Author Topic: ~ டொமேட்டோ ஸ்டிக்ஸ் ~  (Read 416 times)

Offline MysteRy

~ டொமேட்டோ ஸ்டிக்ஸ் ~
« on: April 10, 2014, 09:13:01 PM »
டொமேட்டோ ஸ்டிக்ஸ்



தேவையானவை:
அரிசி மாவு - ஒரு கப், சோள மாவு - முக்கால் கப், கடலை மாவு - கால் கப், தக்காளி - 2, இஞ்சி - ஒரு சிறு துண்டு, பூண்டு - 6 பல், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:
தக்காளியை சுடுநீரில் போட்டுவைத்து... பின்னர் பூண்டு, தோல் சீவிய இஞ்சி சேர்த்து அரைக்கவும். அதனுடன் அரிசி மாவு, சோள மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, நீர் விட்டுப் பிசைந்து வைக்கவும். சிறிது நேரம் கழித்து மாவை கையால் குச்சிபோல் செய்து சூடான எண்ணெயில் பொரிக்கவும்.