Author Topic: இணையம் இணைக்க இணைந்தோம்  (Read 1712 times)

Offline Elakia

  • Newbie
  • *
  • Posts: 12
  • Total likes: 0
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Today jolly Tomrw Galy
                                                     

                                                                 


எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்
இணையம் இணைக்க இணைந்தோம் உறவாய்
என்ன என்று தெரியா என்ற அற்புதமான உறவு

ஒரு மனிதனை போல உருவத்தில் ஒன்றாய்
எழு பேர் உண்டு உலகில் என்பார்
நம் உருவத்தில் தான் ஒற்றுமை இல்லை
உணர்வுகளில் ஆயிரம் ஒற்றுமைகள்


நான் ஒன்றை நினைத்தால் நீ அதை செய்வாய்
நான் ஒன்றை ரசித்தால் அதை நீயும் ரசிப்பாய்
நான் சிரித்தால் நீ அதை கண்டு சிரிப்பாய்
என் உள்ளத்தில் உண்டாகும் கோபம்
உன் எழுத்துக்களில் தெரியும்

உனக்குள் ஒரு கேள்வி எழ
என்னிடம் விடை இருக்கும்
படைப்புக்களில் உனக்கும் எனக்கும்
நடக்கும் போட்டியில் வெற்றிகள்
எப்போதும் நம் இருவர் பக்கம்தான்

நான் பல நேரம்
லொல்லுக்கு லொல்லாய்
மல்லுக்கு மல்கட்டிய போதும்
என் குறும்புக்கும் வம்புக்கும்
எந்த விதத்திலும் குறைந்தவன் இல்லை நீ

நீ வழிகாட்டி வந்த பாதைகள் மட்டுமே
இப்போது நான் நின்ற பாதைகள்
இப்படி சிந்தனை செயல் மகிழ்ச்சி என
எல்லா அலைவரிசைகளிலும்
நாம் சிறப்பாக ஒன்றாய் முடுக்கப்பட்டோம்

எனக்கு ஒரு சோதனை என்றால்
அதை ஆற்றும் உன் கைகள்
உனக்கு ஒரு சோதனை என்றால்
உன்னை தூக்கி விடும் என் கைகள்

என்றும் மகிழ்ச்சியும் வெற்றியும்
உன் துணையாய் இருக்க
ஆசைபடும் உன்னவள்
[/size][/font]
« Last Edit: November 28, 2011, 10:00:57 PM by Elakia »

Offline Yousuf

Re: இணையம் இணைக்க இணைந்தோம்
« Reply #1 on: November 28, 2011, 10:12:04 PM »
நல்ல கவிதை இலக்கியா இனைய நண்பர்கள் அனைவரும் ரசிக்க கூடிய நிதர்சனமான உண்மையை பிரதிபலிக்க கூடிய கவிதை!

உங்கள் கவிதைகளை போல் ஏனைய பதிவுகளையும் உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறோம்!

தொடரட்டும் உங்கள் பதிவுகள் இலக்கியா!!!

Offline Elakia

  • Newbie
  • *
  • Posts: 12
  • Total likes: 0
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Today jolly Tomrw Galy
Re: இணையம் இணைக்க இணைந்தோம்
« Reply #2 on: November 28, 2011, 10:15:58 PM »
anna sure la thx

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 121
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இணையம் இணைக்க இணைந்தோம்
« Reply #3 on: December 01, 2011, 12:25:01 PM »
NIce Ilakiya


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இணையம் இணைக்க இணைந்தோம்
« Reply #4 on: December 01, 2011, 02:09:22 PM »
நல்ல கவிதை இலக்கியா... இதே போன்று நல்ல சிறந்த பதிவுகளை எதிர் பார்க்கின்றோம்...
                    

Offline RemO

Re: இணையம் இணைக்க இணைந்தோம்
« Reply #5 on: December 11, 2011, 08:39:15 PM »
nice poem elakiya
very nice