சுத்தமான அருகம்புல் ஜூஸை வீட்டில் எப்படிச் செய்வது?
இளம்புல்லாகப் பார்த்து வாங்குவது அவசியம். மருத்துவக் காரணங்கள் எனில் புல்லை நன்றாகக் கழுவி, வெறுமனே அரைத்து அப் படியே குடிக்கலாம். ருசியாக இருக்க வேண்டுமென்றால், அரைமூடி எலுமிச்சைச்சாறு கலக்கலாம். ஹெல்த்தி யாகவும் டேஸ்ட்டியாக வும் விரும்பினால்?
அருகம்புல் - அரை கப், மிளகு - 2, சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், சர்க்கரை - அரை டீஸ் பூன், எலுமிச்சைச்சாறு - அரை கப் ஆகியவற்றைக் கலந்து மிக்ஸியில் அரைத்துக் குடிக்கலாம்.