Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ நோய்கள் தீர்க்கும் காய்கள், கனிகள்! ~
« previous
next »
Print
Pages: [
1
]
2
3
Go Down
Author
Topic: ~ நோய்கள் தீர்க்கும் காய்கள், கனிகள்! ~ (Read 3843 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227450
Total likes: 29057
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ நோய்கள் தீர்க்கும் காய்கள், கனிகள்! ~
«
on:
January 31, 2014, 09:20:12 PM »
''இன்னிக்கு... பாவக்கா பொரியலா?... வாழைத்தண்டுக் கூட்டா...? அய்யே... எனக்கு சாப்பாடே வேண்டாம்...'' என்று முகம் சுளிப்பது இன்றைய தலைமுறைக்கு வழக்கமாகிவிட்டது. இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, என வித்தியாசமான சுவைகளையும், சத்துக்களையும் அள்ளித்தருகிற அனைத்துக் காய்கறிகளையும் குழந்தையிலேயே பழக்க மறந்துவிட்டதன் விளைவுதான், இந்த சுளிப்பு.
வாய்க்கு ருசியான பதார்த்தம் என்றாலே, குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு மட்டும்தான் ஞாபகத்தில் இருக்கும். அந்த அளவுக்கு, 'செய்வது சுலபம்’ என்பதால், குக்கரில் சாதத்துடன் உருளைக்கிழங்கை வேகவைத்து, காரம் போட்டுச் செய்து கொடுத்துவிடுகின்றனர். இப்படி, தினமும் ஒரே காய்கறியை மட்டும் உணவில் சேர்ப்பதால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காது.
இயற்கையில் இல்லாதது எதுவுமே இல்லை. தினமும் ஒரு கீரை, மூன்று வகைக் காய்கறிகள், மூன்று விதமான பழங்களைச் சேர்த்துக்கொண்டால், உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் கிடைத்துவிடும்.
குழந்தைக்கு உணவை ஊட்டத் தொடங்கும் காலத்திலேயே, அறுசுவை உணவைப் பழக்கப்படுத்தி, அவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு அடித்தளம் அமைத்துவிடலாம்.
மருந்து மாத்திரைகளை உணவாகச் சாப்பிடும் நிலையை மாற்றி, உணவையே மருந்தாக உண்ணும் நிலைக்கு நாம் செல்வது ஒன்றுதான் ஆரோக்கியமான வாழ்வை நிரந்தரமாகத் தக்கவைத்துக்கொள்ள சிறந்த வழி.
இயற்கை உணவுகளான காய்கறி, பழங்கள், கீரை வகைகளில் இருக்கும் சத்துக்கள், பலன்கள் அவற்றை எப்படிச் சாப்பிட வேண்டும் எனப் பட்டியலிட்டிருக்கிறார் சீஃப் டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி. என்ன நோய்க்கு என்ன சாப்பிட வேண்டும் என விளக்கியிருக்கிறார் இயற்கைப்பிரியன் ரத்தின சக்திவேல்.
உங்களின் வயிற்றுக்கு அற்புத விருந்து படைத்திருக்கும் காய்கறி, பழங்கள், கீரைகளைப் பற்றிய இந்த இணைப்பிதழ், நோயை விரட்டி... உற்சாகமான ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டும் என்பது நிச்சயம்!
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227450
Total likes: 29057
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ நோய்கள் தீர்க்கும் காய்கள், கனிகள்! ~
«
Reply #1 on:
January 31, 2014, 09:23:25 PM »
பீன்ஸ்
சத்துக்கள்: வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம் மற்றும் நார்ச் சத்து அதிகம் உள்ளன. பொட்டாசியம், துத்தநாகம் ஓரளவும், மிகக்குறைந்த அளவு கலோரியும் இருக்கின்றன.
பலன்கள்: ரத்தவிருத்திக்கு நல்லது. கர்ப்பிணிகள் பொரியலாகச் செய்து சாப்பிடலாம். மிதமாக அரைவேக்காட்டில் வேகவைத்தால் போதும். மலச்சிக்கல் பிரச்னை தீரும். ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. சிறுநீரகக்கல் அடைப்பு இருப்பவர்கள் சேர்க்க வேண்டாம்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227450
Total likes: 29057
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ நோய்கள் தீர்க்கும் காய்கள், கனிகள்! ~
«
Reply #2 on:
January 31, 2014, 09:25:46 PM »
பீர்க்கங்காய்
சத்துக்கள்: நீர்ச் சத்தும், தாது உப்புகளும் உள்ளன. கலோரி அளவும் குறைவு. மிதமான அளவு புரதம், நார்ச் சத்து உள்ளன.
பலன்கள்: உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். வெயில் காலத்துக்கு ஏற்றது. மலச்சிக்கல் வராது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இந்தக் காயை லேசாக வேகவைத்து, வறுத்த உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சிறிது புளி, உப்பு சேர்த்துத் தொக்காகச் செய்து சாப்பிடலாம்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227450
Total likes: 29057
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ நோய்கள் தீர்க்கும் காய்கள், கனிகள்! ~
«
Reply #3 on:
January 31, 2014, 09:28:21 PM »
கேரட்
சத்துக்கள்: பீட்டாகரோட்டின், நார்ச் சத்து, பாஸ்பரஸ் அதிகம் உள்ளன. பொட்டாசியம், ஃபோலிக் அமிலம், கொலின், கால்சியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் சி சத்துக்கள் ஓரளவும், இரும்புச் சத்து மிகக் குறைந்த அளவும் இருக்கின்றன.
பலன்கள்: கண், தோல், எலும்பு உறுதிக்கும், ரத்தவிருத்திக்கும் நல்லது. கர்ப்பிணிகள், தாய்மார்கள், குழந்தைகள் என அனைவரும் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். துருவி, வெதுவெதுப்பான நீரில் போட்டு எடுத்தும் சாப்பிடலாம். கண் பார்வைக்கு மிகவும் நல்லது. உடல் பருமனாகாமல் காக்கும். கேரட் சாறுடன் பத்து மிளகு சேர்த்துச் சாப்பிட்டுவர, உடல் கழிவுகள் வெளியேறும்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227450
Total likes: 29057
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ நோய்கள் தீர்க்கும் காய்கள், கனிகள்! ~
«
Reply #4 on:
January 31, 2014, 09:41:56 PM »
வெள்ளரிக்காய்
சத்துக்கள்: நீர்ச் சத்து நிறைந்தது. மிகக் குறைந்த அளவு கலோரி, ஓரளவு பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலம் இருக்கின்றன. சிறிதளவு கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து உள்ளன.
பலன்கள்: தாகத்தைத் தணிக்கும். சருமப் பிரச்னை நீங்கும். குளுமை தரும்.
பிஞ்சு வெள்ளரிக்காய் வெயில் காலத்தில் கிடைக்கக்கூடியது. அப்படியே சாப்பிடலாம். தடிமனான வெள்ளரியை சாலட், கூட்டு செய்து சாப்பிடலாம். சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்கள், சர்க்கரை நோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227450
Total likes: 29057
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ நோய்கள் தீர்க்கும் காய்கள், கனிகள்! ~
«
Reply #5 on:
January 31, 2014, 10:43:45 PM »
வெண்டைக்காய்
சத்துக்கள்: அதிக அளவு ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி சத்துக்களும், ஓரளவு புரதமும், குறைந்த அளவு பீட்டாகரோட்டின் மாவுச் சத்தும், பொட்டாசியமும் இருக்கின்றன.
பலன்கள்: உடல் மற்றும் மூளை செயல்பாட்டுக்கும், ரத்த விருத்திக்கும் மிகவும் நல்லது. எல்லோருக்கும் ஏற்றது. அரைவேக்காட்டில் வேகவைத்துச் சாப்பிடலாம்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227450
Total likes: 29057
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ நோய்கள் தீர்க்கும் காய்கள், கனிகள்! ~
«
Reply #6 on:
January 31, 2014, 10:46:48 PM »
பாகற்காய்
சத்துக்கள்: 'பாலிபெப்டு டைட்’ எனும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் வேதிப் பொருள் நிறைந்துள்ளது. நார்ச் சத்து நிறைந்தது. குறைந்த அளவு பாஸ்பரஸ், புரதம், இரும்பு, கலோரி கால்சியம் உள்ளன.
பலன்கள்: உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தொற்று நோய்கள் வராது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. வயிற்றுப்பூச்சித் தொல்லை நீங்கும். எல்லோருக்கும் ஏற்றது. தேங்காய் சேர்த்துக் கூட்டாகச் செய்து சாப்பிடலாம்.
வேறு அலோபதி மருந்துகள் சாப்பிடும்போது, இதனைச் சாப்பிடக்கூடாது. மருந்தின் தன்மையை முறியடித்துவிடும். மலச்சிக்கல் வராது. அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227450
Total likes: 29057
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ நோய்கள் தீர்க்கும் காய்கள், கனிகள்! ~
«
Reply #7 on:
January 31, 2014, 10:50:55 PM »
வாழைத்தண்டு
சத்துக்கள்: நார்ச் சத்து, நீர்ச் சத்து அதிகம் இருக்கின்றன. ஓரளவு வைட்டமின் சி மற்றும் பாஸ்பரஸும், குறைந்த அளவு கலோரியும் உள்ளன.
பலன்கள்: அதிக எடை உள்ளவர்கள், தினமும் எடுத்துக்கொள்ளலாம். நீர்ச் சத்து அதிகம் இருப்பதால், சிறுநீரை நன்றாக வெளியேற்றும். சாப்பிட்டவுடன், நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227450
Total likes: 29057
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ நோய்கள் தீர்க்கும் காய்கள், கனிகள்! ~
«
Reply #8 on:
January 31, 2014, 11:13:15 PM »
புடலங்காய்
சத்துக்கள்: நீர்ச் சத்து நிறைந்தது. குறைந்த அளவு கலோரி, ஓரளவு இரும்புச் சத்து, நார்ச் சத்து, ஃபோலிக் ஆசிட் உள்ளன.
பலன்கள்: சர்க்கரை நோயாளி, இதய நோயாளி, ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. மூலநோய் பிரச்னை இருப்பவர்கள், பாசிப்பருப்பு சேர்த்துக் கூட்டுசெய்து சாப்பிடலாம். சிறுநீரகக்கல் இருப்பவர்கள் சாப்பிட வேண்டாம். மலச்சிக்கலைத் தவிர்க்கும்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227450
Total likes: 29057
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ நோய்கள் தீர்க்கும் காய்கள், கனிகள்! ~
«
Reply #9 on:
January 31, 2014, 11:16:30 PM »
கத்திரிக்காய்
சத்துக்கள்: ஃபோலிக் அமிலம், கொலின், நார்ச் சத்து மற்றும் தாது உப்புக்கள் மிக அதிக அளவும் கலோரி, பாஸ்பரஸ், இரும்பு மிகக்குறைந்த அளவும் உள்ளன.
பலன்கள்: உடல் இயக்கம் சீராகும். வாய்ப்புண் சரியாகும். நரம்புகளுக்கு வலுவூட்டும். சளி, இருமலைக் குறைக்கும்.
குழம்பில் போட்டும், பொரியல் செய்தும் சாப்பிடலாம். ஆஸ்துமா நோயாளிகள் கத்திரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட, உடல் சூட்டைத் தக்கவைக்கும். சிலருக்கு அலர்ஜியைத் தரலாம். சரும நோயாளிகள், புண், ரணம் உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது. அரிப்பைத் தூண்டும்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227450
Total likes: 29057
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ நோய்கள் தீர்க்கும் காய்கள், கனிகள்! ~
«
Reply #10 on:
January 31, 2014, 11:19:36 PM »
பூசணிக்காய்
சத்துக்கள்: வைட்டமின் ஏ, பி, சி, ஈ, புரதம், தாது உப்புக்கள் உள்ளன. கலோரி குறைந்த அளவு இருக்கிறது.
பலன்கள்: மூலச்சூடு நோய் உள்ளவர்களுக்கு மிகமிக நல்லது. நரம்புகளுக்கு வலுவூட்டும். வாய்ப்புண், வயிற்றுப்புண்களை ஆற்றும். உடல் எடையைக் கூட்டும். வெண்பூசணியே நல்லது. உடல் மெலிந்தவர்கள் பூசணி சாலட், தேங்காய் சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட உடல் தேறும். உடல் பருமன் உள்ளவர்களும் சாப்பிடலாம்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227450
Total likes: 29057
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ நோய்கள் தீர்க்கும் காய்கள், கனிகள்! ~
«
Reply #11 on:
January 31, 2014, 11:22:00 PM »
பரங்கிக்காய்
சத்துக்கள்: ஓரளவு பீட்டா கரோட்டின், பொட்டாசியம், மக்னீசியம், ஃபோலிக் அமிலம் இருக்கின்றன. கால்சியம், இரும்பு குறைவு. நீர்ச் சத்து, நார்ச் சத்துக்கள் ஓரளவு இருக்கின்றன.
பலன்கள்: எல்லோரும் சாப்பிடலாம். சிறிதளவு தித்திப்பு இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227450
Total likes: 29057
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ நோய்கள் தீர்க்கும் காய்கள், கனிகள்! ~
«
Reply #12 on:
January 31, 2014, 11:24:36 PM »
அவரைக்காய்
சத்துக்கள்: நிறைய நார்ச் சத்தும், ஓரளவு சுண்ணாம்புச் சத்தும், புரதமும், குறைந்த அளவு பொட்டாஷியம் மற்றும் கலோரியும் இருக்கின்றன.
பலன்கள்: மலச்சிக்கலைப் போக்கும். சர்க்கரை நோய், செரிமானப் பிரச்னை உள்ளவர்கள் கூட்டு செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். வளரும் குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வர, உடல் வளர்ச்சிக்குத் துணைபுரியும். இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227450
Total likes: 29057
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ நோய்கள் தீர்க்கும் காய்கள், கனிகள்! ~
«
Reply #13 on:
January 31, 2014, 11:27:03 PM »
பீட்ரூட்
சத்துக்கள்: குளுகோஸ், கார்போஹைட்ரேட், ஃபோலிக் ஆசிட், ரிபோஃப்ளேவின், தையமின், நியாசின், நார்ச் சத்தும் இதில் உள்ளன.
பலன்கள்: நல்ல எனர்ஜியைக் கொடுக்கும். தொடர்ந்து 45 நாட்கள் மிளகு சேர்த்து பீட்ரூட் சூப் சாப்பிட்டு வர, ரத்தசோகை விலகும். கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. வளரும் குழந்தைகள் அடிக்கடி சாப்பிடக் கொடுக்கலாம். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227450
Total likes: 29057
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ நோய்கள் தீர்க்கும் காய்கள், கனிகள்! ~
«
Reply #14 on:
January 31, 2014, 11:29:09 PM »
முட்டைக்கோஸ்
சத்துக்கள்: வைட்டமின் சி அதிகம் உள்ளன. சோடியம், இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் ஏ, இ சத்துக்கள் உள்ளன.
பலன்கள்: சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஆண்மைசக்தியை ஊக்குவிக்கும். மலச்சிக்கலைப் போக்கும். இளமையைத் தக்கவைக்கும். கண்ணுக்கு மிகவும் நல்லது. கேன்சர் வராமல் காக்கும்.
Logged
Print
Pages: [
1
]
2
3
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ நோய்கள் தீர்க்கும் காய்கள், கனிகள்! ~