Author Topic: காதல்  (Read 5187 times)

Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 17
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
காதல்
« on: July 15, 2011, 12:05:22 PM »
ரோஜாவிடம் அனுமதி கேட்டு
பனித்துளி அதன்மேல் படர்வதில்லை..!


நிலவிடம் அனுமதி கேட்டு
அல்லி மலர் அழகாய்ப் பூப்பதில்லை...
பூவிடம் அனுமதி கேட்டு
தேனை வண்டு குடிப்பதில்லை..!
அதே போலத்தான்
யாரிடமும் அனுமதி கேட்டு
வருவதில்லை காதல்..!
அன்பொழுகும் அழகைக் கண்டால்
ஆர்ப்பரித்து வந்து விடும் காதல்..!
உன் மேல் நான் கொண்டதைப் போல..!

Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 17
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
Re: காதல்
« Reply #1 on: July 15, 2011, 12:11:22 PM »


எனக்காக நீயா
நானறியேன் என்
உள்ளம் சொன்னது..........

மறக்காத நான்
உனைக் கண்ட முதல்
எனக்காக நீ என.............

மறுப்பாயோ
வெறுப்பாயோ எனை
நானறியேன் உனை...........

எதற்காக
குழம்புகின்றேன்
தெளிவுடன் உனைக்காண.........

அறிவாயா
நான் யாரென நீ
மதிப்பாயா..............

பெண்ணே
உந்தன் கூக்குரலில்
எனை சபிப்பாயோ...........

அழகென
நீ இருக்க
பழகென மனம் சொல்ல.......

தருவாயோ
அனுமதியெனக்கு
அதுவே வெகுமதியெனக்கு......

இப்படி கெஞ்சினால்
தான் காதலென்றால்
வேண்டாமே அது நமக்கு..........

காலத்தால் அழியாது
ஞாலத்தில் பெரியது
என்னடிமை நீயல்ல
அது போலே நானும்..........

பெண்ணாக நீயிருக்க
ஆணாக நானிருக்க
அரவணைத்தும்
ஆதரவுடனும்..........

அன்பிற்கு அடிமையாய்
அடுத்தவருக்கு உவமையாய்
காலமெல்லாம் காதலராய்...........

காதலுக்கு
வாழ்க்கை கொடுக்க
இணைவோமா நாமிருவர்
ஒரு மனதாய்...........

உனக்கு
பொல்லாப்பு வாராமல்
புலனடக்கி வாழவல்ல
பாசாங்கு வேண்டாமே...........

அன்னை தந்தை
உன்னுடனிருப்பது
எவ்வளவு காலம்.........?

எனக்கும் அப்படியே
நம்பிக்கை கொண்டு
என்னுள் நீயாக
உன்னுள் நானாக...........

ஒரு தலைமுறைக்கு
வழி வகுக்க வேண்டும்
அதனாலே சுகம் பெற
வேண்டும் நாம்.................

ஒன்றிணைய தருவாயா
நாமிருவர் உறுதுணயாய்
நல்லவர்கள் வாழ்த்து சொல்ல
சம்மதம் அருள்வாயா.........




Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 17
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
Re: காதல்
« Reply #2 on: July 15, 2011, 12:12:41 PM »


உயிரில் கலந்து உள்ளத்தில்
உறவாகிய என் உயிரானாவனே
உந்தன் நிழலில் வாழும் வரம்
தனை நான் பெறவில்லை

காலம் கடந்தாலும்
உயிர் நீங்கி போனாலும்
காதலாய் என்னுள் வந்த
எந்தன் ஆயுளானவனே
நீதான் என்றும் என் தெய்வம்

நீ பொய் சொன்னால் கூட
நிஜம் என்றே நம்பிடும்
பேதையடா அதனால்
தான் எந்தன் உள்ளம்
உந்தன் பாசத்தால்
துடிக்குதடா .....

நினைவாக வந்தவனே
நிஜமாக வந்திவிடு
உந்தன் மடியில் என்
கதைகள் பேசி உயிர்விட
காத்திருக்கும் உன்
உள்ளத்தில் வாழும்
உன்னவள்




Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 17
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
Re: காதல்
« Reply #3 on: July 15, 2011, 12:16:10 PM »

நின்
அருகாமையில் வேகமாகவும்
தூரத்தில் மெதுவாகவும்
சுழல்வதுமாய் உலகம்;
உன்னால்
பைத்தியமாகிவிட்டது அதுவும்!

*

உன்னில் பாதியாய்
என்னில் மீதியாய்
நம்மில்
முழுதும் காதல்!

*

காதலிப்பதற்கு
நீ இருக்கிறாய்
என்ற காரணமே
போதுமாயிருக்கிறது
நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!

*

வெகுநாட்கள் கழித்து
சந்திக்கும் கணத்தில்
நம் விழி பொங்கும் கண்ணீரில்
கப்பல்விடக் காத்திருக்கிறது
காதல்!

*

உன்
கண்மையைக் கொடு;
மைப்போட்டு பார்க்கலாம்
உன்னில் தொலைந்த
என்னிதயத்தை!

*




Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 17
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
Re: காதல்
« Reply #4 on: July 15, 2011, 12:21:02 PM »


என் வீட்டு முற்றத்தில்
ஓர்நாள்,
வாடியிருந்த - என்
வதனம் கண்டு
வார்த்தைகளை தொடுப்பதற்காக,
நான்
வளர்த்த புறா ஒன்று,
என்னைப்பார்த்து கேட்கிறது....
"அன்பரே,
உன் சோகத்தின் பிறப்பிடம்
யாதென கூறுவீரா..? "
என்றது.
நானும்,
"இன்று என்னவளுடன்
பேசவில்லை" அதனாலே
என்றேன்.
அதற்கு புறாவும்,
"அவள் வாழ்விடம் நீ அறிவாயா?
உன் உணர்வுகளை நான்
எடுத்துரைக்க
உன்னவள் எங்கிருக்கிறாள்"
என்றது.
அதற்கு நானும்,
"அவள்,
வானத்தின் மாளிகையில்,
மேகத்தின் உறவுகளோடும்,
விண்மீன்களின் மொழிகளோடும்,
வாழ்ந்து வருகிறாள்"
என்றேன்.
அப்போது புறா,
இதற்காகவா நீ வருந்துகிறாய்,
உன் ஏக்கத்தை நான்
கலைப்பேன், நீ வருந்தாதே!
எனக்கு தானே இறைவன்,
பறக்கும் சக்திக்காக
இறகுகளை படைத்துள்ளான்,
நான் வானுக்கு சென்று
உன் நிலவோடு பேசி வருவேன்,
அதுவரைக்கும்
நீ கல்லறை பேசும்
மொழிகளை போல்
காய்ந்து கிடக்காதே!
எழுந்திரு! மகிழ்ந்திரு!"
வானை நோக்கி ,
என் நிலவுடன் பேச
பறந்தது.
அக்கணத்தில் தான்
என் உயிருக்குள்
ஒரு கேள்வி முளைக்கிறது.
"இறைவன் எனக்கும்
பறக்கும் சக்திக்காக
இறகுளை படைத்திருந்தால்....
நானும் புறாவைப்போல
வானை நோக்கிச்சென்று
என்னவளுடன், என் நிலவுடன்
என் ஏக்கத்தை தனித்திருப்பேன்,
அன்பு மொழி பிரியாமல்
பேசியிருப்பேன்,
ஏன் இப்படி நான்
புறாவை தூது விட....




Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 17
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
Re: காதல்
« Reply #5 on: July 15, 2011, 12:24:41 PM »


நீ விட்டுச்சென்ற நினைவுகள்
விடாமல் என்னை விரட்டுகிறது..
சொல்லிப்போன வார்த்தைகள்
சுடாமல் என்னை சுடுகிறது...
நினவொலியும் சுகம் தரவில்லை..
உன் நினைவுகளும் வாழ விடவில்லை...
ஒருமுறை காதல் எனும் தவறு செய்ததுக்கு
ஒவ்வொரு நொடியும் மரண தண்டனையோ?
காதல் எனும் உலகத்தில்
கண்ணீர் துளிதான் மூச்சுக்காற்றோ?...
சாத்தியமில்லை பெண்ணே!
நீ இன்றி நான் வாழ்வது
சமாதியாகிவிடுவேன் விரைவில்
சீக்கிரத்தில் என் சமாதியையாவது
வந்து பார்த்துவிடு
உன் நினைவுகளின் ரணங்களால்
அதுவும் அழிந்திட கூடும்.




Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 17
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
Re: காதல்
« Reply #6 on: July 15, 2011, 12:27:15 PM »

உன்னோடு பேசாத
ஒவ்வொரு நிமிடங்களும்
உயிரை கொல்லும்
நொடிகளாய் எனக்கு!

என் ஒவ்வொரு அசைவின்
ஒட்டுமொத்த செயல்களும்
உன் மூச்சினில் தானே
ஒருமித்து வாழ்கிறது!

நான் தொட்டிடும் அனைத்தும்
உன் பெயரை சொல்லி
உத்தரவு கேட்கிறது
உயிரையும் கொல்கிறது!

உனை விலகி என்னால்
ஒரு செயலும் இங்கு
முடியவில்லை அன்பே
உயிரோடு கலந்து
என் உறவோடு இருப்பவளே!




Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 17
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
Re: காதல்
« Reply #7 on: July 15, 2011, 12:42:29 PM »

காதல் ஒரு சோதனை
வெற்றியா, தோல்வியா
சொல்ல முடியாது,

காதல் ஒரு வேதனை
நரகமா, சொர்க்கமா
உணர முடியாது,,

காதல் ஒரு மதில் மேல் பூனை
நல்லதா, கெட்டதா
புரிய முடியாது,,,

காதல் ஒரு நெருப்பு
தெரிந்தும் போய்-எரிந்து
போவோர் ஆயிரம் ஆயிரம்
ஏனெனில்
காதல் ஒரு போதை-பிடித்தால்
விடாது....




Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 17
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
Re: காதல்
« Reply #8 on: July 17, 2011, 10:29:14 AM »
உனக்காக
காத்திருக்கும் விழிகளில் கூட
காதல் நிரம்பித்
தளும்பி வழிகிறதடி...
நீ இன்னும் வரவில்லை
என்பதால்...
கண்ணீராய்..!




Offline Manish

Re: காதல்
« Reply #9 on: July 24, 2011, 07:54:46 AM »
unn kavithaiyl naan ennai maranthen

Offline kanmani

Re: காதல்
« Reply #10 on: July 24, 2011, 05:49:46 PM »
kuzhali unga kavithaiyum jooper atharku potierukka picture yum jooper kalakiteenga