இந்தக் கவிதையின் நாயகி
இப்போது என்ன செய்துகொண்டிருப்பாள்
முத்துமுத்தாய்
நெற்றியில் வியர்க்க
சமையல் வேலையாய் இருப்பாளோ
தளர்வாக உடையணிந்து
மெத்தையில் சாய்ந்தபடி
தொலைக்காட்சியில் தொலைந்திருப்பாளோ
மார்பில் புத்தகத்தை அணைத்தபடி
ஆழ்துயிலில் இருப்பாளோ
என் நினைவில்
நகத்தைக் கடித்தபடி
நினைவுக்கடலில் முழ்கி இருப்பாளோ
குடும்பத்தாருடன் குதுகலமாக
அரட்டை அடித்தபடி
சிரித்து பேசிக்கொன்டிருப்பாளோ
இல்லை
எதுவும் சொல்லமுடியாத ஒன்றை
சொல்ல முனையும்
இது போன்றதொரு கவிதையை
சிந்தித்துக் கொண்டிருப்பாளோ