Author Topic: ~ சாக்கோ சேவை ~  (Read 440 times)

Offline MysteRy

~ சாக்கோ சேவை ~
« on: January 30, 2014, 07:05:05 PM »
சாக்கோ சேவை



தேவையானவை :
ரெடிமேட் ரைஸ் சேவை - ஒரு கப், கோகோ பவுடர் - 5 டீஸ்பூன், கண்டன்ஸ்டு மில்க் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்.

செய்முறை:
ரைஸ் சேவையை வெந்நீரில் போட்டு எடுத்து வடியவிடவும். தேங்காய் துருவலை வெறும் வாணலியில் பொன் நிறமாக வறுக்கவும். கண்டன்ஸ்டு மில்க் உடன் ஏலக்காய்த்தூள், கோகோ பவுடர், வெந்த ரைஸ் சேவை சேர்த்து நன்றாக கலந்து, ஃப்ரிட்ஜில் குளிர வைக்கவும். பரிமாறும்போது வறுத்த தேங்காய் துருவல் மேலே தூவி பரிமாறவும்.