Author Topic: தோசை சாண்ட்விச்!  (Read 1657 times)

Offline Yousuf

தோசை சாண்ட்விச்!
« on: November 29, 2011, 09:40:34 AM »
தேவையான பொருட்கள்:

தோசைமாவு - 2 கப்
உருளைக்கிழங்கு - 2
நறுக்கிய காய்கறிக்கலவை - 1 கப்
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
மல்லித்தழை - சிறிதளவு
துருவிய பனீர் - அரை கப்
உப்பு, எண்ணைய் - தேவைக்கேற்ப


செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். அத்துடன் பொடியாக நறுக்கிய காய்கறிகளை வேக வைத்து சேர்த்துக் கொள்ளவும். மிளகாய்த்தூள், மல்லித்தழை, பனீர், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தோசை மாவை சிறு தோசைகளாக ஊற்றி, சுற்றி எண்ணைய் ஊற்றி, நன்கு வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.

ஒரு தோசையின் மேல் சிறிது காய்கறிக் கலவையை வைத்து, மற்றொரு தோசையால் மூடி சாண்ட்விச் போல் செய்து கொள்ளவும். இதில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், புரதச்சத்து, தாதுக்கள் நிறைந்துள்ளன.