பொடுகு தொல்லை நீங்க !

பனிகாலம்.... தலையில் பனித்துளிகளைப் போன்று பொடுகும், செதில்களும் வந்து இம்சிக்கும். இதைப் போக்கி நிம்மதி தருகிறது இந்த நெல்லிக்காய் பேஸ்ட். வெந்தயப்பொடி - 1 டீஸ்பூன், கடுக்காய் பொடி- அரை டீஸ்பூன், கடலை மாவு -3 டீஸ்பூன்.. இந்த மூன்றையும் கலக்கும் அளவுக்கு எலுமிச்சைச்சாறு, பச்சை நெல்லிக்காய் சாறு (இரண்டும் சம அளவு) சேர்த்து பேஸ்ட் ஆக்குங்கள்.
இந்த பேஸ்ட்டை தலைக்கு `பேக்' ஆகப் போட்டு 10 நிமிடம் கழித்து அப்படியே தண்ணீர் விட்டு அலசுங்கள். வெந்தயம், கடுக்காய், கடலை மாவு மூன்றும் தலையை சுத்தப்படுத்தி செதில்களை நீக்கும். எலுமிச்சைச்சாறு தலையில் உள்ள அரிப்பைப் போக்கும். நெல்லிக்காய் முடியின் நுனி பிளவை நீக்கி முடியை கருகருவென வளரச்செய்யும்.