தனித்த சாலையின் இருளில்,
மழை சாரலுடன்
இனிய இசையில்,
மரங்கள் சூழ,
உன் தோள் சாய்ந்து .,
கதைகள் பேசிக் கொஞ்சிக் கெஞ்ச தவிக்கிறேன்...
இசையின் இன்பத்தை உன்னோடு இசைக்க.,
இன்னும் இனிக்கிறது எனக்கு..
என் ரசனைகளை.,
என்னிலும் அதிகமாய் நீ ரசிக்க.,
சொக்கித்தான் போனேனடா..!!
உன் சீண்டல்களை நினைத்து நினைத்து.,
ரசித்து சிரிக்கையில்.,
என்னை நானே மறந்து போனேனடா..!!
நீ இல்லாத போதும்.,
காற்றில் உன்னோடு பேசிக் கொண்டிருப்பதை உணர்கையிலே.,
உதடு கடித்துக் கொள்கிறேன்.!!
உன் அன்பாலும்., நினைவுகளாலும் .,
என்னை ஆளும்.,
என் இனிய கொடுமை நீயடா...!!
By.,
Pinky..