என்னென்ன தேவை?
வெங்காயம் - 1/2 கிலோ (பொடியாக நறுக்கியது),
தக்காளி - 1/2 கிலோ (துருவியது),
பனீர் - 1/2 கிலோ,
முந்திரி கசகசா அரைத்த விழுது - 1/2 கப்,
உப்பு - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - 1/2 கப்,
வெண்ணெய் - 50 கிராம்,
மேலே தூவ - க்ரீம் அல்லது பாலாடை விருப்பப்பட்டால்,
சீரகம் - 2 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை - 4,
ஏலக்காய், பட்டை, கிராம்பு - சிறிது (வறுத்துப் பொடிக்கவும்).
எப்படிச் செய்வது?
அடுப்பில் கடாயை வைத்து வெண்ணெயும் எண்ணெயும் சேர்த்து சுட வைக்கவும். சீரகம், பிரிஞ்சி இலை போட்டு, வெடித்தவுடன் வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். கசகசா முந்திரி விழுதைப் போட்டு வதக்கவும். பிறகு, தூள் வகைகளைப் போட்டு நன்கு பிரட்டவும். துருவிய தக்காளி விழுதைப் போட்டு, உப்பை போட்டு கொதி வந்தவுடன் பனீர் துண்டுகளை போடவும். கொதி வந்தவுடன் கீழே இறக்கி ஏலக்காய், பட்டை, கிராம்பு வறுத்துப் பொடித்த பொடியை தூவி, கொத்தமல்லியை தூவிப் பரிமாறவும்.