என்னென்ன தேவை?
மைதா - 1/2 கிலோ,
உப்பு - தேவையான அளவு,
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்,
சூடான பால் - 1 கப்,
ரஸ்தாளி வாழைப்பழம் - சிறிய தென்றால் 1,
பெரியதானால் 1/2.
எப்படிச் செய்வது?
முதலில் மைதாவையும் பேக்கிங் பவுடரையும் நன்றாக சலித்துக் கொள்ளவும். அதை ஒரு வாயகன்ற பாத்திரம் அல்லது பேசினில் போட்டு, நடுவில் குழித்துக் கொண்டு மசித்த வாழைப்பழம், சூடாக்கிய பால், உப்புச் சேர்த்து பிசையவும். ரொம்பவும் தளர விட்டால் இடுவதற்கு கஷ்டம். மாவும் உப்பாது. அதனால் நிறைய தண்ணீர் விட வேண்டாம். அழுத்திப் பிசைந்து ஒரு பாத்திரத்தில் காற்றுப் போகாமல் மூடி, சில மணி நேரம் வைத்த பிறகு மெல்லிதாக இட்டுப் பொரிக்கவும். பவாழைப்பழத்துக்கு பதில் ஒரு முட்டை சேர்த்தும் பிசையலாம்.