என்னென்ன தேவை?
முழு உளுந்து - 1 கப்,
சர்க்கரை - ஒன்றேகால் கப்,
நெய் - 1/2 கப்,
எப்படிச் செய்வது?
உளுந்தை நன்கு சிவக்க வறுத்து சற்று கரகரப்பாக நெஸ் ரவை பதத்தில் அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையை நன்றாக பொடித்து, அதோடு கலந்து கொள்ளவும். நெய்யை சூடாக்கி சிறிது, சிறிதாகக் கலவையில் சேர்த்துப் பிசைந்து, உருண்டை பிடித்து வைத்தால் சுன்னுண்டலு தயார்.