Author Topic: ~ 30 வகை ‘COOL’ ரெசிபி! ~  (Read 1962 times)

Offline MysteRy

~ 30 வகை ‘COOL’ ரெசிபி! ~
« on: April 11, 2014, 02:21:40 PM »
லிச்சி - கார்ன்   - வெள்ளரி சாலட்



தேவையானவை:
லிச்சி பழம் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 6, ஸ்வீட் கார்ன் (வேகவைத்தது) - கால் கப், வெள்ளரித் துண்டுகள் - ஒரு கப், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், தேன் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சம்பழம் - ஒன்று, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
லிச்சி பழத்தை துண்டுகளாக நறுக்கவும். வேகவைத்த கார்ன் முத்துக்கள், லிச்சி பழத் துண்டுகள், நறுக்கிய வெள்ளரித் துண்டு களை ஒரு பாத்திரத்தில்  போடவும். அதனுடன் சர்க்கரை, உப்பு, தேன், மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து, அதையும் ஊற்றிக் கலக்கவும்.

குறிப்பு:
லிச்சி பழத்துக்குப் பதில், நுங்குத் துண்டுகள் சேர்த்தும் செய்யலாம்.
« Last Edit: April 11, 2014, 02:27:29 PM by MysteRy »

Offline MysteRy

Re: ~ 30 வகை ‘COOL’ ரெசிபி! ~
« Reply #1 on: April 11, 2014, 02:24:48 PM »
சாக்லேட் ஸ்ரீகண்ட்



தேவையானவை:
 கெட்டித் தயிர் - ஒரு கப், கோகோ பவுடர் - ஒரு டீஸ்பூன், பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன், ஜெம்ஸ் மிட்டாய்கள், பொடித்த பாதாம், பிஸ்தா - தேவைக்கேற்ப.

செய்முறை:
தயிரை ஒரு மஸ்லின் துணியில் கட்டித் தொங்கவிடவும். நீர் வடிந்தவுடன், கெட்டியான தயிரை பாத்திரத்தில் போடவும். அதனுடன் பொடித்த சர்க்கரை, கோகோ பவுடர், பாதாம், பிஸ்தா சேர்த்துக் கலக்கவும்.   சிறுசிறு கிண்ணங்களில் ஊற்றி, மேலே ஜெம்ஸ் மிட்டாய்களால் அலங்கரித்து, குளிரவைத்துப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ‘COOL’ ரெசிபி! ~
« Reply #2 on: April 11, 2014, 02:35:34 PM »
பிரெட் ஐஸ்கிரீம்



தேவையானவை:
 பிரெட் ஸ்லைஸ் - 5 , கெட்டித் தயிர் - ஒரு கப், கண்டன்ஸ்டு மில்க் - ஒரு கப், பழத் துண்டுகள் - ஒரு கப், (ஆப்பிள் (அ) வாழைப்பழம் (அ) மாம்பழம்), ஏதேனும் ஜாம் - 2 டேபிள்ஸ்பூன், துருவிய பாதாம் பருப்பு - சிறிதளவு.

செய்முறை:
பிரெட் ஸ்லைஸ்கள் மீது ஜாமைத் தடவி, டிரே அல்லது கிண்ணங்களில் வைக்கவும். தயிரை மஸ்லின் துணியில் கட்டி தொங்கவிட்டு, நீரை வடிக்கவும். கெட்டியாக உள்ள தயிருடன் கண்டன்ஸ்டு மில்க், பழத் துண்டுகள் சேர்த்துக் கலக்கி, பிரெட் துண்டுகள் மீது ஊற்றவும். துருவிய பாதாம் பருப்பு தூவி அலங்கரித்து,   இதை கெட்டியாகும் வரை ஃப்ரிட்ஜில் ஃப்ரீசஸர் பகுதியில் வைத்து, பின்னர் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ‘COOL’ ரெசிபி! ~
« Reply #3 on: April 11, 2014, 02:40:50 PM »
சம்மர் கூலர்



தேவையானவை:
 தர்பூசணி சாறு - ஒரு கப், இளநீர் - ஒரு கப், ஆரஞ்சு சாறு - அரை கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், புதினா - சிறிதளவு, இளநீர் வழுக்கை - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
தர்பூசணி, ஆரஞ்சு சாறு, எலுமிச்சைச் சாறு இவற்றுடன் உப்பு, இளநீர் சேர்த்துக் கலக்கவும். இளநீர் வழுக்கையை சிறிய துண்டு களாக்கிச் சேர்க்கவும். புதினாவால் அலங்கரித்து... குளிர வைத்தோ, ஐஸ் துண்டுகள் சேர்த்தோ பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ‘COOL’ ரெசிபி! ~
« Reply #4 on: April 11, 2014, 02:45:30 PM »
சுரைக்காய் தோசை



தேவையானவை:
துருவிய சுரைக்காய் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - புதினா - அரை கப், இஞ்சி - சிறிய துண்டு, தோசை மாவு - 2 கப், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாயை அரைத்துக்கொள்ளவும்.  தோசை மாவுடன் இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, புதினா, கொத்தமல்லி, சுரைக்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி, மாவை தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டெடுத்து, சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ‘COOL’ ரெசிபி! ~
« Reply #5 on: April 11, 2014, 02:47:11 PM »
தர்பூசணி - ப்ளம் பஞ்ச்



தேவையானவை:
தர்பூசணித் துண்டுகள் - ஒரு கப், ப்ளம் பழம் - 5, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், கறுப்பு உப்பு - அரை டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், புதினா இலைகள் - சிறிதளவு, பாதாம் துருவல் - ஒரு டீஸ்பூன், டீ டிகாக்ஷன் - ஒரு கப், ஐஸ் துண்டுகள் - சிறிதளவு.

செய்முறை:
டீ டிகாக்ஷனுடன் கொட்டை நீக்கிய ப்ளம் பழம், தர்பூசணி துண்டுகள், எலுமிச்சைச் சாறு, கறுப்பு உப்பு, சர்க்கரை, புதினா சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கண்ணாடி டம்ளரில் ஊற்றி, ஐஸ் துண்டுகளை நொறுக்கிச் சேர்க்கவும். துருவிய பாதாம் தூவி பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ‘COOL’ ரெசிபி! ~
« Reply #6 on: April 11, 2014, 02:52:56 PM »
லேயர்ட் புட்டிங்



தேவையானவை:
மேரி பிஸ்கெட் - 5 (நொறுக்கிக் கொள்ளவும்), வெனிலா கஸ்டர்டு - 2 கப், க்ரீம் - கால் கப், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், துருவிய சாக்லேட் - 5 டீஸ்பூன்

செய்முறை:
கண்ணாடி பவுல் அல்லது டம்ளரில்... பொடித்த பிஸ்கெட் தூளுடன் சர்க்கரை சேர்த்துப் போடவும். அதன் மேல் வெனிலா கஸ்டர்டு சேர்க்கவும். பிறகு, 2 டீஸ்பூன் சாக்லேட் துருவலை மேலே தூவவும். அதன் மேல் க்ரீம் ஊற்றவும். மீதமுள்ள சாக்லேட் துருவலையும் தூவி, ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து, பின்னர் எடுத்துப் பரிமாறவும்.
குறிப்பு: வெனிலா கஸ்டர்டுக் குப் பதில் வெனிலா ஐஸ்கிரீம் சேர்க்கலாம். க்ரீம் வேண்டாமென்றால் விட்டுவிடலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ‘COOL’ ரெசிபி! ~
« Reply #7 on: April 11, 2014, 04:26:32 PM »
பொரி தண்டாய்



தேவையானவை:
பொரி - கால் கப், பாதாம், முந்திரி - தலா 5, கசகசா - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், மிளகு - 4, பால் அல்லது கெட்டித் தயிர் - அரை கப், சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், பூசணி - வெள்ளரி விதை (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - ஒரு டேபிள்ஸ்பூன், துருவிய பாதாம் - முந்திரி - சிறிதளவு.

செய்முறை:
பொரி, பாதாம், முந்திரி, கசகசா, பூசணி - வெள்ளரி விதை ஆகியவற்றை சேர்த்து கொஞ்ச நேரம்  ஊறவைக்கவும். அதனுடன் சோம்பு, மிளகு, ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைக்கவும். இந்த விழுதை பால் அல்லது தயிரில் கலந்து, சர்க்கரை, தேவையான நீர் சேர்த்து, நன்கு அடிக்கவும். பிறகு, அதைக் குளிர வைத்து எடுத்து... துருவிய பாதாம், முந்திரி தூவி பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ‘COOL’ ரெசிபி! ~
« Reply #8 on: April 11, 2014, 04:28:25 PM »
கோகனட் ஐஸ் பாப்ஸ்



தேவையானவை:
கெட்டித் தயிர் - ஒரு கப், பழுத்த வாழைப்பழம் - 2, பால் - அரை கப், தேங்காய்ப்பால் - அரை கப், தேன் - 3 டேபிள்ஸ்பூன், தேங்காய் பொடி (பெரிய மளிகைக்கடைகளில் கிடைக்கும்) - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
தயிர், வாழைப்பழம், பால், தேங்காய்ப்பால், தேன் சேர்த்து, மிக்ஸி ஜாரில் ஊற்றி அடிக்கவும். இதனுடன் தேங்காய் பொடி சேர்த்து மீண்டும் அடித்துக்கொள்ளவும். ஐஸ் க்யூப் டிரேயில் ஊற்றி, ஃப்ரீஸரில் வைக்கவும். (குறைந்தது 4-5 மணி நேரம்). செட் ஆனதும் பல் குத்தும் குச்சியில் குத்தி எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு:
விருப்பப்பட்டால் ஃபுட் கலர், சீரக மிட்டாய் சேர்க்கலாம். தேங்காய் பொடி இல்லையென்றால், துருவிய தேங்காய் சேர்க்கலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ‘COOL’ ரெசிபி! ~
« Reply #9 on: April 11, 2014, 04:29:48 PM »
பிரெட் குல்ஃபி



தேவையானவை:
பிரெட் - 4 ஸ்லைஸ், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன், பொடித்த முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், தேன் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
பாலை சூடாக்கி, அதனுடன் வெண்ணெய் சேர்த்து, மிதமான தீயில் காய்ச்சவும். பாதியாக சுண்டியதும், பிரெட் துண்டுகள், சர்க்கரை, பாதாம், பிஸ்தா, முந்திரி சேர்க்கவும். கெட்டியானதும் இறக்கி ஆறவிடவும். இதில் வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கலக்கி, குல்ஃபி அச்சுகளில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும். செட் ஆனதும் எடுத்து, தேன் சேர்த்துப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ‘COOL’ ரெசிபி! ~
« Reply #10 on: April 11, 2014, 04:31:11 PM »
தேங்காய்ப்பால் கஞ்சி



தேவையானவை:
புழுங்க லரிசிக் குருணை - ஒரு கப், பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம், சீரகம் - தலா கால் டீஸ்பூன், பூண்டு - 8 பல், இரண்டாம் தேங்காய்ப்பால் - 2 கப், முதல் தேங்காய்ப்பால் - ஒரு கப், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
புழுங்கலரிசிக் குருணை, பாசிப்பருப்பு, வெந்தயம், சீரகம், பூண்டு ஆகியவற்றை 2-ம் தேங்காய்ப்பால், தேவையான நீர் சேர்த்துக் குழைய வேகவிடவும். வெந்த கஞ்சியுடன் தேவையான உப்பு, முதல் தேங்காய்ப்பால் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ‘COOL’ ரெசிபி! ~
« Reply #11 on: April 11, 2014, 04:32:20 PM »
தர்பூசணி குல்ஃபி



தேவையானவை:
தர்பூசணி விழுது - ஒரு கப், முலாம்பழ விழுது - ஒரு கப், வெள்ளரிக்காய் விழுது - அரை கப், சாட் மசாலா - அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன்.

செய்முறை:
தர்பூசணி விழுது, முலாம்பழ விழுது, வெள்ளரிக்காய் விழுது, உப்பு, சாட் மசாலா, எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்துக் கலக்கி, குல்ஃபி அச்சுகளில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் ஃப்ரீஸரில் வைத்து செட் செய்யவும். செட் ஆனதும், அச்சிலிருந்து எடுத்து, க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ‘COOL’ ரெசிபி! ~
« Reply #12 on: April 11, 2014, 04:33:58 PM »
பாஜ்ரா - மேத்தி ரொட்டி



தேவையானவை:
கம்பு மாவு - ஒரு கப், வெந்தயக் கீரை இலைகள் - அரை கப், கோதுமை மாவு - கால் கப், சீரகம், ஓமம் - தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தயிர் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், வெண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
கம்பு மாவு, கோதுமை மாவு, சீரகம், ஓமம், உப்பு, மிளகாய்த்தூள், தயிர், வெந்தயக் கீரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். தேவைக்கேற்ப நீர் சேர்த்து, சப்பாத்தி மாவு போல் பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். உருண்டையை சப்பாத்தி போல் திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும். மேலே வெண்ணெய் தடவி பரிமாறவும்.

குறிப்பு:
கோதுமை மாவுக்குப் பதில் கடலை மாவும் சேர்க்கலாம். கம்பு, வெந்தயக் கீரை இரண்டும் குளிர்ச்சியைத் தரும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ‘COOL’ ரெசிபி! ~
« Reply #13 on: April 11, 2014, 04:35:19 PM »
மணத்தக்காளி கீரை மண்டி



தேவையானவை:
மணத்தக்காளி கீரை - ஒரு கட்டு, பூண்டு - 4 பல், சின்ன வெங்காயம் - 6, காய்ந்த மிளகாய் - 4, அரிசி களைந்த நீர் - ஒரு கப், சீரகம், வெந்தயம், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்ப்பால் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து, நறுக்கி வைக்கவும். பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து... பூண்டு, வெங்காயத்தை சேர்த்துக் கிளறவும். இதனுடன் கீரையை சேர்த்து வதக்கி, அரிசி களைந்த நீரை ஊற்றி வேகவிட்டு... உப்பு, பெருங்காயம் சேர்க்கவும். கீரை வெந்ததும் தேங்காய்ப்பால் ஊற்றிக் கிளறி இறக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ‘COOL’ ரெசிபி! ~
« Reply #14 on: April 11, 2014, 04:36:31 PM »
பாஜ்ரா கிச்சடி



தேவையானவை:
கம்பு - ஒரு கப், பச்சைப் பயறு - அரை கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், லவங்கம் - 2, துருவிய இஞ்சி - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
சுத்தம் செய்த கம்பு, பச்சைப் பயறு இரண்டையும் வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். தேவையான நீர், மஞ்சள்தூள் சேர்த்து குக்க ரில் வைத்து குழைய வேகவிடவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, சீரகம், லவங்கம், துருவிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலையை தாளித்து, வேகவைத்த கம்பு - பச்சைப் பயறு கலவையில் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.