIL SOLITHANGALAE ...
« Last Edit: February 20, 2012, 11:08:10 PM by MysteRy »

Offline Yousuf

Re: சருகுச் சேலைக்காரி …!
« Reply #3 on: December 18, 2011, 11:14:09 PM »
மிகச்சரியான விடை ஏஞ்செல் & மிஸ்டரி!

நன்று!