Author Topic: ~ சீரக குழம்பு! ~  (Read 517 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227446
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ சீரக குழம்பு! ~
« on: February 04, 2014, 02:43:58 PM »
சீரக குழம்பு!



தேவையான பொருட்கள்:
1. கடுகு - 1/4 தேக்கரண்டி
2. சீரகம் - 4 தேக்கரண்டி
3. பூண்டு - 10 பல்
4. உளுந்து - 1/4 தேக்கரண்டி
5. கடலை பருப்பு - 1/4 தேக்கரண்டி
6. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
7. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
8. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
9. உப்பு - தேவைக்கு
10. வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
11. தக்காளி - 1 (நறுக்கியது)
12. கருவேப்பிலை
13. கொத்தமல்லி
14. எண்ணெய் - 1 குழிக்கரண்டி
15. புளி கரைசல் - 1/4 கப்

செய்முறை:
எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.
பின் சீரகம் சேர்த்து லேசாக வதக்கவும்.
இதில் நறுக்கிய வெங்காயம், உரித்த பூண்டு சேர்த்து வதக்கவும்.
சிவந்ததும் தக்காளி சேர்த்து குழய வதக்கவும்.
இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிரட்டி தண்ணீர் சிறிது ஊற்றி கொதிக்க விடவும்(அதிகம் சேர்க்க வேண்டாம், குழம்பு தண்ணியாக இருக்கும்).
தூள் வாசம் போக கொதித்ததும், புளி கரைசல் சேர்த்து குழம்பு பதத்தில் எண்ணெய் திரண்டு வரும்போது இரக்கி விடவும்.