விலக நினைத்தபின்
வீட்டுக் கதவை
சாத்தாதே
இதயக் கதவை சாத்திவிடு
இதயம் இல்லாதவளே
உன் காதல் கடிதங்களை
எரித்துவிட்டேன்
காயங்களை
என்ன செய்வது
ஒவ்வொரு ஆணின்
வெற்றிக்குப் பின்னாலும்
ஒரு பெண்ணிருக்கிறாள்
ஒவ்வொரு ஆணின்
கண்ணிர்துளிகளுக்குப் பின்னாலும்
ஒரு பெண்ணிருக்கிறாள்