Author Topic: போக்குவரத்து  (Read 5771 times)

Offline Global Angel

போக்குவரத்து
« on: November 25, 2011, 05:44:57 AM »
போக்குவரத்து


ஏறக்குறைய முன்னூறு நானூறு ஆண்டுகளாய் மதராஸ் பட்டினத்தின் நடுவில் பரம்பரையாய் வாழ்ந்து வரும் எங்கள் முப்பாட்டன் காலந்தொட்டு மதராஸ் பட்டினத்தில் ஏற்ப்பட்டு வரும் மாற்றங்களை காண்பதற்கு பிரம்மிப்பாய் தான் இருக்கிறது, என் கொள்ளு தாத்தாவின் காலத்தில் மதராஸில் இருந்த போக்குவரத்திற்கும் தற்போதிருக்கும் போக்கு வாரத்திற்கும் எத்தனை மாற்றங்கள், கொள்ளு தாத்தாவின் ஆத்மா மதராஸில் தான் நடந்து சென்ற அல்லது ட்ராமில் சென்ற இடங்களை பார்க்க வேண்டும் என்று விரும்பி வந்துவிட்டால், நிச்சயமாக ஏமாந்து இது மதாராசாக இருக்க வாய்ப்பில்லை என எண்ணி திரும்பி ஏக்கத்தோடு போய்விடும் என்றே தோன்றுகிறது.

போக்குவரத்து அதிகரித்திருப்பதற்கேற்ப்ப சென்னையில் பல புதிய வீதிகளும் ஏற்பட்டு இருப்பதோடு பழைய வீதிகள் பெரிதாக்கபட்டும் பெரிதாக்க இயலாத போக்குவரத்து நிறைந்த வீதிகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டும் நெரிசலை எப்படியெல்லாம் தவிர்க்க முடியுமோ அத்தனை முயற்சிகளையும் அரசும் போக்குவரத்து அதிகாரிகளும் எடுத்திருப்பதற்கு உண்மையில் பொது மக்கள் நன்றி சொல்லவேண்டும். மேம்பாலங்களை அமைத்து மிக மோசமான போக்குவரத்து நெரிசல்களுக்கு விமோசனம் கொடுத்திருப்பதற்கு மட்டுமே மக்கள் என்றென்றும் நன்றிகடன்பட்டவர்கள் ஆவர்.

கிறிஸ்துவ வேதாகமத்தில் ஏசுநாதர் சொன்ன ஒரு உவமைக்கதை நினைவிற்கு வருகிறது, :>

வெளியூருக்கு பயணம் செல்ல புறப்பட்ட எஜமான் ஒருவன் போவதற்கு முன் தன்னிடத்திலிருந்த வேலைகாரர்கள் ஒருவனுடைய கையில் ஐந்து தாலந்து [அந்த தேசத்தின் பணம்], மற்றொருவனிடத்தில் இரண்டு தாலந்தும், இன்னொருவனிடத்தில் ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு புறப்பட்டு போனான்.

ஐந்து தாலந்தை வாங்கியவன் அதைக்கொண்டு வியாபாரம் செய்து இன்னும் ஐந்து தாலந்து சம்பாதித்தான், அப்படியே இரண்டு தாலந்து வாங்கியவனும் இன்னும் இரண்டு தாலந்தை சம்பாதித்தான், ஒரு தாலந்தை வாங்கியவனோ அதை கொண்டு நிலத்தை தோண்டி தன் எஜமானுடைய பணத்தை புதைத்து வைத்தான், வெகுகாலத்திற்கு பின் அவர்களின் எஜமான் திரும்பி வந்து அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான்,

ஐந்து தாலந்துகளை வாங்கியவன் வந்து மேலும் ஐந்து தாலந்துகளை தான் சம்பாதித்தேன் என்று சொல்லி கொடுத்தான், அதே போல இரண்டு தாலந்து வாங்கியவனும் மேலும் இரண்டு தாலந்துகளை சம்பாதித்தேன் என்று சொல்லி கொண்டுவந்து கொடுத்தான்,

அந்த எஜமான் அவர்கள் இருவரையும் பார்த்து கொஞ்சத்தில் உண்மையுள்ளவர்களாய் இருந்தீர்கள் அதனால் உங்களை அநேகத்தின் மேல் அதிகாரியாக வைப்பேன், உங்கள் எஜமானுடைய சந்தோஷத்திறக்குள் பிரவேசியுங்கள் என்றான்.

ஒரு தாலந்தை வாங்கியவன் வந்து நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனிதன் என்று அறிவேன் அதனால் நான் பயந்துபோய் உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன் இதோ உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்று சொன்னான்,

அதற்க்கு அந்த எஜமான் அவனைப் பார்த்து பொல்லாதவனும் சோம்பேரியுமான வேலைக்காரனே நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே அப்படியானால் என் பணத்தை காசுக்காரர் இடத்தில் போட்டுவைத்திருந்தால் நான் வரும்போது வட்டியுடன் வாங்கிக்கொள்வேனே என்று சொல்லி, அவனிடத்திலிருந்த தாலந்தை வாங்கி பத்து தாலந்து வைத்திருந்தவனிடத்தில் கொடுங்கள் என்றான், என்று உவமையாய் கதை சொல்லி இருக்கிறார்,

சென்னையில் போக்குவரத்திற்கென்று என்ன வசதிகள் மேம்பட செய்யப்பட்டுள்ளது என்ற வித்தியாசம் அடுத்த மாநிலமான கர்நாடகாவிற்க்குப் போனால் அங்கு காணப்படும் போக்குவரத்து நெரிசலும் அதை தாங்கும் அளவிற்கு வீதிகள் மேம்படுத்தப்படாமல் இருப்பதையும் காண முடிகிறது. தமிழகத்தில் ஆட்சி கிடைத்திருக்கும் காலத்தில் எதையெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளதை கண்கூடாக சென்னையிலும் சென்னையின் புறநகர்களிலும் கூட காணமுடிகிறது.


போக்குவரத்துவிதிகளை மீறி செல்லும் வாகனங்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதும் கூட சரியானபடி நடந்து வருவதால் போக்குவரத்து விதிகளை மீற முயல முடியாதவகையில் செயல்படுத்தபட்டிருப்பதும் சிறப்பானதே. பாதசாரிகள் நடக்கவேண்டிய நடைபாதைகளில் சிறிய கடைகள் நிரம்பி இருப்பதால் பல இடங்களில் பாதசாரிகள் வாகனங்கள் செல்லும் வீதியில் நடக்கவேண்டிய சூழ்நிலை காணபடுகிறது, நடைபாதை கடைகளை அப்புறப்படுத்திவிட்டால் நெரிசல் மிகுந்த பல இடங்களில் மக்கள் நடைபாதையில் நடப்பதற்கும் வாகனங்கள் எளிதாக வீதிகளில் ஓட்டுவதற்கும் வசதி ஏற்ப்படும்.
                    

Offline RemO

Re: போக்குவரத்து
« Reply #1 on: November 25, 2011, 01:21:44 PM »
நல்ல பதிவு ஏஞ்செல்

மக்கள் தொகை அதிகரித்துவிட்ட இக்காலத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்துவது மிகவும் கடினம் தான்
அரசாங்கம் செய்து வரும் முயற்சிகள் பாராட்டத்தக்கது, ஆனால் மக்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றினால் இன்னும் நெரிசல் குறையும், விபத்துகள் குறையும்

Offline Global Angel

Re: போக்குவரத்து
« Reply #2 on: November 25, 2011, 02:00:50 PM »
உண்மைதான் நமக்கென்று வரும்போதுதான் நாம் அடுத்தவர்களிடம் விதிமுறைகளை எதிர்பார்ப்போம் .... இதுவே நாம் என்றால் நம் இஷ்டத்திற்கு பண்ணுவோம் .. இந்த பழக்கத்தை மாத்திகொண்டாலே ... நிறைய மாற்றங்கள் வரும்