« Reply #15 on: April 24, 2014, 07:25:11 PM »
நெல்லிக்காய் பிரியாணி

தேவையானவை:
பெரிய நெல்லிக்காய் - 15, பாசுமதி அரிசி - ஒன்றரை கப், துருவிய தேங்காய் - கால் கப், பச்சை மிளகாய் - 3, வேர்க்கடலை - 3 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவைத்து, 3 கப் நீர் சேர்த்து உதிர் உதிராக சாதம் வடித்துக் கொள்ளவும். நெல்லிக்காயை கேரட் துருவியில் துருவவும் (கொட்டையை நீக்கிவிடவும்). வாணலியில் எண்ணெய் ஊற்றி, நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாயை வதக்கி, வேர்க்கடலை சேர்த்து, துருவிய நெல்லிக்காய், துருவிய தேங்காய் சேர்த்து மேலும் வதக்கி, உப்பு சேர்த்து இறக்கிவிடவும். வெந்த சாதத்தை வதக்கிய கலவையில் சேர்த்துப் புரட்டி உதிர் உதிராகக் கிளறவும். கொத்த மல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.
« Last Edit: April 25, 2014, 04:04:17 PM by MysteRy »

Logged