Author Topic: ~ பச்சைப்பயறு துவையல் ~  (Read 599 times)

Online MysteRy

~ பச்சைப்பயறு துவையல் ~
« on: April 17, 2014, 07:44:26 PM »
பச்சைப்பயறு துவையல்



தேவையான பொருட்கள்....
பச்சைப்பயறு - அரை கப்
பூண்டு - ஒரு பல்
இஞ்சி - சிறிய துண்டு
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
புளி - கோலி அளவு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
சீரகம் - சிறிதளவு 
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

• இஞ்சியை தோல் சீவி கழுவி வைக்கவும்.

• வெறும் வாணலியை சூடாக்கி, பச்சைப்பயிறை நன்கு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

• பூண்டு, இஞ்சி, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை எண்ணெய் விட்டு தனியே வறுத்துக் ஆற வைக்கவும்.

• ஆறியபின், அவற்றுடன், பயறு, சீரகம், உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.

• இந்த பச்சைப்பயிறு துவையல் மிகவும் சத்து நிறைந்தது. மிகவும் சுவையானது.