Author Topic: ~ சிங்காடா ~  (Read 420 times)

Offline MysteRy

~ சிங்காடா ~
« on: February 23, 2014, 09:14:38 PM »
சிங்காடா




தேவையானவை:

கோதுமை
மாவு - 60 கிராம்,


மைதா - ஒரு கப், 


வெங்காய விதை (டிபார்ட்மென்ட்
கடைகளில் கிடைக்கும்) - அரை டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை,


சீரகம் -
2 டீஸ்பூன்,


பச்சை மிளகாய் - 2,


வெங்காயம் - 2,


மிளகாய்த்தூள் - ஒரு
டீஸ்பூன்,


தனியாத்தூள் - 2 டீஸ்பூன்,


மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்,


பொடியாக
நறுக்கிய காலிஃப்ளவர் - 2 கப்,


உருளைக்கிழங்கு - 2,


வறுத்த வேர்க்கடலை -
அரை கப்,


எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், 


எண்ணெய், உப்பு - தேவையான
அளவு.


செய்முறை: வெங்காயம்,
பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். காலிஃப்ளவரை வேக வைத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, பொடியாக 'கட்’ செய்யவும்.

கோதுமை மாவு, மைதா, சமையல் சோடா, அரை டீஸ்பூன் வெங்காய
விதை, உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, தண்ணீர் தெளித்து கெட்டியாக
பிசையவும். வாணலியில் 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய் ஊற்றி, சீரகம் போட்டு
தாளிக்கவும். பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

இதனுடன்
மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கவும். இதில்
சிறிதளவு தண்ணீர் ஊற்றி வதக்கி, வேக வைத்த காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு
சேர்த்து... வறுத்த வேர்க்கடலை, உப்பு போட்டு வதக்கி, அடுப்பை அணைக்கவும்.
எலுமிச்சைச் சாறு ஊற்றி கிளறவும்.

பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போல்
தேய்த்து, இரண்டாக 'கட்’ செய்யவும். இதை கோன் போல் செய்து, அதற்குள்
காய்கறி கலவையை வைத்து, ஓரத்தில் தண்ணீர் தொட்டு ஒட்டி... காய்ந்த
எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

இது ஒரு பெங்காலி டிஷ்.