கடலும் மனமும்
ஒன்று தான்
அமைதியான கடல்
சில நேரம்
ஆரப்பரிக்கும் கடலாக மாறுகிறது
மனமும் அப்படித் தான்
காற்றழுத்தம் கூடும் போது
கடல் கொந்தளிக்கிறது
மனஅழுத்தம் கூடும் போது
மனம் கொந்தளிக்கிறது
கடல் ஆழமானது
அதை விட
மனம் ஆழமானது
அதிலும் பெண்மனம்
அதிகம் ஆழமானது
கடலில் மூழ்கி
எத்தனையோ கப்பல்கள்
அமிழ்ந்து போயிருக்கின்றன
பெண் மனதில் மூழ்கி
எத்தனையோ சாம்ராட்சியங்கள்
அழிந்து போயிருக்கின்றன
கடலில் தத்தளிப்பவரை
அதன் அலைகளே
கரை சேர்த்து விடும்
ஆனால்
பெண் மனக்களில் விழுந்து
தத்தளிப்பவர் என்றுமே
கரை சேர்வதில்லை
பெண் மனம்
அகழ்வாரை தாங்கும்
நிலம் போல
எதையும் தாங்குவதால்
பூமாதேவி என்கிறோம்
கடலைப் போல
ஆழமானவள், அறிய முடியாதவள்
என்பதால்
சமுத்திரதேவி என்றும் சொல்லலாமே