Author Topic: ~ பீட்ரூட் சம்மி ! ~  (Read 424 times)

Offline MysteRy

~ பீட்ரூட் சம்மி ! ~
« on: March 29, 2014, 02:17:29 PM »
பீட்ரூட் சம்மி !



தேவையானவை:
கொண்டைக்கடலை - அரை கப், துருவிய பீட்ரூட் - அரை கப், சுக்குப் பொடி - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், கடலை மாவு - கால் கப், எண்ணெய் - தேவையான அளவு.

ஸ்டஃப்பிங் செய்ய:
முளைகட்டிய பாசிப்பயறு - அரை கப், முந்திரிப் பருப்பு - 10, உலர்திராட்சை - 10, சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கொண்டைக்கடலையை ஊறவைத்து வேகவிடவும். துருவிய பீட்ரூட்டை உப்பு கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும். வேக வைத்த கொண்டைக்கடலையை கட்டி இல்லாமல் மசித்துக் கொள்ளவும். பீட்ரூட்டை பிழிந்து பாத்திரத்தில் போட்டு, சுக்குப் பொடி, கரம் மசாலாத்தூள், கடலை மாவு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். ஸ்டஃப்பிங் செய்ய கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்துப் பிசையவும்.
பிசைந்து வைத்த கொண்டைக்கடலை கலவையை உருண்டைகளாக உருட்டி, அதை கைகளால் கிண்ணம் போல் செய்துகொள்ளவும். அதனுள் ஸ்டஃப்பிங் கலவையை வைத்து மூடி, உருண்டைகளாக உருட்டவும். எண்ணெயைக் காயவைத்து, அதில் உருண்டைகளைப் போட்டு பொரிக்கவும். சூடாக பரிமாறவும்.