Author Topic: ~பெண் கல்வி~  (Read 439 times)

Offline sameera

~பெண் கல்வி~
« on: February 13, 2014, 07:44:08 PM »
பெண் கல்வி குறித்து பாரதி பாடினாலும்,
அறிஞர்கள் எவர் உரைத்தாலும்,
பொருளை உணர்ந்த அறிவாளிகள்,
பெண்களின் உணர்வை புரியாத அறிவிலிகள்...!
வாழ்வின் அர்த்தங்கள் ஆண்மகனிர்கு..
கல்லூரி முடித்தவுடன்!
ஆனால் பெண்களுக்கோ..,
பெற்றோர்கள் கஷ்டத்தை தன்னிடம் பகிரும்வரை!
பள்ளி கல்லூரிக்கு அனுப்பிவிட்டால் பெண்களுக்கு கல்வி கிடைத்திடுமா?!
பெண்கள் மற்றவர்களிடம் கஷ்டத்தை கூறும் வரை..
சமூதாயத்திற்கு புரிந்திடுமா அவர்களின் மனது?
காலை சமையல் பிறகு கல்லூரி,
மாலை படிப்பு தனது சந்தோசம்..
ஆகியவை மட்டும் அவர்களின் சிந்தைகள் அல்ல!
பெற்றோரின் உழைப்பும் கஷ்டமும்,
சகோதரன்/சகோதரியின் ஆட்சியையும்,
சமுதாயத்தில் அவள் மேல் உள்ள குற்றங்கள் ஆகியவையும்,
அவர்களின் சிந்தையில்!
ஆதலால்..,
கல்வியை கொடுக்கும் இக்காலத்திய உலகம்,
அவளுக்கு இன்பத்தையும் கொடுத்தால் நன்று!
பெண்ணின் கல்வியும்,அவளின் இன்பமும்..,
தனிப்பெரும் இல்லங்களை மட்டுமல்லாமல்,
நாட்டிற்கே அவளது பெண்மை குணங்களினால்,
இன்பத்தை அளிக்கிறாள்..
நாட்டிற்கே இன்பத்தை விலைவிப்பதாலோ என்னவோ,
நமது நாட்டை தாய்நாடு என்கிறார்கள்!!! ;)
« Last Edit: February 13, 2014, 07:46:20 PM by sameera »