Author Topic: ~ சாண்ட்விச் பஜ்ஜி... ருசியோ ருசி! ~  (Read 409 times)

Online MysteRy

சாண்ட்விச் பஜ்ஜி... ருசியோ ருசி!



தேவையானவை:
பெரிய சைஸ் உருளைக்கிழங்கு - 4, கடலைமாவு - ஒரு கப், பச்சைப் பட்டாணி - 100 கிராம், பெரிய வெங்காயம் - ஒன்று, பூண்டு - 6 பல், பச்சை மிளகாய் - 4, சீஸ் - 50 கிராம் (துருவிக்கொள்ளவும்), மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பச்சைப் பட்டாணி, பூண்டு, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை வதக்கி அரைத்து, தேவையான உப்பு சேர்த்து வைக்கவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி வட்ட வில்லைகளாக நறுக்கவும். ஒரு வில்லையில் அரைத்த விழுதை பூசி, சீஸ் துருவலை தூவவும். அதை மற்றொரு உருளைக்கிழங்கு வில்லையால் மூடி வைக்கவும்.

கடலை மாவுடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, நீர் விட்டு, கெட்டியாகக் கரைக்கவும். செய்துவைத்துள்ள உருளைக்கிழங்கு 'சாண்ட்விச்’சை மாவில் முக்கி எடுத்து, சூடான எண்ணெயில் பொரிக்கவும்.
உருளைக்கிழங்குக்கு பதில் பனீரை அகல துண்டுகளாக நறுக்கியும் இதேபோல் பஜ்ஜி செய்யலாம்.