Author Topic: ~ கேரட் ரிசோல்ஸ் ~  (Read 461 times)

Offline MysteRy

~ கேரட் ரிசோல்ஸ் ~
« on: January 30, 2014, 06:23:51 PM »
கேரட் ரிசோல்ஸ்



தேவையானவை:
அரிசி சாதம் - ஒரு கப், கேரட் - 200 கிராம், வெங்காயம் - ஒன்று, குடமிளகாய் - 2, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ஆச்சி கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன், பிரெட் தூள்- கால் கப், மக்காச் சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன், மைதா - 2 டேபிள்ஸ்பூன், தண்ணீர் - 4 டேபிள் ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
அரிசி மாவு, மைதா, ஒரு டேபிள்ஸ்பூன் மக்காச்சோள மாவு ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்துக் குழைத்து வைக்கவும். சாதத்தை நன்றாகப் பிசையவும். கேரட்டை முழுதாக ஆவியில் வேக வைத்து மசித்துக் கொள்ளவும். வெங்காயம், குடமிளகாயை மிகப் பொடி யாக நறுக்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கி... வெங்காயம், குடமிளகாயை சில நிமிடங்கள் வதக்கவும். சாதத்துடன் வெங்காயம், குடமிளகாய், மசித்த கேரட், மிளகாய்த்தூள், ஒரு டேபிள்ஸ்பூன் மக்காச் சோள மாவு, ஆச்சி கரம் மசாலா தூள், பாதி பிரெட் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து, சப்பாத்தி மாவு போல பிசையவும். மீதியுள்ள பிரெட் தூளை தனியே எடுத்து வைக்கவும்.
பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டி, பிரெட் தூளில் புரட்டி, குழைத்து வைத்த மாவு கலவையில் முக்கி எடுத்து, மற்றொரு முறை பிரெட் தூளில் புரட்டி எடுக்கவும். உருண்டை களை ஒரு தட்டில் அடுக்கி ஃப்ரிட்ஜில் வைத்து, ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வெளியே எடுத்து வைக்கவும். பிறகு, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
சாதம் சாப்பிட மறுக்கும் மழலைச் செல்வங்களுக்கு அருமையான டிஷ் இது!