Author Topic: ~ ஒளியும் ஒலியும்! ~  (Read 565 times)

Offline MysteRy

~ ஒளியும் ஒலியும்! ~
« on: April 04, 2014, 04:12:07 PM »
ஒளியும் ஒலியும்!



முதல்முறை என் விழிகள்
தேடியது உன் வரவை நோக்கி!

அவள் வருவாளா என மனம்
பட்டாம்பூச்சிகளாய் சிறகடிக்க‌

தூரத்தில் இருள் விலக‌
அமைதி அலறி அடித்து ஓட!

அங்கே ஒரு ஒளியும் ஒலியும்
அரங்கேறியது.

எல்லோரும் காண ஒரு அழகு
தேவதையாய் மின்னினாய் என் அருகாமையில்!

உன் முதல் பரிசம் ஆயிரமாயிரம்
ஆனந்த ஊற்றுகள் பொங்கிட‌
நான் மெய்மறக்கையில்
ஆச்சர்யமானேன் எல்லோருக்கும்!
உன் அருகாமை என்னை இம்சிக்க‌

என்னைப்போலவே உன் வருகையை
ஆயிரமாயிரம் கண்கள் ஏங்குகின்றன!


மழையே! உன் வரவை எண்ணி!!

Offline Maran

Re: ~ ஒளியும் ஒலியும்! ~
« Reply #1 on: April 04, 2014, 04:41:42 PM »


கோடை நேரத்தில் அழகான மழைக்கவிதை

உங்கள் எண்ணம் நிறைவேறினால் மகிழ்ச்சிதான் தோழி !



Offline MysteRy

Re: ~ ஒளியும் ஒலியும்! ~
« Reply #2 on: April 04, 2014, 05:51:11 PM »
Nandri Maran ungal comment ku  :) :)