Author Topic: ~ அன்றில் பறவை பற்றிய தகவல்கள்:- ~  (Read 1243 times)

Offline MysteRy

அன்றில் பறவை பற்றிய தகவல்கள்:-




(Plegadis falcinellus) திரெஸ்கியோர்நித்திடே(Threskiornithidae) என்ற அரிவாள் மூக்கன் குடும்பத்தைச் சார்ந்த ஒரு கரைப்பறவை (shore bird or wader) ஆகும்

இப்பறவையே ஐபிஸ் இனத்தில் பரவலாகக் காணப்படும் இனமாகும். இது ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் அட்லாண்டிக் பெருங்கடல்,கரீபியன் பகுதிகளில் ஆங்காங்கு காணப்படுகின்றன. இது பழைய உலகின் பகுதிகளில் தோன்றிப் பின் இயற்கையாக ஆப்பிரிகாவிலிருந்து 19ம் நூற்றாண்டில் தென் அமெரிக்காவிற்குப் பரவியதாக நம்பப்படுகிறது. இவ்வினமானது புலம் பெயரக்கூடியது; ஐரோப்பிய இனம் குளிர்காலங்களில் ஆப்பிரிக்காவிலும், வட அமெரிக்க இனம்கரோலினாவின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் பெயர்கின்றன. பிற இனங்கள் இனச்சேர்க்கைக் காலங்கள் அல்லாத பிறகாலங்களில் பரவலாகப் பெயர்கின்றன.

அன்றில் பறவை மரக்கிளைகளில் பிற கொக்குகளோடு கூட்டமாக முட்டையிடுகின்றன. சதுப்பு நிலங்களில் மந்தையாக இறை தேடக்கூடியவை இவை; மீன், தவளை மற்றும் பிற நீர்வாழ் உயிர்களையும், அவ்வப்போது பூச்சிகளையும் இரையாகக் கொள்கின்றன.

இவ்வினம் 55–65 செ.மீ. நீளமும் 88–105 செ.மீ. இறக்கை வீச்சளவும் கொண்டிருக்கும். பருவம்வந்த பறவைகள் செந்நிற உடலும் ஒளிரும் கரும்பச்சை இறக்கைகளையும் கொண்டிருக்கின்றன. பருவம் வராத இளம் பறவைகள் பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. இவ்வினம் மரப்பழுப்பு நிற அலகினையும், கறுத்த மேற்புறமும், நீலப் பழுப்பு நிறத்திலிருந்து நீலம் வரையிலான கீழ்ப்புறமும், சிவந்த பழுப்பு நிறக் கால்களையும் கொண்டு காணப்படுகிறது. கொக்குகளைப் போல் அல்லாமல், அன்றில் பறவைகள் கழுத்தை நீட்டியும், பெரும்பாலும் வரிசைகளிலும் பறக்கின்றன.

பொதுவாக அமைதியான அன்றில் பறவை இனப்பெருக்கக் காலங்களில் கரகரப்பான உறுமல் போன்ற கிர்ர்ர் என்ற ஒலியினை ஏற்படுத்துகின்றது.