Author Topic: இவர்கள் பகுத்தறிவாளர்களா?  (Read 5888 times)

Offline Global Angel

இவர்கள் பகுத்தறிவாளர்களா?

கல்லை செதுக்கி
அதற்கு சாமி என்று பெயரிட்டு
மாலை அணிவித்து வணங்கினால்
அது மூட நம்பிக்கை முட்டாள் தனம் என்பார்கள் பகுத்தறிவாளர்கள் (எ) நாத்திகவாதிகள்.

ஆனால் அவர்களோ
கல்லை செதுக்கி
அதற்கு பெரியார் என பெயரிட்டு
மாலை இட்டு வணங்கி  மரியாதை செய்வர்
இவர்களின் பகுத்தறிவை  என்ன சொல்ல?


குறிப்பு: பகுத்தறிவாளர்களின் மத்தியிலும் மூடத்தனம்  உண்டு என்பதை  சுட்டி காட்டுவதற்கே இதை எழுதியுள்ளேன். எனக்கும் பகுத்தறிவில் நம்பிக்கை உண்டு. தமிழகத்தில் பெயருக்கு பெண்ணால் ஜாதி இடம் பெறுவதில்லை. இது பெரியாரின் சாதனை தான். சிந்திக்கத் தெரிந்தவர்கள்  சிந்திக்கட்டும்