Author Topic: பூ விலங்குகள்  (Read 396 times)

Offline thamilan

பூ விலங்குகள்
« on: April 21, 2014, 09:54:11 PM »
சுதந்திரம் வேண்டும் நாம்
சுதந்திரத்தை விரும்புகிறோமா
இல்லை
சிறையில் இருப்பதையே
விரும்புகிறோம்

சுதந்திரம் நமது விருப்பம் என்றால்
மரணதைக் கண்டு ஏன்
அழுகிறோம்
அது ஒரு பரிபூர்ண சுதந்திரம்
அலலவா

சுதந்திரம் நமது விருப்பம் என்றால்
திருமணத்தை ஏன்
விமரிசையாக கொண்டாடுகிறோம்
அது ஒரு ஆயுள்சிறை அல்லவா

நல்ல மனைவி அமைந்து விட்டால்
ஆயுள்கைதிகளான நாம்
இன்னொரு ஆயுள் கொடு
அவளுடன் வாழ என
பிராத்திக்கிறோமே அது ஏன்

நாம் உருவானதும்
கருப்பை எனும் சிறையில் தான்
வாழ்வதும் வீடு எனும் சிறையில் தான்
உயிர் உடலின் கைதி
உடல் உணர்ச்சிகளின் கைதி

பாசம் நேசம் அன்பு
நட்பு குடும்பம் இவை அனைத்தும்
விலங்குகள் தான்
நாம் விரும்பி மாட்டிக் கொள்ளும்
பூ விலங்குகள்
இந்த விலங்குகளில் இருந்து விடுபட
யார் விரும்புவார்கள்

சிறையில் இருக்கும்
பட்டுப்பூச்சிக்குத் தான்
சிறகுகள் முளைக்கின்றன
பூவிடம் சிறை இருக்கும்
மலருக்குத் தான்
சுகந்தம் கிடைக்கிறது
சிம்னிக்குள் சிறை இருக்கும்
சுடர் தான்
அணையாமல் ஒளி வீசுகிறது