Author Topic: ~ செல்’ டிப்ஸ்! ~  (Read 595 times)

Offline MysteRy

~ செல்’ டிப்ஸ்! ~
« on: April 24, 2014, 11:20:51 AM »
செல்’ டிப்ஸ்!



செல்போனில் ஸ்க்ரீன் சேவர், மூவிங் வால்பேப்பர் போன்றவற்றை உபயோகப் படுத்தும்போது, பேட்டரியின் சார்ஜ் அதிகமாக செலவாகும். அதனால் வெறும் படங்களை வால்பேப்பராக பயன்படுத்தும்போது சார்ஜை மிச்சப்படுத்தலாம். டவர் கிடைக்காத பட்சத்தில் செல்போனை ஆஃப் செய்து வைத்தால் பேட்டரியில் சார்ஜ் மேலும் நீடிக்கும்.




உங்கள் செல்போனுக்கு வரும் எஸ்.எம்.எஸ்-களில் தேவையானதை தவிர்த்து, மற்றதை உடனுக்குடன் அழித்துவிடுங்கள். இதனால் இன்பாக்ஸ் நிரம்பி வழிவது மற்றும் தேவையில்லாமல் பேட்டரி சார்ஜ் குறைவதில் இருந்து தப்பிக்கலாம். ஆப்ஸ்கள் மற்றும் சாஃப்ட்வேர்கள், தேவையில்லாத பட்சத்தில் அப்லோடு செய்வதை தவிர்ப்பது நல்லது.




கீ-போர்டின் பின்புறம் ஒளிரும் ' பேக் லைட் ’ மற்றும் 'பவர் சேவர் லைட்’ போன்றவற்றை அணைத்து வைப்பதால், பேட்டரியின் ஆற்றலை மிச்சப் படுத்தலாம். 'கீ-பேட்’ டோன்கள், உபயோகிக்கும் பட்சத்தில் 'லைட்’ கள் அவசியம் இல்லை. தேவைப்பட்டால் இரவு நேரத்தில் மட்டும் 'ஆன்’ செய்து பயன்படுத்தி, பேட்டரியின் ஆயுளைக் காக்கலாம். செல்போனின் 'டிஸ்பிளே செட்டிங்ஸ்’ என்கிற பகுதியில் இந்த ஆப்ஷன்கள் இருக்கும்.

செல்போன் பேட்டரியின் ஆயுளைக் கூட்ட, எப்போது பேட்டரியின் சார்ஜ் தீர்கிறதோ... அப்போது சார்ஜ் செய்தால் போதும். ரெட் சிக்னல் காட்டியபின் அதிக நேரம் கழித்து சார்ஜ் செய்வது, விடிய விடிய சார்ஜ் செய்வதெல்லாம் கூடாது. பேட்டரியில் முழுவதும் சார்ஜ் ஏறிய பிறகு உபயோகப்படுத்துவது, பேட்டரியின் ஆயுளைக் கூட்டும்.