Author Topic: ~ 30 வகை கர்நாடகா சமையல் ~  (Read 2737 times)

Offline MysteRy

Re: ~ 30 வகை கர்நாடகா சமையல் ~
« Reply #15 on: April 16, 2014, 02:08:56 PM »
வேர்க்கடலை   சுக்கு பொடி



தேவையானவை:
வேர்க்கடலை - 200 கிராம், காய்ந்த மிளகாய் - 6, பொடித்த சுக்கு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, ஓமம் - கால் டீஸ்பூன், உப்பு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், ஓமம், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை சிவக்க வறுத்துப் பொடித்து, அதனுடன் சுக்குத்தூள் கலந்து வைக்கவும். இதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம், இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். பொரியல் வகைகளுக்கும் மேல் பொடியாக உபயோகிக்கலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கர்நாடகா சமையல் ~
« Reply #16 on: April 16, 2014, 02:10:39 PM »
அரிசி  தேங்காய் கஞ்சி



தேவையானவை:
புத்தம் புது அரிசி - ஒரு கப், நெய் - சிறிதளவு,  தேங்காய்ப்பால் (ஒரே பாலாக எடுக்கவும்) - 3 கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து, 4 கப் நீர் சேர்த்து, உப்பு, நெய் கலந்து குக்கரில் வேகவிட்டு, 4 விசில் வந்ததும் இறக்கவும். இதை சூட்டுடன் நன்கு மசித்து, தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.
ஏகாதசி விரதம் முடிந்ததும்... வயிறு, வாய் புண்ணாகாமால் இருக்க துவாதசி அன்று முதலில் இது பரிமாறப்பட்டு பின் மற்ற உணவுகள் இடம் பெறும். இதனை துவாதசி கஞ்சி என்றும் கூறுவர்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கர்நாடகா சமையல் ~
« Reply #17 on: April 16, 2014, 02:12:14 PM »
பதர் பேனி



தேவையானவை:
மைதா - 2 கப், நெய் - கால் கப்,  எண்ணெய் - கால் கிலோ, நெய் - 100 கிராம், பூரா சக்கரை (அ) பொடித்த சக்கரை, பாதாம் பால் - தேவையான அளவு, சோடா உப்பு, உப்பு - தலா ஒரு சிட்டிகை, ரெடிமேட் பாதாம் மிக்ஸ், காய்ச்சிய பால் - சிறிதளவு.
பதர் செய்ய: அரிசி மாவு - அரை கப், நெய் - கல் கப்.

செய்முறை:
மைதா, உப்பு, சோடா உப்பு... இவற்றை 100 கிராம் நெய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பூரி மாவு போல் பிசையவும்.
அரிசி மாவை கால் கப் நெய் விட்டு பேஸ்ட் ஆக்கவும். பிசைந்த மைதா மாவை 6 அப்பளமாக இட்டு, ஒவ்வொரு அப்பளம் மீதும் அரிசி மாவு - நெய் கலவையை நன்கு பரவலாக பூசி அடுக்கி, பாய் போல் சுருட்டி, 4 ஆக நறுக்கி மீண்டும் லேசாக தேய்த்து எண்ணெயில் சிவக்க பொரித்தெடுக்கவும். பரிமாறும்போது மேலே பூரா சக்கரை (அ) பொடித்த சக்கரை தூவி, பாதாம் பாலை (பாதாம் மிக்ஸை காச்சிய பாலில் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்) ஊற்றி பரிமாறவும்

Offline MysteRy

Re: ~ 30 வகை கர்நாடகா சமையல் ~
« Reply #18 on: April 16, 2014, 02:14:29 PM »
புளி  மிளகு சித்தரான்னம்



தேவையானவை:
வடித்த சாதம் - 2 கப், புளிக் கரைசல் - கால் கப், வெல்லம் - சிறிதளவு, வெந்தயப் பொடி - ஒரு சிட்டிகை, வறுத்த எள் பொடி - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு.
வறுத்ததுப் பொடிக்க: தனியா, கடலைப்பருப்பு, மிளகு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2.
தாளிக்க: நல்லெண்ணெய் - 100 கிராம், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு. 

செய்முறை:
வறுக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் நல்லெண்ணெயை சூடாக்கி தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து, புளிக் கரைசலை ஊற்றி, வறுத்துப் பொடித்ததை சேர்த்து, சிறிதளவு மஞ்சள்தூள், தேவையான அளவு  உப்பை சேர்த்து, கெட்டியாக காய்ச்சி இறக்கி, வெல்லம் சேர்த்து எடுத்து வைக்கவும். இதுதான் புளிக் காய்ச்சல். சாதத்தில் சிறிதளவு மஞ்சள்தூள், நல்லெண்ணெய் சேர்த்துக் கிளறி ஆறவிட்டு வேண்டிய அளவு புளிக் காய்ச்சலை சேர்த்துக் கிளறி, மேலே எள் பொடி, வெந்தயப் பொடி தூவி கலந்தால்...  புளி - மிளகு சித்தரான்னம் தயார். இதை பொரித்த அப்பளத்துடன் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கர்நாடகா சமையல் ~
« Reply #19 on: April 16, 2014, 02:16:26 PM »
சிவப்பு பூசணிக்காய் தயிர் சட்னி



தேவையானவை:
வேக வைத்து மசித்த சிவப்பு பூசணி - ஒரு கப், கெட்டித் தயிர் - அரை கப், கடுகு, பெருங்காயத்தூள், எண்ணெய், கொத்தமல்லி - தாளிக்க தேவையான அளவு, உப்பு, சர்க்கரை - சிறிதளவு,
அரைக்க: கடுகு - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - கால் மூடி, பச்சை மிளகாய் - ஒன்று.

செய்முறை:
தயிரைக் கடைந்து உப்பு, சர்க்கரை, மசித்த பூசணியை சேர்க்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து தயிர் கலவையில் சேர்த்து... எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள், கொத்தமல்லி தாளித்து சேர்த்துக் கலக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கர்நாடகா சமையல் ~
« Reply #20 on: April 16, 2014, 02:30:36 PM »
சௌசௌ காராபாத்



தேவையானவை:
வடித்த பச்சரிசி சாதம் - 2 கப், சௌசௌ - 2 (நறுக்கி, வதக்கவும்), கடுகு - சிறிதளவு, நெய் - 3 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, உப்பு - சிறிதளவு.
வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயம் - சிறிதளவு, பட்டை, லவங்கம் தலா - ஒன்று, கொப்பரை - 2 டேபிள்ஸ்பூன்,

செய்முறை:
வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை பொடித்துக் கொள்ளவும். வாணலியில் நெய்யை காயவிட்டு கடுகு தாளிக்கவும். வதக்கிய சௌசௌ, பச்சரிசி சாதம், உப்பு சேர்த்து, வறுத்துப் பொடித்த பொடியைத் தூவி நன்கு கிளறி இறக்கவும். நறுக்கிய கொத்தமல்லியை மேலே  தூவவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கர்நாடகா சமையல் ~
« Reply #21 on: April 16, 2014, 02:38:16 PM »
தேங்காய்  தனியா ஆமவடை



தேவையானவை:
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா 100 கிராம், தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், துருவிய கொப்பரை (அ) தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் தலா - 2, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு (உருவியது), அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், சீரகம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 200 கிராம், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
 கடலைப்பருப்பு, துவரம்பருப்பை ஒன்றாக சேர்த்து அரை மணி ஊற வைத்து தண்ணீர் வடித்து... உப்பு, தனியா, சீரகம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து, ஒன்றிரண்டாக அரைக்கவும். இதனுடன் அரிசி மாவு, தேங்காய் துருவல், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து, மாவை வடைகளாக தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கர்நாடகா சமையல் ~
« Reply #22 on: April 16, 2014, 02:40:08 PM »
மாம்பழ கொத்சு



தேவையானவை:
மீடியமாக பழுத்த மாம்பழம் - ஒன்று, புளிக் கரைசல் (நீர்க்க இருக்க வேண்டும்) - கால் கப், வெல்லம் (விரும்பினால்) - சிறிதளவு, மஞ்சள்தூள், கடுகு, எண்ணெய், உப்பு - சிறிதளவு.
வறுத்துப் பொடிக்க: வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, துருவிய கொப்பரை - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
மாம்பழத்தை நறுக்கிக் கொள்ளவும். வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, புளிக் கரைசல், உப்பு சேர்க்கவும். கொதி வந்தவுடன் மாம்பழத் துண்டுகள், மஞ்சள்தூள் சேர்த்து, மீண்டும் கொதி வந்தவுடன் வறுத்து பொடித்த மசாலா சேர்த்து... மேலும் ஒரு கொதி வரவிட்டு (விரும்பினால் வெல்லம் சேர்த்து), இறக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கர்நாடகா சமையல் ~
« Reply #23 on: April 16, 2014, 02:41:35 PM »
ஹயக்ரீவா



தேவையானவை:
வேக வைத்து மசித்த கடலைப்பருப்பு - 200 கிராம், துருவிய வெல்லம் - 250 கிராம், துருவிய கொப்பரை அல்லது தேங்காய் - 4 டேபிள்ஸ்பூன், வறுத்த கசகசா - ஒரு டீஸ்பூன், வறுத்த முந்திரி - திராட்சை - 25 கிராம், நெய் - 100 கிராம், கடலை மாவு (தேவைப்பட்டால் கரைத்துவிட) - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை:
வெல்லத்தை நீர் விட்டு கரைத்து அடுப்பில் வைத்து இறக்கி, வடிகட்டவும். மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்தவுடன் மசித்த கடலைப்பருப்பு சேர்த்து நன்கு சேர்ந்து வரும்போது நெய் விட்டு இறக்கவும் (இட்லி மாவை விட சற்று கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் கடலை மாவை கரைத்து சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்). ஒரு டீஸ்பூன் நெய்யில் கொப்பரை (அ) தேங்காய்  துருவல், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை வறுத்து சேர்க்கவும். பின்னர் வறுத்த கசகசா, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கர்நாடகா சமையல் ~
« Reply #24 on: April 16, 2014, 02:43:04 PM »
வெந்தய மோர்



தேவையானவை:
சற்றே புளிப்பான கெட்டி மோர் - ஒரு கப், கடுகு - கால் டீஸ்பூன், சீரகம், வெந்தயம், உளுத்தம்பருப்பு - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, நறுக்கிய பச்சை மிளகாய் - 2, வறுத்த பொடித்த வெந்தயம் - கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
மோரில் உப்பு, மஞ்சள்தூள், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விளாவவும். கடுகு, சீரகம், வெந்தயம், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை நெய்யில் 'கமகம’ என தாளித்து மோருடன் சேர்க்கவும். பரிமாறும் முன் வெந்தயப் பொடி சேர்த்துப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கர்நாடகா சமையல் ~
« Reply #25 on: April 16, 2014, 02:44:45 PM »
பிஸிபேளா பாத்



தேவையானவை:
துவரம்பருப்பு - 200 கிராம், அரிசி - 100 கிராம், மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 50 கிராம், புளி - சிறு எலுமிச்சை அளவு, உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், கடலைபருப்பு - ஒரு டீஸ்பூன், கசகசா - ஒரு டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய், மராட்டி மொக்கு - தலா ஒன்று, துருவிய கொப்பரை - அரை கப், காந்த மிளகாய் - 8, பெருங்காயம் - ஒரு சிறு கட்டி.
தாளிக்க: காய்ந்த மிளகாய் - 3, கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, முந்திரி - 50 கிராம், நெய் - 100 கிராம்.

செய்முறை:
பருப்பு, அரிசி, உப்பு, மஞ்சள்தூள், எண்ணெய் ஆகியவற்றை குக்கரில் சேர்த்து, 600 மில்லி தண்ணீர் விட்டு வேகவிட்டு, மசித்து வைக்கவும். வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை பொடித்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து குக்கரில் ஊற்றி கொதிக்கவிட்டு... வெந்த துவரம்பருப்பு - அரிசி கலவையை சேர்த்துக் கொதிக்கவிட்டு, பொடித்த மசலா சேர்த்துக் கிளறி இறக்கி, நெய்யில் கடுகு, கறிவேப்பிலை, முந்திரி, மிளகாய் தாளித்து சேர்த்து... சூடாக பரிமாறவும்.
இதை சின்ன வெங்காயம், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி சேர்த்தும் செய்யலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கர்நாடகா சமையல் ~
« Reply #26 on: April 16, 2014, 02:48:27 PM »
ரவா பூரி பாயசம்



தேவையானவை:
ரவை - 100 கிராம், மைதா - 2 டேபிள்ஸ்பூன்,  பால் - ஒரு லிட்டர் (அரை லிட்டராக குறுக்கவும்), சர்க்கரை - 150 கிராம், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ, நெய் - சிறிதளவு, உப்பு  - ஒரு சிட்டிகை.

செய்முறை:
ரவையை ஒரு சிட்டிகை உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய், சிறிதளவு நெய் விட்டு பிசிறி, சிறிதளவு தண்ணீர் தெளித்து, பூரி மாவு போல் பிசையவும். மாவை அரை மணி நேரம் மூடி வைத்து, பிறகு பூரி போல் இட்டு, எண்ணெயில் பொரித்து, நொறுக்கி வைக்கவும். குறுக்கிய பாலில் சர்க்கரை சேர்த்து ஒரு கொதி வந்தபின் இறக்கி, நொறுக்கிய பூரிகளை போட்டு, முந்திரி, திராட்சை, ஏலக்காய்தூள் சேர்த்துப் பரிமாறவும்.
பாலுக்கு பதில் ஒரு டின் மில்க் மெய்டில் அரை டின் நீர் விட்டு இளக்கியும் செய்யலாம். இவ்வாறு செய்யும்போது சர்க்கரை சேர்க்கக் கூடாது.

Offline MysteRy

Re: ~ 30 வகை கர்நாடகா சமையல் ~
« Reply #27 on: April 16, 2014, 02:50:17 PM »
ராகி முத்தே



தேவையானவை:
கேழ்வரகு மாவு - 2 கப், உடைத்த பச்சரிசி (நொய்) - ஒரு டீஸ்பூன்,  வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
ஒரு கப் நீரில் அரிசி நொய்யை வேகவிட்டு... வெங்காயம், உப்பு சேர்க்கவும். ஒன்றரை கப் நீரில் கேழ்வரகு மாவைக் கரைத்து சேர்த்து நன்கு வேகவிட்டு திரண்டு வருகையில் இறக்கி, ஒரு டீஸ்பூன் எண்ணெய் மேலே விட்டு மூடி, ஆறிய பின் நன்றாக கலந்து உருண்டைகள் செய்யவும்.
இது காலையில்  ஒரு ஃபுல் ப்ரேக்ஃபாஸ்ட் ஆகும். தொட்டுக்கொள்ள கெட்டி தயிர், சாம்பார் ஏற்றது. இதை பெரும்பாலான கர்நாடக வீடுகளில் செய்வார்கள். மாவை சரியாக வேகவிடவும். இல்லாட்டால், வயிற்றுப் பிரச்னை ஏற்படும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கர்நாடகா சமையல் ~
« Reply #28 on: April 16, 2014, 02:51:44 PM »
வெள்ளரி  பயத்தம்பருப்பு கோசம்பரி



தேவையானவை:
ஊற வைத்த பயத்தம்பருப்பு - 100 கிராம், நறுக்கிய வெள்ளரிக்காய் - கால் கப், துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - சிறிதளவு.
தாளிக்க: பச்சை மிளகாய் - ஒன்று, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு, நெய், கொத்தமல்லி - சிறிதளவு.

செய்முறை:
ஊற வைத்த பருப்பை தண்ணீர் வடியவிட்டு, நறுக்கிய வெள்ளரிக்காய், துருவிய தேங்காய் சேர்த்து, தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.
கர்நாடக மாநிலத்தில் எல்லா பண்டிகை தினங்களிலும் இதைச் செய்வார்கள்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கர்நாடகா சமையல் ~
« Reply #29 on: April 16, 2014, 02:53:05 PM »
துவரம்பருப்பு பொங்கல்



தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப், துவரம்பருப்பு - அரை கப், நெய் - 100 கிராம், சீரகம் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் (கீறியது) - 4, முந்திரி - 10, கறிவேப்பிலை  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கட்டிப் பெருங்காயம் - ஒரு சிறுதுண்டு, உப்பு - சிறிதளவு.

செய்முறை:
வாணலியில் நெய்யை சூடாக்கி... சீரகம், முந்திரி, பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். அரிசி, துவரம்பருப்பை களைந்து குக்கரில் சேர்த்து, தேவையான நீர் விட்டு, தாளித்ததை அப்படியே சேர்க்கவும். பிறகு உப்பு,
மஞ்சள்தூள் சேர்த்து குக்கரை மூடி, 3 அல்லது 4 விசில் வந்ததும் இறக்கி பரிமாறவும்.
இது ஒரு விரத ஸ்பெஷல் ஆகும்.