இலந்தைப்பழ மருத்துவம்:-

இலந்தைப் பழத்தில் க்ளூடாமிக் அமிலம் உள்ளது. இது மூளையைச் சுறுசுறுப்பாக்கும். எனவே மூளை உழைப்பு செய்வோர்க்கெல்லாம் இலந்தைப்பழம் சிறந்த நண்பன்.
ஆப்பிள் பழத்தில் இல்லாத வைட்டமின் ஏ உயிர்ச்சத்து இலந்தையில் நிறைய காணப்படுகிறது. நிறைய சுண்ணாம்புச்சத்தும் இருக்கிறது. எனவே எலும்பு, பற்கள் உறுதி பெற அடிக்கடி இலந்தைப்பழம் சாப்பிடலாம். வயிற்றுப்போக்கு, சீதளபேதி, கீல்வாயுப் பிடிப்பு, நீரிழிவு, மலச்சிக்கல் முதலியவற்றிற்கு இப்பழம் நல்ல மருந்து.
வியற்வை நாற்றமடிக்கும் இடங்களான உள்ளங்கால், அக்குள், உள்ளங்கை போன்ற இடங்களில் இலந்தை இலைகளை நசுக்கிப் பிழிந்து அந்தச் சாற்றை வியர்வை வரும் இடங்களில் தடவிக் காய வைக்கவும். கொஞ்ச நேரத்திற்குப்பின் கழுவவும். வியர்வை நாற்றம் மறைந்துவிடும்.
தொண்டைப்புண், ஈறுகளில் இரத்தப்பெருக்கு, வாய்ப்புண் இவற்றிற்கு இலந்தை இளந்தளிர்களை நீரில் போட்டு, உப்பைச் சேர்த்துக் கொதிக்க வைத்துக் கொப்பளித்தால் பலன் தெரியும். முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும்.