Author Topic: காதல் கலைடாஸ்கோப்  (Read 470 times)

Offline thamilan

காதல் கலைடாஸ்கோப்
« on: April 12, 2014, 12:21:24 AM »
என் மனம் உன்னால்
உடைந்த வளையல்கள் ஆகிவிட்டன
அதற்காக நான் வருந்தவில்லை
என் கவிதை என்ற
கலைடாஸ்கோப்பில் அது
ஆயிரம் வர்ணக் கோலமாய்
அவதரித்துக் கொண்டேயிருக்கிறது

தினமும் பேசும் நீ
பலநாள் வரவில்லை
ஏன் என்று கேட்டதற்கு
எனக்கு நீ தரும்
அதிர்ச்சி வைத்தியம்( shock treatment )என்றாய்
உனக்குத் தெரியாதா
மரக்கட்டையை மின்சாரம் ஒன்றும் செய்யாது
உன்னால் என்றோ நான்
உணர்வுகளை இழந்த மரக்கட்டை
ஆனவன் நான்

இப்போது நான்
உன்னை அல்ல
பிரிவைக் காதலிக்கிறேன்
அது உன்னைப் போல
பிரியாதல்லவா

Offline NasRiYa

Re: காதல் கலைடாஸ்கோப்
« Reply #1 on: April 16, 2014, 08:08:40 PM »
இப்போது நான்
உன்னை அல்ல
பிரிவைக் காதலிக்கிறேன்
அது உன்னைப் போல
பிரியாதல்லவா-------------->wow nice line

உங்களின் காதலை  அழகாய் சொல்லி இருக்கீங்க ..உங்கள் அன்பு மனதிற்கும்,அருமை கவிதைக்கும் வாழ்த்துக்கள்..உங்கள் காதல் சோகம் சுகமாகட்டும் விரைவில்...டமால்