சுக்கு - மல்லி பொடி டீ நோய் எதிர்ப்பு சக்தி தரும்!

எங்கள் வீட்டு டீயில் தினமும் இந்த பொடியை சேர்ப்போம். அனைவருக்கும் நல்லது. முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி தரும். ஆனால் நான் டீ,காபி குடிக்கவே மாட்டேன். இந்த பொடியை மட்டும் பாலில் போட்டு கொதிக்க வைத்து வெல்லம் கலந்து குடிப்பேன்.
சுக்கு - 100 கிராம்
மல்லி -100 கிராம்
ஏலக்காய் - 25
மிளகு - 50 கிராம்
அனைத்தையும் பொடி செய்து தினமும் டீ போடும் போது 1 ஸ்பூன் சேர்த்து கொதிக்க வைக்கவும்.