Author Topic: ~ 30 வகை மில்க் ரெசிபி! ~  (Read 2909 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226933
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ 30 வகை மில்க் ரெசிபி! ~
« on: January 30, 2014, 11:14:53 AM »
மில்க் காலா ஜாமூன்




தேவையானவை:
பனீர் - 125 கிராம், மைதா - மூன்றரை டேபிள்ஸ்பூன், மில்க்மெய்ட் (கண்டென்ஸ்டு மில்க்) - அரை கப், பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை, நெய் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், சர்க்கரை - ஒன்றரை கப், எண்ணெய், நெய் - தேவையான அளவு.

செய்முறை:
பனீரை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி தூளாக்கி எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் உதிர்த்த பனீர், சிறிதளவு சர்க்கரை, மைதா, பேக்கிங் பவுடர், நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். கண்டென்ஸ்டு மில்க் விட்டு கெட்டியாகப் பிசைந்து... சிறிய உருண்டைகளாக செய்யவும் (நீளவாட்டிலும் உருட்டலாம்).
சூடான எண்ணெயில் 4, 5 உருண்டைகளாக போட்டு பொரித்து எடுக்கவும். மீதமுள்ள சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிட்டு கொழகொழப்பு பதம் வந்ததும் தீயை நிறுத்தி... செய்து வைத்த உருண்டை களை போட்டு, 5 நிமிடம் ஊறிய பின் எடுத்து தட்டில் வைத்து அலங்கரிக்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226933
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை மில்க் ரெசிபி! ~
« Reply #1 on: January 30, 2014, 11:25:27 AM »
வெஜ் மில்க் சூப்




தேவையானவை:
பால் - ஒரு கப், காய்கறி துண்டுகள் (கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, முட்டைகோஸ் சேர்த்து) - முக்கால் கப், வெங்காயம் - ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்), பூண்டு - 4 பல், மைதா - 3 டீஸ்பூன், மிளகுத்தூள்- அரை டீஸ்பூன், வெண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
காய்கறி துண்டுகளுடன் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் வைத்து 2 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும். கடாயில் வெண்ணெயை உருகவிடவும். பூண்டு, நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். மைதா தூவி சூடுபட கிளறவும். இதனுடன் காய்கறி வேகவைத்த தண்ணீர் சேர்க்கவும் (வெந்த காய்கறிகளை சமையலுக்குப் பயன்படுத்தவும்). உடனே பால் விட்டு கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்ததும் இறக்கவும். உப்பு, மிளகுத்தூள் தூவிக் கலந்து பரிமாறவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226933
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை மில்க் ரெசிபி! ~
« Reply #2 on: January 30, 2014, 11:28:32 AM »
பயத்தம்பருப்பு பால் கஞ்சி




தேவையானவை:
பால் - 2 கப், பயத்தம்பருப்பு - அரை கப், பொடித்த வெல்லம் - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரி, திராட்சை - தலா ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
பயத்தம்பருப்பை வெறும் கடாயில் வறுக்கவும். வறுத்த பருப்பில் ஒரு கப் பால் விட்டுக் கலந்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும். மீதமுள்ள பாலைக் காய்ச்சி வைக்கவும்.
வெந்த பருப்புடன் பொடித்த வெல்லம், சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும், காய்ச்சிய பாலை சேர்த்து, தீயை நிறுத்திவிடவும். இதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். கடாயில் நெய் விட்டு, சூடானதும் முந்திரி - திராட்சையை வறுத்து கஞ்சியில் சேர்த்துக் கலக்கவும்.
சுவையான, மணமான இந்தக் கஞ்சி மிகவும் சத்துமிக்கது. விரதநாட்களில் இதை சாப்பிடு வார்கள்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226933
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை மில்க் ரெசிபி! ~
« Reply #3 on: January 30, 2014, 11:35:12 AM »
பால் பாயசம்




தேவையானவை:
பால் - ஒரு லிட்டர், பச்சரிசி - கால் கப், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய்ப் பால் (விருப்பப்பட்டால்) - கால் கப்.

செய்முறை:
பச்சரிசியை சுத்தம் செய்து கால் கப் பால், கால் கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் குழைய வேகவிட்டு எடுக்கவும். வெந்த சாதத்தை கரண்டியால் மசிக்கவும். மீதம் உள்ள பாலை பாத்திரத்தில் விட்டு காய்ச்சவும். பால் பொங்கி வரும்போது சர்க்கரை சேர்க்கவும். பிறகு, மசித்த சாதத்தை சேர்த்து கொதித்து வரும்போது, ஏலக்காய்த்தூள், தேங்காய்ப் பால் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226933
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை மில்க் ரெசிபி! ~
« Reply #4 on: January 30, 2014, 11:42:34 AM »
மில்க் கேசரி




தேவையானவை:
காய்ச்சிய பால் - 300 மில்லி, ரவை, சர்க்கரை - தலா ஒரு கப், நெய் - கால் கப், முந்திரித் துண்டுகள் - 10, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை:
கடாயில் சிறிதளவு நெய் விட்டு... சூடானதும் முந்திரித் துண்டுகளை வறுத்து எடுக்கவும். அதே கடாயில் ரவையை வறுத்து, பாலை விட்டுக் கிளறவும். ரவை வெந்ததும், சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து சேர்ந்தாற்போல வந்ததும், அடிபிடிக்காதவாறு நெய் விட்டுக் கிளறவும். பிறகு, வறுத்த முந்திரித் துண்டுகள், ஏலக்காய்த்துள் சேர்த்துக் கலந்து, கெட்டியாகக் கிளறி இறக்கவும்.
குறிப்பு:  விருப்பப்பட்டால், கலர் சேர்க்கலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226933
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை மில்க் ரெசிபி! ~
« Reply #5 on: January 30, 2014, 01:38:26 PM »
பனாரஸ் மில்க் டிரிங்




தேவையானவை:
பால் - 2 கப், பூசணிக்காய் துண்டுகள் (தோல் நீக்கியது)  - அரை கப், சர்க்கரை - கால் கப், விருப்பமான எசன்ஸ் - 4 சொட்டு.

செய்முறை:
பூசணிக்காய் துண்டுகளை ஆவியில் வேக வைத்து, ஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுக் கவும். பாலை காய்ச்சி, சர்க்கரையை சேர்த்துக் கலக்கவும். அத்துடன் அரைத்த விழுதையும் கலந்து ஒரு கொதி வரவிட்டு இறக்கி ஆறவிடவும். நன்கு ஆறியதும் எசன்ஸ் விட்டு கலக்கி, ஃப்ரிட்ஜில் குளிர வைத்து எடுத்து... கிளாஸில் விட்டு பருகக் கொடுக்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226933
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை மில்க் ரெசிபி! ~
« Reply #6 on: January 30, 2014, 01:40:17 PM »
ரவா  கோகனட் மில்க் பர்ஃபி




தேவையானவை:
பால் - ஒரு கப், ரவை, தேங்காய் துருவல் - தலா அரை கப், சர்க்கரை - ஒரு கப், நெய் - 4 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை:
ஒரு கடாயில் சிறிதளவு நெய் விட்டு ரவையை வறுக்கவும். வறுத்த ரவை, தேங்காய் துருவல், சர்க்கரை, பால் ஆகியவற்றைக் கலந்து அடிகனமான பாத்திரத்தில் போட்டு, அடுப்பில் வைத்துக் கிளறவும். இறுகிவரும் சமயம், அடிபிடிக்காதவாறு நெய் விட்டுக் கிளறவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). பிறகு ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். கெட்டியாக இறுகி வந்ததும் நெய் தடவிய தட்டில் பரவலாக விட்டு, மிதமான சூட்டில் இருக்கும்போது துண்டுகள் போடவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226933
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை மில்க் ரெசிபி! ~
« Reply #7 on: January 30, 2014, 01:44:59 PM »
தூத் பேடா




தேவையானவை:
பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 150 கிராம், பாதாம் - பிஸ்தா துண்டுகள், சோள மாவு -  தலா 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன். 

செய்முறை:
சோள மாவை சிறிதளவு பால் விட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் பால் விட்டுக் காய்ச்சவும். பால்  குறுகி வரும்போது (சேறு போன்ற பதம்) சோள மாவு கரைசலை சேர்க்கவும். பிறகு, தீயைக் குறைத்து... சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். சர்க்கரை கரைந்து இறுகி வரும்போது, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் விட்டு அடிபிடிக்காது கிளறவும். உருட்டும் பதம் வந்ததும் இறக்கி... பாதாம் - பிஸ்தா துண்டுகள் சேர்த்துக் கலந்து வேறு பாத்திரத்துக்கு மாற்றவும். கையில் நெய் தடவிக்கொண்டு கலவையிலிருந்து சிறிது எடுத்து விருப்பமான வடிவம் கொடுக்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226933
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை மில்க் ரெசிபி! ~
« Reply #8 on: January 30, 2014, 01:46:38 PM »
மில்க் குலோப் ஜாமூன்




தேவையானவை:
பால் - ஒரு லிட்டர், மைதா - 4 டீஸ்பூன், சர்க்கரை - 2 கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், எண் ணெய் - தேவையான அளவு, ஆப்பசோடா - ஒரு சிட்டிகை.

செய்முறை:
அடிகனமான கடாயில் பாலை விட்டு சுண்டக் காய்ச்சவும். பால் இறுகி, சர்க்கரை இல்லாத கோவா போல கிடைக்கும். ஆறியதும் இந்த கோவாவுடன் மைதா, ஆப்பசோடா, ஏலக்காய்த்தூள் கலந்து பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக செய்யவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் 4, 5, உருண்டைகளாக போட்டு, வெந்து வந்ததும் திருப்பிவிடவும். மீண்டும் பொன்னிறமாக வெந்ததும் எண்ணெயை வடித்து எடுக்கவும். ஊசியால் மெதுவாக குத்திவிடவும். இப்போது ஜாமூன் தயார்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, அதில் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்து கொழகொழப்பான பதம் வந்ததும் இறக்கி, பொரித்து வைத்துள்ள ஜாமூன்களை போட்டு, 30 நிமிடம் ஊறவிட்டால்... குலாப் ஜாமூன் ரெடி.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226933
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை மில்க் ரெசிபி! ~
« Reply #9 on: January 30, 2014, 01:48:09 PM »
டேட்ஸ் மில்க் ஷேக்




தேவையானவை:
பால் - 300 மில்லி, பேரீச்சம்பழம் (விதை நீக்கியது) - 10, சர்க் கரை - 3 டீஸ்பூன்.

செய்முறை:
பாலை நன்கு காய்ச்சி, சர்க்கரை சேர்க்கவும். நன்கு கலந்து வந்ததும் எடுத்து ஆறவிடவும். பேரீச்சம் பழத்தை மிக்ஸியில் போட்டு, சிறிதளவு பால் விட்டு அரைத்து எடுக்கவும். அரைத்த விழுதை பால் கலவையில் சேர்த்துக் கலந்தால்... டேட்ஸ் மில்க் ஷேக் தயார்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226933
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை மில்க் ரெசிபி! ~
« Reply #10 on: January 30, 2014, 01:50:13 PM »
மில்க்  பிரெட் அல்வா




தேவையானவை:
பால் - 500 மில்லி, பிரெட் - 5 ஸ்லைஸ், சர்க்கரை - 100 மில்லி, முந்திரித் துண்டுகள் (வறுத்தது) - 10, நெய் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை:
பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கிவிட்டு மிக்ஸியில் போட்டு தூளாக்கி எடுக்கவும். பாலை சுண்டக் காய்ச்சவும். பாதியாக குறுகி வந்ததும்... சர்க்கரை, பிரெட் தூள் போட்டு, நெய் விட்டு சுருள கிளறி எடுக்கவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், முந்திரி துண்டுகள் சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால், சிறிதளவு ஃபுட் கலர் சேர்க்கலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226933
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை மில்க் ரெசிபி! ~
« Reply #11 on: January 30, 2014, 01:51:51 PM »
மில்க்  ஆப்பிள் கீர்




தேவையானவை:
பால் - 2 கப், ஆப்பிள் துண்டுகள் - ஒரு கப், சர்க்கரை - கால் கப், முந்திரித் துண்டுகள் - 2 டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
ஆப்பிள் துண்டுகளை ஆவியில் வேக வைத்து எடுத்து, ஆறியதும் அரைக்கவும். பாலைக் காய்ச்சி... சர்க்கரை, அரைத்த ஆப்பிள் விழுது கலந்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். முந்திரித் துண்டு களை நெய்யில் பொன்னிற மாக வறுத்து சேர்த்து, பருகக் கொடுக்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226933
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை மில்க் ரெசிபி! ~
« Reply #12 on: January 30, 2014, 01:53:28 PM »
ஃபட்ஜ்




தேவையானவை:
பால், மில்க் பவுடர், க்ரீம், கடலை மாவு - தலா அரை கப், சர்க்கரை - ஒன்றேகால் கப், பாதாம் - பிஸ்தா துண்டுகள் - 2 டீஸ்பூன், நெய் - அரை கப்.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கடலை மாவைப் போட்டு, நெய் விட்டு கலந்து, கட்டி இல்லாது தேய்த்துப் பிசையவும். இதை 5 நிமிடம் ஊறவிடவும். பின்னர், பால் விட்டு கட்டி இல்லாது கலக்கவும். கடாயில் க்ரீம், மில்க் பவுடர் போட்டுக் கலந்து, அடுப்பை குறைவான தீயில் வைத்துக் கிளறவும். கெட்டியாக வெண்ணெய் போன்று வரும் நேரம், கடலை மாவு கலவையை சேர்த்து வாசனை வரும்வரை வறுத்து எடுத்து வைக்கவும்.  வேறு பாத்திரத்தில் சர்க்கரையை கம்பி பதத்தில் பாகு வைத்து, அதை கடலை மாவு கலவையில் விட்டுக் கிளறவும். கெட்டியானதும், நெய் தடவிய தட்டில் போட்டு, மேலே பாதாம் - பிஸ்தா துண்டுகள் தூவி லேசாக அழுத்திவிடவும். இது கதகதப்பான சூட்டில் இருக்கும்போது துண்டுகள் போட்டால்... அசத்தல் சுவையில் ஃபட்ஜ் ரெடி!

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226933
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை மில்க் ரெசிபி! ~
« Reply #13 on: January 30, 2014, 01:56:06 PM »
பரங்கிக்காய் பால் கூட்டு




தேவையானவை:
பால் - ஒரு கப், தோல் சீவிய பரங்கிக்காய் துண்டுகள் - ஒரு கப், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, பொடித்த வெல்லம் - அரை கப், நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
பரங்கிக்காயில் பால் விட்டு குக்கரில் வேக வைத்து எடுத்து மசித்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். கடாயில் நெய் விட்டு, சூடானதும் காய்ந்த மிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். இதில் பரங்கிக்காய் கலவையைப் போட்டுக் கலக்கவும். பிறகு, பொடித்த வெல்லம் போட்டு நன்கு கலக்கவும். இறுகி, கெட்டியானதும் இறக்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226933
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை மில்க் ரெசிபி! ~
« Reply #14 on: January 30, 2014, 04:47:59 PM »
பப்பாளி மில்க் கீர்




தேவையானவை:
பப்பாளிபழத் துண்டுகள் (தோல் சீவவும்) - ஒரு கப், பால் - 2 கப், சர்க்கரை - கால் கப், சீவிய முந்திரி - பாதாம் - 2 டீஸ்பூன்.

செய்முறை:
பாலை நன்கு காய்ச்சி... சர்க்கரை சேர்த்துக் கலந்து, பால் ஒரு கொதி வந்ததும் தீயை நிறுத்திவிடவும். பப்பாளி பழத்துண்டுகளை மிக்ஸியில் அரைத்து, சூடான பாலில் கலக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, பப்பாளி - பால் கலவையை சூடாக்கி, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். இதனுடன் சீவிய முந்திரி - பாதாம் சேர்க்கவும். இதை சூடாகவோ, ஆறிய பின் ஃப்ரிட்ஜில் குளிர வைத்தோ பரிமாறலாம்.